2014 உலகக்கோப்பை காற்பந்து

2014 உலகக்கோப்பை காற்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன.

2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo da FIFA
பிரேசில் 2014
2014 பீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்:
Juntos num só ritmo
(All in one rhythm)
(எல்லோரும் ஒரே தாளத்தில்)
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசில்
நாட்கள்12 சூன் – 13 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)12 (12 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் செருமனி (4-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் நெதர்லாந்து
நான்காம் இடம் பிரேசில்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்171 (2.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்34,29,873 (53,592/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)கொலம்பியா ஜேம்சு ரொட்ரீகசு
(6 கோல்கள்)[1]
சிறந்த ஆட்டக்காரர்அர்கெந்தீனா லியோனல் மெசி[2]
சிறந்த இளம் ஆட்டக்காரர்பிரான்சு பவுல் பொக்பா[3]
சிறந்த கோல்காப்பாளர்செருமனி மானுவல் நொயார்[4]
2010
2018

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.

சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]

1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]

போட்டி நடத்தும் நாடு தேர்வு தொகு

 
செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்

மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[8][9] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.

சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[10] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[11]

இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[12] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[13] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[14] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[15] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[16]

தகுதிநிலை தொகு

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[17] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[18][19] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[20] பிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[21] 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள் தொகு

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[22]

ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
ஓகாகூ (0)
 • தகுதி பெறவில்லை
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)

ஐகாசகூ (13)

 
  உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு
  தகுதி பெறாத நாடு
  போட்டியிடாத நாடு
  பிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம் தொகு

பனிரெண்டு இடங்கள் (ஏழு புதிய மற்றும் ஐந்து புணரமைக்கப்பட்ட இடங்கள்) பனிரெண்டு நகர்களில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இரியோ டி செனீரோ, ரிசெ பிரசிலியா, கூமா சாவோ பாவுலோ, சாபா போர்த்தலேசா, சியா
எசுடேடியோ டொ மரக்கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[23] கொரிந்தியன்சு அரங்கம் எசுடேடியோ கேஸ்தலோவ்

22°54′43.8″S 43°13′48.59″W / 22.912167°S 43.2301639°W / -22.912167; -43.2301639 (Estádio do Maracanã)

15°47′0.6″S 47°53′56.99″W / 15.783500°S 47.8991639°W / -15.783500; -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

23°32′43.91″S 46°28′24.14″W / 23.5455306°S 46.4733722°W / -23.5455306; -46.4733722 (Arena de São Paulo)

3°48′26.16″S 38°31′20.93″W / 3.8072667°S 38.5224806°W / -3.8072667; -38.5224806 (Estádio Castelão)

கொள்ளளவு: 76,935[24]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளளவு: 70,042[25]

(புதிய அரங்கு)

கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கொள்ளளவு: 64,846[26]

(புதுப்பிக்கப்பட்டது)

       
பெலோ அரிசாஞ்ச், மிஜெ போர்ட்டோ அலெக்ரி, ரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம் எசுடேடியோ பெய்ரா ரியோ

19°51′57″S 43°58′15″W / 19.86583°S 43.97083°W / -19.86583; -43.97083 (Estádio Mineirão)

30°3′56.21″S 51°14′9.91″W / 30.0656139°S 51.2360861°W / -30.0656139; -51.2360861 (Estádio Beira-Rio)

கொள்ளவு: 62,547

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 51,300[27]
(புதுப்பிக்கப்பட்டது)
 
சால்வடோர், பா ரெசிஃபி, பெ
அரீனா பொன்டே நோவா இட்டாய்பவா அரீனா

12°58′43″S 38°30′15″W / 12.97861°S 38.50417°W / -12.97861; -38.50417 (Arena Fonte Nova)

8°2′24″S 35°0′29″W / 8.04000°S 35.00806°W / -8.04000; -35.00806 (Arena Pernambuco)

கொள்ளவு: 56,000[28]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 46,154

(புதிய அரங்கு)

   
குய்யாபா, மா மனௌசு, அமா நடால், ரி குரிடிபே,
அரீனா பன்டனல் அரீனா அமசோனியா அரீனா டஸ் டுனஸ் அரீனா ட பய்க்சாடா

15°36′11″S 56°7′14″W / 15.60306°S 56.12056°W / -15.60306; -56.12056 (Arena Pantanal)

3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806 (Arena Amazônia)

5°49′44.18″S 35°12′49.91″W / 5.8289389°S 35.2138639°W / -5.8289389; -35.2138639 (Arena das Dunas)

25°26′54″S 49°16′37″W / 25.44833°S 49.27694°W / -25.44833; -49.27694 (Arena da Baixada)

கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கொள்ளவு: 43,981[29]
(புதுப்பிக்கப்பட்டது)
     

இறுதி குலுக்கல் தொகு

தொட்டி 1 (மூலம்) தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) தொட்டி 4 (ஐரோப்பா)

  பிரேசில் (நடத்தும் நாடு)
  அர்கெந்தீனா
  கொலம்பியா
  உருகுவை
  பெல்ஜியம்
  செருமனி
  எசுப்பானியா
  சுவிட்சர்லாந்து

  அல்ஜீரியா
  கமரூன்
  ஐவரி கோஸ்ட்
  கானா
  நைஜீரியா
  சிலி
  எக்குவடோர்

  ஆத்திரேலியா
  சப்பான்
  ஈரான்
  தென் கொரியா
  கோஸ்ட்டா ரிக்கா
  ஒண்டுராசு
  மெக்சிக்கோ
  ஐக்கிய அமெரிக்கா

  பொசுனியா எர்செகோவினா
  குரோவாசியா
  இங்கிலாந்து
  பிரான்சு
  கிரேக்க நாடு
  இத்தாலி (தொட்டி 2க்கு)
  நெதர்லாந்து
  போர்த்துகல்
  உருசியா

ஆட்ட நடுவர்கள் தொகு

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[30] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[31][32]

கோல்-கோடு தொழினுட்பம் தொகு

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[33] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[34] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[35] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[36]

இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.[37]

மறைகின்ற தெளிப்பு தொகு

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[38]

போட்டிகள் தொகு

குழு நிலை தொகு

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[39]

 
  வாகையாளர்
  இரண்டாமிடம்

  மூன்றாமிடம்
  நான்காமிடம்

  கால் இறுதி
  சுற்று 16

  குழு நிலை

சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:

 1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
 2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
 3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
 4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
 5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
 6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
 7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள்

குழு ஏ தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  பிரேசில் 3 2 1 0 7 2 +5 7
  மெக்சிக்கோ 3 2 1 0 4 1 +3 7
  குரோவாசியா 3 1 0 2 6 6 0 3
  கமரூன் 3 0 0 3 1 9 −8 0
பிரேசில்  3-1  குரோவாசியா
நெய்மார்   29'71' (தண்ட உதை)
ஒஸ்கார்   90+1'
அறிக்கை மாசெலோ   11' (சுய கோல்)[nb 1]
பார்வையாளர்கள்: 62,103[41]
நடுவர்: யூச்சி நிசிமுரா (ஜப்பான்)[42]

மெக்சிக்கோ  1-0  கமரூன்
பெரல்டா   61' அறிக்கை
பார்வையாளர்கள்: 39,216
நடுவர்: வில்மர் ரொல்டன் (கொலம்பியா)

பிரேசில்  0-0  மெக்சிக்கோ
அறிக்கை
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கூனெய்த் சாகிர் (துருக்கி)

கமரூன்  0-4  குரோவாசியா
அறிக்கை ஒலிக்   11'
பெரிசிக்  48'
மான்சுகிக்  61'   73'
பார்வையாளர்கள்: 39,982
நடுவர்: பெட்ரோ புரொவென்கா (போர்த்துக்கல்)

கமரூன்  1–4  பிரேசில்
மட்டிப்   26' அறிக்கை நெய்மர்   17'35'
பிரட்   49'
பெர்னாண்டினோ   84'
பார்வையாளர்கள்: 69,112
நடுவர்: ஜோன்ஸ் எரிக்சன் (சுவீடன்)

குரோவாசியா  1–3  மெக்சிக்கோ
ஐவன் பெரிசிக்   87' அறிக்கை மார்க்குயிஸ்   72'
குராடோ   75'
கெர்னாட்ஸ்   82'
பார்வையாளர்கள்: 41,212
நடுவர்: ரவ்சான் இர்மடோவ் (உஸ்பெகிஸ்தான்)

குழு பி தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  நெதர்லாந்து 3 3 0 0 10 3 +7 9
  சிலி 3 2 0 1 5 3 +2 6
  எசுப்பானியா 3 1 0 2 4 7 −3 3
  ஆத்திரேலியா 3 0 0 3 3 9 −6 0
எசுப்பானியா  1–5  நெதர்லாந்து
அலன்சோ   27' (தண்ட உதை) அறிக்கை வான் பெர்சீ   44'72'
ரொபென்   53'80'
டெ விரிச்   65'
பார்வையாளர்கள்: 48,173
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

சிலி  3-1  ஆத்திரேலியா
சான்செசு   12'
வால்தீவியா   14'
போசெசோர்   90+2'
அறிக்கை காகில்   35'
பார்வையாளர்கள்: 40,275
நடுவர்: நுமான்டியெசு டூயே (ஐவரி கோஸ்ட்)

ஆத்திரேலியா  2-3  நெதர்லாந்து
டிம் காகில்   21'
ஜெடினாக்   54' (தண்ட உதை)
அறிக்கை ரொபென்   20'
வான் பெர்சி   58'
டெப்பே   68'
பார்வையாளர்கள்: 42,877
நடுவர்: ஜமெல் ஐமூடி (அல்சீரியா)

எசுப்பானியா  0-2  சிலி
அறிக்கை வர்கஸ்   19'
அராகிஸ்   43'
பார்வையாளர்கள்: 74,101
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஆத்திரேலியா  0-3  எசுப்பானியா
அறிக்கை டேவிட் வில்லா   36'
டொரெசு   69'
மட்டா   82'
பார்வையாளர்கள்: 39,375
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

நெதர்லாந்து  2-0  சிலி
ஃபெர்   77'
மெம்பிசு   90+2'
அறிக்கை
பார்வையாளர்கள்: 62,996
நடுவர்: பக்காரி கசாமா (காம்பியா)

குழு சி தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  கொலம்பியா 3 3 0 0 9 2 +7 9
  கிரேக்க நாடு 3 1 1 1 2 4 −2 4
  ஐவரி கோஸ்ட் 3 1 0 2 4 5 −1 3
  சப்பான் 3 0 1 2 2 6 −4 1
கொலம்பியா  3–0  கிரேக்க நாடு
ஆர்மெரோ   5'
குடியெர்ஸ்   58'
ரொட்ரிகஸ்   90+3'
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,174
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)

ஐவரி கோஸ்ட்  2-1  சப்பான்
பொனி   64'
ஜெர்வீனோ   66'
அறிக்கை ஒண்டா   16'
பார்வையாளர்கள்: 40,267
நடுவர்: என்றிக் ஓசெஸ் (சிலி)

கொலம்பியா  2–1  ஐவரி கோஸ்ட்
ரொட்ரீகசு   64'
குவுன்டெரோ   70'
அறிக்கை செர்வீனோ   73'
பார்வையாளர்கள்: 68,748
நடுவர்: ஹவார்ட் வெப் (இங்கிலாந்து)

சப்பான்  0-0  கிரேக்க நாடு
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,485
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)

சப்பான்  1–4  கொலம்பியா
ஓக்கசாக்கி   45+1' அறிக்கை குட்ராடோ   17' (தண்ட உதை)
மார்டினெஸ்   55'82'
ரொட்ரிக்கஸ்   90'
பார்வையாளர்கள்: 40,340
நடுவர்: பெட்ரோ (போர்த்துக்கல்)

கிரேக்க நாடு  2–1  ஐவரி கோஸ்ட்
சமாரிஸ்   42'
சமராஸ்   90+3' (தண்ட உதை)
அறிக்கை பொனி   74'
பார்வையாளர்கள்: 59,095
நடுவர்: கரோல்ஸ் வேரா (ஈக்வடோர்)

குழு டி தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  கோஸ்ட்டா ரிக்கா 3 2 1 0 4 1 +3 7
  உருகுவை 3 2 0 1 4 4 0 6
  இத்தாலி 3 1 0 2 2 3 −1 3
  இங்கிலாந்து 3 0 1 2 2 4 −2 1
உருகுவை  1-3  கோஸ்ட்டா ரிக்கா
கவானி   24' (தண்ட உதை) அறிக்கை கேம்பெல்   54'
துவார்த்தே   57'
யுரேனா   84'
பார்வையாளர்கள்: 58,679
நடுவர்: பீலிக்சு பிரிக் (செருமனி)

இங்கிலாந்து  1-2  இத்தாலி
ஸ்டரிட்ச்   37' அறிக்கை மார்ச்சீசியோ   35'
பலொட்டெலி   50'
பார்வையாளர்கள்: 39,800
நடுவர்: பியோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

உருகுவை  2-1  இங்கிலாந்து
சுவாரெசு   39'85' அறிக்கை ரூனி   75'
பார்வையாளர்கள்: 62,575
நடுவர்: கார்லோசு கர்வாலோ (எசுப்பானியா)

இத்தாலி  0-1  கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை ரூயிசு   44'
பார்வையாளர்கள்: 40,285
நடுவர்: என்றிக்கே ஓசெசு (சிலி)

இத்தாலி  0–1  உருகுவை
அறிக்கை டிகோ கோடின்   81'
பார்வையாளர்கள்: 39,706
நடுவர்: மாகோ ரொட்ரிக்கஸ் (மெக்சிக்கோ)

கோஸ்ட்டா ரிக்கா  0–0  இங்கிலாந்து
அறிக்கை
பார்வையாளர்கள்: 57,823
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

குழு ஈ தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  பிரான்சு 3 2 1 0 8 2 +6 7
  சுவிட்சர்லாந்து 3 2 0 1 7 6 +1 6
  எக்குவடோர் 3 1 1 1 3 3 0 4
  ஒண்டுராசு 3 0 0 3 1 8 −7 0
சுவிட்சர்லாந்து  2-1  எக்குவடோர்
மெக்மெதி   48'
செஃபெரோவிச்   90+3'
அறிக்கை எ. வலென்சியா   22'
பார்வையாளர்கள்: 68,351
நடுவர்: ராவ்சன் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

பிரான்சு  3-0  ஒண்டுராசு
பென்சிமா   45' (தண்ட உதை),   72'
வலாடெரெசு   48' (சுய கோல்)
அறிக்கை
பார்வையாளர்கள்: 43,012
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

சுவிட்சர்லாந்து  2-5  பிரான்சு
ஜெமாய்லி   81'
ஹாக்கா   87'
அறிக்கை கிரூட்   17'
மத்தூடி   18'
வால்பூனா   40'
பென்சிமா   67'
சிசோக்கோ   73'
பார்வையாளர்கள்: 51,003
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

ஒண்டுராசு  1-2  எக்குவடோர்
கோஸ்ட்லி   31' அறிக்கை எ. வலேன்சியா   34'65'
பார்வையாளர்கள்: 39,224
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

ஒண்டுராசு  0-3  சுவிட்சர்லாந்து
அறிக்கை சக்கிரி   6'31'71'
பார்வையாளர்கள்: 40,322
நடுவர்: நெஸ்டர் (ஆர்ஜெந்தீனா)

எக்குவடோர்  0–0  பிரான்சு
அறிக்கை
பார்வையாளர்கள்: 73,749
நடுவர்: நெளமன்டிஸ் (ஐவரி கோஸ்ட்)

குழு எப் தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  அர்கெந்தீனா 3 3 0 0 6 3 +3 9
  நைஜீரியா 3 1 1 1 3 3 0 4
  பொசுனியா எர்செகோவினா 3 1 0 2 4 4 0 3
  ஈரான் 3 0 1 2 1 4 −3 1
அர்கெந்தீனா  2-1  பொசுனியா எர்செகோவினா
கோலசினாக்   3' (சுய கோல்)
மெஸ்ஸி   65'
அறிக்கை இபிசெவிக்   84'
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: யோயல் ஆக்குய்லர் (எல் சல்வடோர்)

ஈரான்  0 – 0  நைஜீரியா
அறிக்கை
பார்வையாளர்கள்: 39,081
நடுவர்: கார்லோசு வீரா எக்குவடோர்

அர்கெந்தீனா  1-0  ஈரான்
மெசி   90+1' அறிக்கை
பார்வையாளர்கள்: 57,698
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

நைஜீரியா  1-0  பொசுனியா எர்செகோவினா
ஓடெம்விங்கி   29' அறிக்கை
பார்வையாளர்கள்: 40,499
நடுவர்: பீட்டர் ஓ'லியரி (நியூசிலாந்து)

  நைஜீரியா2-3  அர்கெந்தீனா
மூசா   4'47' அறிக்கை மெசி   3'45+1'
ரோஜோ   50'
பார்வையாளர்கள்: 43,285
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

பொசுனியா எர்செகோவினா  3-1  ஈரான்
சேக்கோ   23'
பிஜானிச்   59'
விரிசஜேவிச்   83'
அறிக்கை கூசனெஜாத்   82'
பார்வையாளர்கள்: 48,011
நடுவர்: கார்லொசு கார்பாலோ (எசுப்பானியா)

குழு ஜி தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  செருமனி 3 2 1 0 7 2 +5 7
  ஐக்கிய அமெரிக்கா 3 1 1 1 4 4 0 4
  போர்த்துகல் 3 1 1 1 4 7 −3 4
  கானா 3 0 1 2 4 6 −2 1
செருமனி  4-0  போர்த்துகல்
முல்லர்   12' (தண்ட உதை)45+1'78'
அமெல்சு   32'
அறிக்கை
பார்வையாளர்கள்: 51,081
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

கானா  1 – 2  ஐக்கிய அமெரிக்கா
அய்யு   82' அறிக்கை டம்செ  1'
புரூக்சு  86'
பார்வையாளர்கள்: 39,760
நடுவர்: ஜோனசு எரிக்சன் சுவீடன்

செருமனி  2-2  கானா
கோட்சி   51'
குளோசி   71'
அறிக்கை ஆயெவ்   54'
கயான்   63'
பார்வையாளர்கள்: 59,621
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

ஐக்கிய அமெரிக்கா  2 – 2  போர்த்துகல்
ஜோன்சு   64'
டெம்ப்சி   81'
அறிக்கை நானி   5'
வரேலா   90+5'
பார்வையாளர்கள்: 40,123
நடுவர்: நெசுட்டர் பிட்டானா (அர்கெந்தீனா)

ஐக்கிய அமெரிக்கா  0–1  செருமனி
அறிக்கை முல்லர்   55'
பார்வையாளர்கள்: 41,876
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கிஸ்தான்)

போர்த்துகல்  2-1  கானா
போயி   31' (சுய கோல்)
ரொனால்டோ   80'
அறிக்கை கயான்   57'
பார்வையாளர்கள்: 67,540
நடுவர்: நவாப் சுக்ராலா (பகுரைன்)

குழு எச் தொகு

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
  பெல்ஜியம் 3 3 0 0 4 1 +3 9
  அல்ஜீரியா 3 1 1 1 6 5 +1 4
  உருசியா 3 0 2 1 2 3 −1 2
  தென் கொரியா 3 0 1 2 3 6 −3 1
பெல்ஜியம்  2-1  அல்ஜீரியா
ஃபெலானி   70'
மெர்டென்சு   80'
அறிக்கை ஃபெகோலி   25' (தண்ட உதை)
பார்வையாளர்கள்: 56,800
நடுவர்: மார்க்கோ ரொட்ரிகசு (மெக்சிக்கோ)

உருசியா  1-1  தென் கொரியா
கெர்சாகோவ்   74' அறிக்கை லீ கெயுன்-ஹோ   68'
பார்வையாளர்கள்: 37,603
நடுவர்: நெஸ்டோர் பிட்டானா (ஆர்ஜெண்டீனா)

பெல்ஜியம்  1-0  உருசியா
டிவோக் ஓரிகி   88' அறிக்கை
பார்வையாளர்கள்: 73,819
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)

தென் கொரியா  2-4  அல்ஜீரியா
சொன் ஹூங்-மின்   50'
கூ ஜா-சியோல்   72'
அறிக்கை சிலிமானி   26'
அலிச்சி   28'
ஜபூ   38'
பிராகிமி   62'
பார்வையாளர்கள்: 42,732
நடுவர்: வில்மார் ரொல்தான் (கொலம்பியா)

தென் கொரியா  0–1  பெல்ஜியம்
அறிக்கை வெடொங்கன்   78'
பார்வையாளர்கள்: 61,397
நடுவர்: பென் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா)

அல்ஜீரியா  1–1  உருசியா
சிலைமணி   60' அறிக்கை கொகோரின்   6'
பார்வையாளர்கள்: 39,311
நடுவர்: ககிர் (துருக்கி)

ஆட்டமிழக்கும் நிலை தொகு

16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
28 சூன் – பெலோ அரிசாஞ்ச்            
   பிரேசில் (ச.நீ.)  1 (3)
4 சூலை – போர்த்தலேசா
   சிலி  1 (2)  
   பிரேசில்  2
28 சூன் – இரியோ டி செனீரோ
     கொலம்பியா  1  
   கொலம்பியா  2
8 சூலை – பெலோ அரிசாஞ்ச்
   உருகுவை  0  
   பிரேசில்   1
30 சூன் – பிரசிலியா
     செருமனி  7  
   பிரான்சு  2
4 சூலை – இரியோ டி செனீரோ
   நைஜீரியா  0  
   பிரான்சு  0
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி
     செருமனி  1  
   செருமனி (மி.நே.)   2
13 சூலை – இரியோ டி செனீரோ
   அல்ஜீரியா   1  
   செருமனி (கூ.நே.)  1
29 சூன் – போர்த்தலேசா
     அர்கெந்தீனா  0
   நெதர்லாந்து  2
5 சூலை – சவ்வாதோர்
   மெக்சிக்கோ  1  
   நெதர்லாந்து (ச.நீ.)  0 (4)
29 சூன் – ரெசிஃபி
     கோஸ்ட்டா ரிக்கா  0 (3)  
   கோஸ்ட்டா ரிக்கா (ச.நீ.)  1 (5)
9 சூலை – சாவோ பாவுலோ
   கிரேக்க நாடு  1 (3)  
   நெதர்லாந்து  0 (2)
1 சூலை – சாவோ பாவுலோ
     அர்கெந்தீனா (ச.நீ.)  0 (4)   மூன்றாம் இடம்
   அர்கெந்தீனா (கூ.நே.)  1
5 சூலை – பிரசிலியா 12 சூலை – பிரசிலியா
   சுவிட்சர்லாந்து  0  
   அர்கெந்தீனா  1    பிரேசில்  0
1 சூலை – சவ்வாதோர்
     பெல்ஜியம்  0      நெதர்லாந்து  3
   பெல்ஜியம் (கூ.நே.)  2
   ஐக்கிய அமெரிக்கா  1  

சுற்று 16 தொகு

பிரேசில்  1–1 (கூ.நே)  சிலி
டேவிட் லுயிஸ்   18' அறிக்கை அலெக்சிஸ்   32'
ச.நீ
டேவிட் லுயிஸ்  
வில்லியன்  
மார்செலோ  
அல்க்  
நெய்மார்  
3–2   பினிலா
  சான்செசு
  அராங்குயிசு
  டயஸ்
  ஜாரா
பார்வையாளர்கள்: 57,714
நடுவர்: கோவட் வெப் (இங்கிலாந்து)

கொலம்பியா  2-0  உருகுவை
ரொட்ரீகசு   28'50' அறிக்கை
பார்வையாளர்கள்: 73,804
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

நெதர்லாந்து  2-1  மெக்சிக்கோ
சினெய்ஜர்   88'
அன்டெலார்   90+4' (தண்ட உதை)
அறிக்கை டொசு சான்டோசு   48'
பார்வையாளர்கள்: 58,817
நடுவர்: பெட்ரோ பிரோங்கோ (போர்த்துக்கல்)

கோஸ்ட்டா ரிக்கா  1-1 (கூ.நே)  கிரேக்க நாடு
ரூயிசு   52' அறிக்கை பப்பஸ்ததபவுலசு   90+1'
ச.நீ
போர்கசு  
ரூயிசு  
கொன்சாலசு  
கேம்பெல்  
உமானா  
5–3   மித்ரோகுலு
  கிற்ஸ்தோடலோபவுலசு
  ஒலிபாசு
  கேகாசு
பார்வையாளர்கள்: 41,242
நடுவர்: பென் வில்லியம்சு (ஆத்திரேலியா)

பிரான்சு  2-0  நைஜீரியா
போக்பா   79'
யோபோ   90+' (சுய கோல்)
அறிக்கை

செருமனி  2-1 (கூ.நே)  அல்ஜீரியா
சூருல்   92'
ஓசில்   120'
அறிக்கை ஜாபு   120+1'
பார்வையாளர்கள்: 43,063
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

அர்கெந்தீனா  1-0 (கூ.நே)  சுவிட்சர்லாந்து
டி மரியா   118' அறிக்கை
பார்வையாளர்கள்: 63,255
நடுவர்: ஜோனாசு எரிக்சன் (சுவீடன்)

பெல்ஜியம்  2–1 (கூ.நே)  ஐக்கிய அமெரிக்கா
கெவின்   93'
லுக்காகு   105'
அறிக்கை யூலியன் கிரீன்   107'
பார்வையாளர்கள்: 51,227
நடுவர்: கைமெளடி (அல்ஜீரியா)

கால் இறுதிகள் தொகு

பிரான்சு  0-1  செருமனி
அறிக்கை ஹமெல்சு   13'
பார்வையாளர்கள்: 74,240
நடுவர்: நெஸ்டோர் பித்தானா (அர்கெந்தீனா)

பிரேசில்  2-1  கொலம்பியா
தியேகோ சில்வா   7'
டேவிட் லூயிசு   69'
அறிக்கை ரொட்ரீகசு   80'
பார்வையாளர்கள்: 60,342
நடுவர்: கார்லோசு சர்பாலோ (எசுப்பானியா)

அர்கெந்தீனா  1–0  பெல்ஜியம்
கிகுகைன்   8' அறிக்கை
பார்வையாளர்கள்: 68,551
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

நெதர்லாந்து  0-0 (கூ.நே)  கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை
ச.நீ
வான் பெர்சீ  
ரொபென்  
சினைடர்  
குயிட்  
4–3   போர்கெசு
  ரூயிசு
  கொன்சாலெசு
  பொலானொசு
  உமானா
பார்வையாளர்கள்: 51,179
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உசுபெக்கிசுத்தான்)

அரை இறுதிகள் தொகு

பிரேசில்  1-7  செருமனி
ஒஸ்கார்   90' அறிக்கை முல்லர்   11'
குளோசே   23'
இக்ரூசு   24'26'
கெடிரா   29'
சுர்லெ   69'79'
பார்வையாளர்கள்: 58,141
நடுவர்: மார்க்கோ ரோத்ரிகசு மெக்சிக்கோ

நெதர்லாந்து  0-0 (கூ.நே)  அர்கெந்தீனா
அறிக்கை
ச.நீ
விளார்  
ரொபென்  
சினைடர்  
குயிட்  
2–4   மெசி
  கரே
  அகுவேரோ
  மாக்சி ரொட்ரீகசு
பார்வையாளர்கள்: 63,267
நடுவர்: சூனெய்த் சாக்கிர் (துருக்கி)

மூன்றாமிடப் போட்டி தொகு

பிரேசில்  0-3  நெதர்லாந்து
அறிக்கை வான் பெர்சீ   3' (தண்ட உதை)
டாலி பிளின்ட்   17'
விச்னால்டம்   90+1'
பார்வையாளர்கள்: 68,034
நடுவர்: ஜாமெல் ஐமூடி (அல்சீரியா)

இறுதி தொகு

செருமனி  1-0 (கூ.நே)  அர்கெந்தீனா
மரியோ கட்சே   113' அறிக்கை
பார்வையாளர்கள்: 74,738
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

புள்ளிவிபரம் தொகு

கோல் அடித்தவர்கள் தொகு

6 கோல்கள்
5 கோல்கள்
4 கோல்கள்
3 கோல்கள்
2 கோல்கள்
 •   அப்தெல்மௌமீன் ஜபாவு
 •   இசுலாம் சிலிமானி
 •   டிம் காகில்
 •   டேவிட் லூயிசு
 •   ஒஸ்கார்
 •   ஜாக்சன் மார்ட்டீனெசு
 •   அலெக்சி சான்செசு
 •   பிறையன் ரூயிசு
 •   மரியோ மாந்சூக்கிச்
 •   இவான் பெரிசிச்
 •   மரியோ கோட்சே
 •   மாத்சு ஹமெல்சு
 •   மிரோசிலாவ் குளோசெ
 •   டொனி குரூசு
 •   அந்திரே ஆயெவ்
 •   அசாமோவா கயான்
 •   வில்பிரீது பொனி
 •   ஜெர்வீனோ
 •   மெம்பிசு டெப்பே
 •   அகமது மூசா
 •   கிளின்ட் டெம்ப்சி
 •   சுவாரெசு
1 கோல்
 •   யாசின் பிராகிமி
 •   சோஃபியான் பெகூலி
 •   ராஃபிக் ஹலிச்சி
 •   கொன்சாலோ இகுவெயின்
 •   ஏஞ்சல் டி மரியா
 •   மார்கோசு ரொஜோ
 •   மைல் செடினாக்
 •   கெவின் டி புரூயின்
 •   ஃபெலாயினி
 •   ரொமேலு லுக்காகு
 •   மெர்ட்டென்சு
 •   திவொக் ஒரிஜி
 •   சான் வெர்த்தோங்கன்
 •   எதின் ஜேக்கோ
 •   வெதாத் இபிசேவிச்
 •   மிராலெம் பிஜானிச்
 •   ஆவ்திஜா விரிசாஜேவிச்
 •   பெர்னாந்தீனோ
 •   பிரெட்
 •   தியாகோ சில்வா
 •   ஜொவெல் மாத்திப்
 •   சார்ல்சு அராங்கிசு
 •   சீன் போசிஜூர்
 •   ஒர்சே வால்தீவியா
 •   எதுவார்தோ வார்கசு
 •   பாவ்லோ அர்மேரோ
 •   உவான் குவாட்ராடோ
 •   தியோபிலோ கிட்டேரசு
 •   உவான் குவின்டேரோ
 •   ஜோயெல் கேம்பெல்
 •   ஓஸ்கார் துவார்த்தே
 •   மார்க்கோ யுரேனா
 •   இவிகா ஓலிச்
 •   வேனே ரூனி
 •   தானியேல் ஸ்டரிட்ச்
 •   ஒலிவர் கிரூட்
 •   பிளைசு மட்டூடி
 •   பவுல் போக்பா
 •   மூசா சிசோக்கோ
 •   மெத்தியூ வாபுவேனா
 •   மெசுட் ஓசிழ்
 •   சொக்ரெட்டாரிசு பபஸ்தாதோபவுலசு
 •   'கியார்கியசு சமாரசு
 •   அந்திரியாசு சமாரிசு
 •   கார்லோ கோஸ்ட்லி
 •   ரேசா கூச்சனெஜாத்
 •   மரியோ பலோட்டெலி
 •   குளோடியோ மார்சீசியோ
 •   கெய்சூக்கி ஹொண்டா
 •   சிஞ்சி ஒகசாகி
 •   கூ ஜா-சியோல்
 •   லீ கியூன்-ஹோ
 •   சொன் ஹூங்-மின்
 •   ஜியோவானி டொசு சன்டோசு
 •   அந்திரேசு குவர்தாதோ
 •   சேவியர் எர்னான்டசு
 •   ரபாயல் மார்க்கெசு
 •   ஒரிபி பெரால்ட்டா
 •   டாலி பிளின்ட்
 •   லெரோய் ஃபெர்
 •   கிளாஸ்-சான் ஹன்டெலார்
 •   உவெசுலி சினெய்ச்டர்
 •   ஸ்தெபான் டி விரிச்
 •   ஜோர்ஜீனியோ விச்னால்டம்
 •   பீட்டர் ஓடெம்விங்கி
 •   நானி
 •   சில்வெஸ்டர் வரேலா
 •   கிறிஸ்டியானோ ரொனால்டோ
 •   அலெக்சாந்தர் கெர்சக்கோவ்
 •   அலெக்சாந்தர் கொக்கோரின்
 •   சாபி அலொன்சோ
 •   உவான் மாட்டா
 •   பெர்னாண்டோ டொரெசு
 •   டேவிட் வில்லா
 •   பிளெரிம் ஜெமாலிலி
 •   அத்மிர் மெகுமெதி
 •   ஹரிசு செஃபெரோவிச்
 •   கிரானித் ஹாக்கா
 •   ஜோன் புரூக்ஸ்
 •   ஜூலியன் கிறீன்
 •   செருமயின் ஜோன்சு
 •   எடின்சன் கவானி
 •   தியேகோ கோதின்
சுய கோல்
 •   கொலசினாக் (அர்சென்டீனாவுக்கு எதிராக)
 •   மார்செலோ (குரோவாசியாவுக்கு எதிராக)
 •   ஜோன் போய் (போர்த்துக்கலுக்கு எதிராக)
 •   நொயல் வலடாரெசு (பிரான்சுக்கு எதிராக)
 •   யோசப் யோபோ (பிரான்சுக்கு எதிராக)

மூலம்:[43]

போட்டிக்குப் பின்னரான அணி தரப்படுத்தல் தொகு

 
  வாகையாளர்
  இரண்டாமிடம்

  மூன்றாமிடம்
  நான்காமிடம்

  கால் இறுதி
  சுற்று 16

  குழு நிலை

அணி கு வி வெ தோ கோ.அ எ.கோ கோ.வி பு
இறுதி
1   செருமனி 7 6 1 0 18 4 14 19
2   அர்கெந்தீனா 7 5 1 1 8 4 4 16
3ம், 4ம் இடம்
3   நெதர்லாந்து 7 5 2 0 15 4 11 17
4   பிரேசில் 7 3 2 2 11 14 -3 11
கால் இறுதிகளில் வெளியேறியவை
5   கொலம்பியா 5 4 0 1 12 4 8 12
6   பெல்ஜியம் 5 4 0 1 6 3 3 12
7   பிரான்சு 5 3 1 1 10 3 7 9
8   கோஸ்ட்டா ரிக்கா 5 2 3 0 5 2 3 9
சுற்று 16 இல் வெளியேறியவை
9   சிலி 4 2 1 1 6 4 2 7
10   மெக்சிக்கோ 4 2 1 1 5 3 2 7
11   சுவிட்சர்லாந்து 4 2 0 2 7 7 0 6
12   உருகுவை 4 2 0 2 4 6 -2 6
13   கிரேக்க நாடு 4 1 2 1 3 5 -2 5
14   அல்ஜீரியா 4 1 1 2 7 7 0 4
15   ஐக்கிய அமெரிக்கா 4 1 1 2 5 6 -1 4
16   நைஜீரியா 4 1 1 2 3 5 -2 4
குழு நிலையில் வெளியேறியவை
17   எக்குவடோர் குழு ஈ 3 1 1 1 3 3 0 4
18   போர்த்துகல் குழு ஜி 3 1 1 1 4 7 −3 4
19   குரோவாசியா குழு ஏ 3 1 0 2 6 6 0 3
20   பொசுனியா எர்செகோவினா குழு எப் 3 1 0 2 4 4 0 3
21   ஐவரி கோஸ்ட் குழு சி 3 1 0 2 4 5 −1 3
22   இத்தாலி குழு டி 3 1 0 2 2 3 −1 3
23   எசுப்பானியா குழு பி 3 1 0 2 4 7 −3 3
24   உருசியா குழு எச் 3 0 2 1 2 3 −1 2
25   கானா குழு ஜி 3 0 1 2 4 6 −2 1
26   இங்கிலாந்து குழு டி 3 0 1 2 2 4 −2 1
27   தென் கொரியா குழு எச் 3 0 1 2 3 6 −3 1
28   ஈரான் குழு எப் 3 0 1 2 1 4 −3 1
29   சப்பான் குழு சி 3 0 1 2 2 6 −4 1
30   ஆத்திரேலியா குழு பி 3 0 0 3 3 9 −6 0
31   ஒண்டுராசு குழு ஈ 3 0 0 3 1 8 −7 0
32   கமரூன் குழு ஏ 3 0 0 3 1 9 −8 0

மூலம்: thesoccerworldcups.com[44]

பரிசுத் தொகை தொகு