அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு

அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு (Algerian Football Federation; பிரெஞ்சு மொழி: Fédération algérienne de football, அரபு மொழி: الاتحادية الجزائرية لكرة القدم‎) என்பது அல்ஜீரியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பாகும். 1958-ஆம் ஆண்டிலிருந்து அதிகாரபூர்வமற்ற போட்டிகளை, அல்ஜீரிய தேசிய கால்பந்து அணி ஆடியிருக்கிறது. எனினும், 1963-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அதிகாரபூர்வமாக அல்ஜீரியா தேசிய காற்பந்து அணி பன்னாட்டுப் போட்டியில் ஆடியது; அதாவது, அல்சீரிய விடுதலைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு.

அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தோற்றம்1962
ஃபிஃபா இணைவு1963
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு இணைவு1964
தலைவர்Mohamed Raouraoua
இணையதளம்www.faf.dz

அல்சீரியா அணி, 3 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. மேலும், ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பையையும் ஒருமுறை வென்றிருக்கிறது.

வெளியிணைப்புகள்

தொகு