மினெய்ரோ விளையாட்டரங்கம்
மினெய்ரோ விளையாட்டரங்கம் (Mineirão (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [minejˈɾɐ̃w])), பிரேசிலின் மினாஸ் ஜெரைசு மாநிலத் தலைநகரான பெலோ அரிசாஞ்ச் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். அதிகாரபூர்வமாக எசுடேடியோ கவர்னடொர் மகளேசு பின்டோ (Estádio Governador Magalhães Pinto) அல்லது ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம் (Governor Magalhães Pinto Stadium) என்றழைக்கப்படுகிறது. மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டரங்கம் இதுவாகும்; மரக்கானா விளையாட்டரங்கத்துக்கு அடுத்தபடியாக பிரேசிலின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். 2013-ஆம் ஆண்டின் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. மேலும், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடக்கும் விளையாட்டரங்கங்களில் இதுவும் ஒன்று; 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் கால்பந்துப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படும். 62,170 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய மினெய்ரோ விளையாட்டரங்கம் 1965-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; 2012-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.[1]
ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம் | |
---|---|
மினெய்ரோ | |
Novo mineirão aérea.jpg மே 2013 | |
முழு பெயர் | ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம் |
இடம் | பெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு, பிரேசில் |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1959 |
திறவு | செப்டம்பர் 5, 1965 |
சீர்படுத்தது | திசம்பர் 21, 2012 |
உரிமையாளர் | மினாசு அரேனா |
தரை | புல்தரை |
குத்தகை அணி(கள்) | குருசெய்ரோ 2014 உலகக்கோப்பை கால்பந்து |
அமரக்கூடிய பேர் | 62,170 |
பரப்பளவு | 105 மீ x 68 மீ |
குறிப்புதவிகள்தொகு
- ↑ "Instalação do Rio 2016™, Mineirão está pronto para voltar a receber o futebol". rio2016.com. நவம்பர் 6, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 10, 2013 அன்று பார்க்கப்பட்டது.