கேஸ்தலோவ் (சியாரா)
எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ், (Estádio Plácido Aderaldo Castelo) பரவலாக கேஸ்தலோவ் (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kasteˈlɐ̃w]) அல்லது சிகான்டெ டா போவா விஸ்ட்டா, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் போர்த்தலேசா நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. [1]
கேஸ்தலோவ் | |
---|---|
"Gigante da Boa Vista" | |
முழு பெயர் | எசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் |
இடம் | போர்த்தலேசா, சியாரா, பிரேசில் |
அமைவு | 3°48′26.16″S, 38°31′20.93″W |
திறவு | நவம்பர் 11, 1973 |
சீர்படுத்தது | 2002 - 2012 |
உரிமையாளர் | சியாரா மாநிலம் |
ஆளுனர் | சியாரா மாநிலம் |
தரை | புல் தரை |
கட்டிடக்கலைஞர் | யோசு லிபரல் டெ காசுத்த்ரோ கெகார்டு எர்னசுட்டு போர்மன் ரெஜினால்டோ மென்டசு ரேஞ்சல் மார்சிலியோ டயசு டெ லூனா இவான் டா சில்வா பிரிட்டோ |
Structural engineer | யூகோ அல்கன்தரா மோட்டா |
குத்தகை அணி(கள்) | போர்த்தலெசா விளையாட்டுக் கழகம் 2014 உலகக்கோப்பை காற்பந்து |
அமரக்கூடிய பேர் | 67,037 |
பரப்பளவு | 110 x 75 மீ |
வரலாறு
தொகுகேஸ்தலோவ் 1969 முதல் 1973 வரை கட்டப்பட்டு நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது.
இதனை சியாரா மாநில அரசு மே 2000 முதல் சீரமைக்கத் தொடங்கியது. மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த சீரமைப்புப் பணி மே 16, 2001இல் துவங்கியது.[1]
இந்த விளையாட்டரங்கத்தில் நவம்பர் 11, 1973 அன்று முதல் காற்பந்தாட்டம் சியாரா அணிக்கும் போர்த்தலேசா அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 0-0 என முடிந்தது. இவ்வரங்கத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் சியாரா அணியின் எராண்டியால் நவம்பர் 18, 1973இல் அடிக்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தை சியாரா அணி விடோரியா அணியிடம் 1-0 என வென்றது.
சீரமைக்கப்பட்ட விளையாட்டரங்கில் முதல் ஆட்டம் மார்ச்சு 23, 2002 அன்று பிரேசில் தேசிய அணிக்கும் யூகோசுலோவிய தேசிய அணிக்கும் இடையே நடைபெற்றது; இதில் பிரேசில் 1-0 என்ற கணக்கில் வென்றது.[1]
இந்த விளையாட்டரங்கத்தில் மிகக்கூடிய வருகைப்பதிவு ஆகத்து 27, 1980 அன்று பதிவானது; பிரேசில் தேசிய அணியும் உருகுவை தேசிய அணியும் மோதிய இவ்வாட்டத்தை 118,496 பேர் கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி
தொகுநாள் | நேரம் (UTC-03) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
சூன் 19, 2013 | 16:00 | பிரேசில் | 2-0 | மெக்சிக்கோ | குழு ஏ | 57,804 |
சூன் 23, 2013 | 16:00 | நைஜீரியா | 0-3 | எசுப்பானியா | குழு பி | 51,263 |
சூன் 27, 2013 | 16:00 | எசுப்பானியா | 0–0 கூ.நே.பி.(பெனால்ட்டிகள்: 7–6) | இத்தாலி | அரையிறுதி | 56,083 |
2014 உலகக்கோப்பை காற்பந்து
தொகுகேஸ்தலோவ் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவ்வரங்கம் மேம்படுத்தபட்டது. பெரிய கூரை சேர்க்கையும் 4200 இடங்கொண்ட தரையடி தானுந்து நிறுத்த வசதியும் புதிய கீழ் தளமும் இந்த புனரமைப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த புனரமைப்பிற்குப் பின்னர் 67,037 பேர் காணக்கூடியதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச்சு 31, 2011இல் இந்தப் புனரமைப்புத் திட்டத்திற்கா மூடப்பட்ட அரங்கம் அலுவல்முறையாக திசம்பர் 2012இல் திறக்கப்பட்டது.[2] 2014 உலகக்கோப்பைக்கான 12 விளையாட்டரங்களில் சீரமைப்பிற்குப் பின்னர் முதலில் தயாரான விளையாட்டரங்கம் இதுவே ஆகும்.[2]
நாள் | நேரம் (UTC-03) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
சூன் 14, 2014 | 16:00 | உருகுவை | ஆட்டம் 7 | கோஸ்ட்டா ரிக்கா | குழு டி | |
சூன் 17, 2014 | 16:00 | பிரேசில் | ஆட்டம் 17 | மெக்சிக்கோ | குழு ஏ | |
சூன் 21, 2014 | 16:00 | செருமனி | ஆட்டம் 29 | கானா | குழு ஜி | |
சூன் 24, 2014 | 17:00 | கிரேக்க நாடு | ஆட்டம் 38 | ஐவரி கோஸ்ட் | குழு சி | |
சூன் 29, 2014 | 13:00 | குழு பி முதலிடம் | ஆட்டம் 51 | குழு ஏ இரண்டாமிடம் | பதினாறுவர் சுற்று | |
சூலை 4, 2014 | 17:00 | ஆட்டம் 49 வெற்றியாளர் | ஆட்டம் 57 | ஆட்டம் 50 வெற்றியாளர் | காலிறுதி |
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Enciclopédia do Futebol Brasileiro Lance Volume 2. Rio de Janeiro: Aretê Editorial S/A. 2001. pp. 457–458. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-88651-01-7.
- ↑ 2.0 2.1 "Brazil opens first World Cup 2014 stadium". BBC News. BBC. திசம்பர் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 31, 2012.