அல்ஜீரிய தேசிய காற்பந்து அணி
அல்சீரியா தேசிய கால்பந்து அணி (Algeria national football team, அரபு மொழி: منتخب الجزائر لكرة القدم) பன்னாட்டு காற்பந்தாடப் போட்டிகளில் அல்சீரியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அல்சீரியாவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. இதன் தாயக விளையாட்டரங்கமாக அல்ஜியர்ஸ் நகரிலுள்ள இசுடேடு 5 சூய்யி 1962 விளங்குகிறது. இந்த அணியின் தலைமை பயிற்றுனராக வாகித் அலிகோட்சிக் உள்ளார். அல்சீரியா சனவரி 1, 1962 அன்று நிறுவப்பட்டு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் சனவரி 1, 1964 அன்று இணைந்தது.
அடைபெயர் | الأفناك (பாலைவன நரிகள்) الخُضر (பசுமையர்) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
மண்டல கூட்டமைப்பு | வட ஆபிரிக்க கால்பந்துக் கூட்டமைப்புகளின் ஒன்றியம் (வடக்கு ஆபிரிக்கா) | ||
வேறு கூட்டுகள் | அராபிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (அரபு நாடுகள்) | ||
கண்ட கூட்டமைப்பு | ஆகாகூ (ஆபிரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | வாகித் அலிகோட்சிக் | ||
அணித் தலைவர் | மத்சித் பூகெர்ரா | ||
Most caps | லக்தார் பெல்லோமி (101) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | அப்டெலஃபீத் தாசுபயூட் (35) | ||
தன்னக விளையாட்டரங்கம் | இசுடேடு 5 சூய்யி 1962 | ||
பீஃபா குறியீடு | ALG | ||
பீஃபா தரவரிசை | 27 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 19 (நவம்பர் 2012-திசம்பர் 2012) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 103 (சூன் 2008) | ||
எலோ தரவரிசை | 59 | ||
அதிகபட்ச எலோ | 16 (நவம்பர் 1967) | ||
குறைந்தபட்ச எலோ | 105 (சூலை 2008) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
தூனிசியா 1–2 தேவிமு [1] (தூனிஸ், துனீசியா; 1 சூன் 1957)[1][2] பல்கேரியா 1–2 அல்சீரியா (சோஃவியா, பல்காரியா; 6 சனவரி 1963) | |||
பெரும் வெற்றி | |||
Algeria 15–1 தெற்கு யேமன் (திரிப்பொலி, லிபியா; 17 ஆகத்து 1973) | |||
பெரும் தோல்வி | |||
கிழக்கு ஜேர்மனி 5–0 அல்சீரியா (காட்பசு, செருமனி; 21 ஏப்ரல் 1976) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1982 இல்) | ||
சிறந்த முடிவு | சுற்று 1, 1982, 1986, 2010 | ||
ஆபிரிக்க நாடுகளின் கோப்பை | |||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1968 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1990 | ||
கோடைக்கால ஒலிம்பிக்சு | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1980 இல்) | ||
சிறந்த முடிவு | கால்-இறுதி, 1980 |
அல்சீரியா நான்கு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது: 1982, 1986, 2010, மற்றும் 2014. அல்சீரியா ஆபிரிக்க நாடுகளின் கோப்பையை 1990இல் வென்றுள்ளது.
அல்சீரியாவின் வழமையான எதிராளிகளாக மொராக்கோ, துனீசியா மற்றும் எகிப்து கால்பந்து அணிகள் உள்ளன.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Courtney, Barrie (23 ஏப்ரல் 2010). "Algeria - List of International Matches". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "World Football Elo Ratings: Algeria". ELO. Archived from the original on 2010-11-22. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2010.