பேருவளை (Beruwala, சிங்களம்: බේරුවල), என்பது இலங்கையின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு உல்லாச நகரமாகும். இது வேர்விலை, அல்லது வேருவளை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலேயே இலங்கைத் தீவில் முதன் முதலாக கிபி 8ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வணிகர்களாக வந்திறங்கினார்கள். முஸ்லிம்கள் இப்போதும் இங்கு, குறிப்பாக "சீனக்கோட்டை" எனப்படும் இடத்தில் பெருமளவில் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் இரத்தினக்கல் வணிகர்களாவர்.

பேருவளை
බෙරුවල
நகரம் மற்றும் நகரசபை
வேர்விலை கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று
வேர்விலை கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று
நாடு இலங்கை
மாகாணம்மேற்கு மாகாணம்
மாவட்டம்களுத்துறை மாவட்டம்
நேர வலயம்+5.30

இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான "அல் அப்ரார்" என்ற பள்ளிவாசல் இங்கு அமைந்துள்ளது. இந்நகரத்தின் மலைப்பாங்கான இடத்தில் அரபுக்களால் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பள்ளியான "அல்-பசியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்" இங்கு அமைந்துள்ளது. இப்பள்ளி 2004 ஆண்டில் நிகந்த ஆழிப்பேரலையில் சேதமுற்றது.

வெளிச்சவீடு தொகு

பேருவளையில் உள்ள வெளிச்சவீடு 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 150 அடி உயரமும், மேற்பக்கம் தட்டையான கிறனைட்டுக் கற்களால் அமைக்கப்பட்டதாகும். இக்கோபுரம் தலைநகர் கொழும்பிலிருந்து தெற்கே 55 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் ஒளிச்சமிக்ஞை 20 செக்கன்களுக்கு ஒரு முறை வெள்ளை ஒளியை ஒளிருகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. ராஜீவன் (27-06-2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன் இம் மூலத்தில் இருந்து 2012-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120128074744/http://www.thinakaran.lk/vaaramanjari/2010/06/27/?fn=f1006279. பார்த்த நாள்: 29-07-2017. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேருவளை&oldid=3484294" இருந்து மீள்விக்கப்பட்டது