இராபின் வான் பெர்சீ

இராபின் வான் பெர்சீ (Robin van Persie, பிறப்பு: ஆகத்து 6, 1983) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு முன்னணியில் தாக்குபவராக விளையாடுவதோடன்றி நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்கு அணித்தலைவராகவும் விளங்குகிறார். இவர் பெயிநூர்து கழகத்தில் தமது இளமையை கழித்தவர்.[3] 2004இல் ஆர்சனல் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்த வான் பெர்சீ ஆகத்து 16, 2011இல் அக்கழக அணித்தலைவராக உயர்த்தப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே ஆர்சனலின் எதிரியாகக் கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு மாறினார்.[4][5] இவர் உலகின் தலைசிறந்த தாக்குதல் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[6][7] புகழ்பெற்ற டச்சு காற்பந்தாட்ட வீரரான மார்க்கோ வான் பாஸ்டனுடன் ஒப்பிடப்படுகிறார்.[8][9]

இராபின் வான் பெர்சீ
Robin van Persie ManUtd (cropped).jpg
2013இல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தில் வான் பெர்சீ
சுய விவரம்
முழுப்பெயர்இராபின் வான் பெர்சீ[1]
பிறந்த தேதி6 ஆகத்து 1983 (1983-08-06) (அகவை 39)[1]
பிறந்த இடம்ராட்டர்டேம், நெதர்லாந்து
உயரம்1.83 m (6 ft 0 in)[2]
ஆடும் நிலைமுன்னணி தாக்குபவர்
கழக விவரம்
தற்போதைய கழகம்மான்செஸ்டர் யுனைடெட்
எண்20
இளநிலை வாழ்வழி
1997–1999எக்செல்சியர்
1998–2001பெயிநூர்து
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2001–2004பெயிநூர்து61(15)
2004–2012ஆர்சனல்194(96)
2012–மான்செஸ்டர் யுனைடெட்59(38)
தேசிய அணி
2000நெதர்லாந்து U176(0)
2001நெதர்லாந்து U196(0)
2002–2005நெதர்லாந்து U2112(1)
2005–நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி85(45)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 09:58, 11 மே 2014 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

வான் பெர்சீ நெதர்லாந்துக்காக 17-கீழ், 19-கீழ் மற்றும் 21-கீழ் அணிகளில் பன்னாட்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார். தேசிய அணிக்காக 2005இல் உருமேனியாவுடனான ஓர் நட்பு ஆட்டத்தில் அறிமுகமானார். பின்லாந்துடனான ஆட்டத்தில் தமது முதல் பன்னாட்டு கோலை அடித்தார்; இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 4-0 என்ற கணக்கில் வென்றது. இதுவரை பெர்சீ தமது நாட்டிற்காக 83 முறை ஆடியுள்ளார்; இவற்றில் 42 கோல்கள் அடித்துள்ளார்.[10][11] வான் பெர்சீ தமது நாட்டிற்காக 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மேற்சான்றுகள்தொகு

 1. 1.0 1.1 Hugman, Barry J., தொகுப்பாசிரியர் (2005). The PFA Premier & Football League Players' Records 1946–2005. Queen Anne Press. பக். 627. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85291-665-6. 
 2. "Player Profile". premierleague.com. 2011-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. Robin van Persie AllSportsPeople.com
 4. [1] பரணிடப்பட்டது 2012-04-30 at the வந்தவழி இயந்திரம் Arsenal.com
 5. "Terms agreed for Van Persie transfer". Arsenal.com. 15 ஆகத்து 2012. Archived from the original on 2012-08-16. https://web.archive.org/web/20120816034930/http://www.arsenal.com/news/news-archive/terms-agreed-for-van-persie-transfer. 
 6. http://www.dailymail.co.uk/sport/football/article-2396953/Robin-van-Persie-best-striker-world-says-Michu.html
 7. http://www.mirror.co.uk/sport/football/news/lionel-messi-hails-robin-van-2842748
 8. Rob Draper, Mail on Sunday Chief Football Writer (6 திசம்பர் 2009). "Van Persie can take heart from Van Basten's heroics | Mail Online". Dailymail.co.uk. http://www.dailymail.co.uk/sport/football/article-1233509/Van-Persie-heart-Van-Bastens-heroics.html. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2011. 
 9. "'Van Persie's cast in Van Basten's mould' | News Archive | News". Arsenal.com. 20 அக்டோபர் 2009. 2010-01-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 அக்டோபர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
 10. FIFA Player Statistics: Robin VAN PERSIE பரணிடப்பட்டது 2013-10-13 at the வந்தவழி இயந்திரம் FIFA.com
 11. Robin Van Persie Football Profile Yahoo! Eurosport UK
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபின்_வான்_பெர்சீ&oldid=3544108" இருந்து மீள்விக்கப்பட்டது