நடுவர் (காற்பந்தாட்டம்)

சங்கக் காற்பந்தாட்டத்தில் நடுவர் (Referee) ஆட்டத்தின்போது காற்பந்தாட்டச் சட்டங்களைச் செயற்படுத்தும் அலுவலர் ஆவார். ஆட்டத்திற்கு தொடர்புடைய அனைத்திலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இவருக்கே உண்டு. இவர் மட்டுமே ஆட்டத்தை துவக்கவும் நிறுத்தவும் ஆட்டத்தின்போது பிழையிழைத்த வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொறுப்புள்ள கள அலுவலர் ஆவார். மேல்நிலை ஆட்டங்களில் இவருக்குத் துணையாக இரண்டு துணை நடுவர்கள் (முன்பு லைன்சுமென் அல்லது கோடாட்கள்) பணியாற்றுவர்; இவர்கள் பந்து ஆட்டத்திற்கு வெளியே செல்வது, நடுவரின் பார்வைக்குப் புலப்படாத விதிமீறல்கள் போன்ற சமயங்களில் நடுவருக்கு பரிந்துரைக்க கடமைப்பட்டவர்கள். இருப்பினும் இவர்களது முடிவுகள் இறுதியானவை அல்ல; இவர்களது முடிவை புறக்கணித்து மாற்றிட நடுவருக்கு அதிகாரம் உள்ளது. தவிர மேல்நிலை ஆட்டங்களில் நடுவருக்குத் துணையாக மூன்றாவது துணை நடுவர் (நான்காவது அலுவலர்) அணிகளின் பகுதிகளை மேற்பார்வையிடுவதுடன் நடுவருக்கு நிர்வாகப் பணிகளில் துணையாக இருப்பார்.

சங்கக் காற்பந்தாட்ட ஆட்டமொன்றில் நடுவர் மாசிமோ புசாக்கா விதிமீறிய விளையாட்டு வீரர் ஒருவருக்கு மஞ்சள் அட்டை காட்டுதல்.
நடுவர் (R) மற்றும் துணை நடுவர்களின் (AR) பாதையைக் காட்டும் மூலைவிட்டக் கட்டுப்பாட்டு முறைமையின் வரைபடம்

ஆட்ட அலுவலர்கள் மூலைவிட்டக் கட்டுப்பாட்டு முறைமையை பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் இலக்குக் கம்பங்களை ஒட்டிய பகுதிகளுக்கு கூடுதல் துணை நடுவர்களை பயன்படுத்த சோதனைகள் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இலக்குப் பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை புரிந்துகொள்ளவும் பந்து இலக்குக் கம்பங்களுக்கிடையே இலக்குக்கோட்டை தாண்டியதா என்பதை அறியவும் பயனுள்ளவர்களாக இருக்கின்றனர்.[1]

பெரும்பாலான நடுவர்கள் தொழில்முறையல்லாதவர்களாவர். இவர்களது சேவைக்காக சிறுதொகையோ அல்லது பிற செலவினங்களோ வழக்கமாக கொடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் வெகுசில நடுவர்களுக்கு அந்நாட்டு தேசிய சங்கத்தினால் ஒவ்வொரு பருவத்தின்போதும் இருப்பு உடன்பாடுடன் ஆட்டத்தொகை வழங்கப்படுகிறது.

பிஃபாவின் உறுப்பினர் சங்கங்கள் உரிமமும் பயிற்சியும் வழங்குகின்றன. ஒவ்வொரு தேசியச் சங்கமும் தனது உயர்ந்த நடுவர்களை பிஃபா பன்னாட்டு நடுவர்கள் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கின்றன. தேசிய காற்பந்துச் சங்கங்களுக்கிடையேயான ஆட்டங்களுக்கு பிஃபாவின் நடுவர்கள் தேவைப்படுகின்றனர்.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவர்_(காற்பந்தாட்டம்)&oldid=3302134" இலிருந்து மீள்விக்கப்பட்டது