டச்சு அரச கால்பந்துச் சங்கம்

நெதர்லாந்து கால்பந்து சங்கத்தின் ஆட்சி குழு

டச்சு அரச கால்பந்துச் சங்கம் (The Royal Dutch Football Association டச்சு: Koninklijke Nederlandse Voetbalbond [டச்சு ஒலிப்பு: [ˈkoː.nɪŋk.lə.kə ˈneː.dər.ˌlɑnt.sə ˈvud.bɑɫ.ˌbɔnt]], அல்லது KNVB [ˌkaːʔ.ɛn.veː.ˈbeː]) ) என்பது நெதர்லாந்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும். இதுவே அந்நாட்டின் முதல்நிலைக் கூட்டிணைவு (எரெடிவிசி), இரண்டாம் நிலைக் கூட்டிணைவு, டச்சு அரச கால்பந்துச் சங்கக் கோப்பை (KNVB Cup) மற்றும் பல தொழில்முறைசாரா-விழைஞர் கால்பந்துக் கூட்டிணைவுகளையும் நடத்துகிறது. மேலும், முக்கியமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து, நிர்வகிக்கிறது. இதனருகில் இருக்கும் நாடான பெல்ஜியத்தின் கால்பந்துச் சங்கமான, பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கத்தோடு இணைந்து, இருநாடுகளுக்கும் பொதுவான மகளிருக்கான கால்பந்துக் கூட்டிணைவை (பெநெ கூட்டிணைவு - BeNe League) நடத்துகின்றது. இதன் தலைமையகம் நெதர்லாந்தின் செய்ஸ்ட் நகரில் அமைந்துள்ளது.

டச்சு அரச கால்பந்துச் சங்கம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
Association crest
தோற்றம்1889
ஃபிஃபா இணைவு1904
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் இணைவு1954
தலைவர்மைக்கேல் வான் பிராக் (2008–)

திசம்பர் 8, 1889 அன்று கேஎன்விபி தொடங்கப்பட்டது; 1904-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராக இணைந்தது. இந்தக் கால்பந்துச் சங்கம் தொடங்கப்படுவதற்கு பத்து-ஆண்டுகளுக்கு முன்னரே நெதர்லாந்து கால்பந்துக் கூட்டிணைவு வாகைத்தொடர் செயல்பட்டு வந்தது.

வெளியிணைப்புகள் தொகு