போர்ட்டோ அலெக்ரி

போர்ட்டோ அலெக்ரி (Porto Alegre, உள்ளூர் போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈpoɾtʊ aˈlɛɡɾɪ]  ( கேட்க);[1] பொருள்:மகிழ்ச்சியான துறைமுகம்) பிரேசில்|பிரேசிலின் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1,509,939 மக்கள்தொகை (2010) கொண்ட இந்த நகரம் பிரேசிலின் பத்தாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக விளங்குகிறது. 4,405,760 மக்கள் வாழும் (2010) பெருநகரப்பகுதி நாட்டின் நான்காவது பெரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள மாநிலத் தலைநகரமாகவும் உள்ளது.[2] இந்த நகரம் பிரேசிலின் முதன்மையான அரசியல், பண்பாட்டு, பொருளியல் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

போர்ட்டோ அலெக்ரி
O Município do Porto Alegre
போர்ட்டோ அலெக்ரி நகராட்சி
இடது மேலிருந்து: உசினா டொ காசோமெட்ரோ; இலக்கடொர் சிலை (நகரத்தின் குறியீடு); துறைமுகத்தின் அகல்பரப்புக் காட்சி; பொதுச் சந்தை; போத்துக்கீசர் நினைவகத்துடன் இரியோ கிராண்டு டொ சுல் மாநில நிர்வாக மையம்.
இடது மேலிருந்து: உசினா டொ காசோமெட்ரோ; இலக்கடொர் சிலை (நகரத்தின் குறியீடு); துறைமுகத்தின் அகல்பரப்புக் காட்சி; பொதுச் சந்தை; போத்துக்கீசர் நினைவகத்துடன் இரியோ கிராண்டு டொ சுல் மாநில நிர்வாக மையம்.
போர்ட்டோ அலெக்ரி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் போர்ட்டோ அலெக்ரி
சின்னம்
குறிக்கோளுரை: விசுவாசமும் வல்லமையும் உள்ள போர்ட்டோ அலெக்ரி நகரம்
Location of போர்ட்டோ அலெக்ரி
நாடு பிரேசில்
மாநிலம்இரியோ கிராண்டு டொ சுல்
மெசோ வட்டாரம்போர்ட்டோ அலெக்ரி பெருநகரப் பகுதி
மைக்ரோ வட்டாரம்போர்ட்டோ அலெக்ரி
நிறுவப்பட்டது26 மார்ச்சு 1772
அரசு
 • மேயர்ஓசே போர்ச்சுனாட்டி (சனநாயக தொழிலாளர் கட்சி)
பரப்பளவு
 • நகரம்496.827 km2 (191.826 sq mi)
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2010)
 • நகரம்15,09,939 (10வது பெரிய நகரம்)
 • அடர்த்தி394/km2 (1,020/sq mi)
 • பெருநகர்
44,05,769 (4வது பெரிய நகரம்)
இனம்Porto-alegrenses
நேர வலயம்ஒசநே-3 (UTC-3)
 • கோடை (பசேநே)ஒசநே-2 (UTC-2)
அஞ்சல் குறியீடு
90000-000
இடக் குறியீடு+55 51
இணையதளம்போர்ட்டோ அலெக்ரி, இரியோ கிராண்டு டொ சுல்

போர்ட்டோ அலெக்ரி 1772இல் போர்த்துகல்லின் அசோர் பகுதியிலிருந்து குடிபுகுந்தவர்களால் நிறுவப்பட்டது. 19வது நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக செருமனி, இத்தாலி,போலந்து நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர். இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பாலோர் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இரியோ குயைபா எனப்படும் குயைபா ஏரியின் கிழக்குக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்கு ஐந்து ஆறுகள் சேர்ந்து உருவாகியுள்ள லகோவா தோசு பதோசு (வாத்துக்களின் கடற்காயல்) என்ற மிகப்பெரும் தூயநீர் கடற்காயலில் பெரும் கப்பல்கள் கூட செல்ல முடியும்.

உள்ளூர் பொருட்கள் போக்குவரத்திற்கு இந்த நகரத்தின் துறைமுகம் முக்கியமானதாக உள்ளது. பொருளியலில் தொழில்துறை மற்றும் வேளாண்மை முதலிடம் பெறுகின்றன. பிளம் பழங்கள், பீச் பழங்கள், நெல் மற்றும் மரவள்ளி ஊரகப் பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. காலணி மற்றும் தோல்சரக்கு நுட்பியல் தொழிலகங்கள் முதன்மையாக உள்ளன.

குயைபா ஏரியின் நீண்ட கடற்கரையும் அதனை அடுத்துள்ள 40 குன்றுகளும் போர்ட்டோ அலெக்ரி நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன. பரந்த நீர்ப்பரப்புடைய ஏரியில் உள்ள பல தீவுகள் காட்டுயிர் உய்வகமாக தனிப்பட்ட சூழலை உருவாக்கியுள்ளன. நகரப் பகுதியில் 28% பரப்பளவில் 9,288 இனங்கள் உள்ள இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அத்திலாந்திக்கு காடுகள் அமைந்துள்ளன.[3] தீவுகளிலும் குன்றுகளிலும் பல்வேறு விலங்கு வளங்களையும் காணலாம். இந்நகர அமைப்பில் பல பூங்காக்கள், சதுக்கங்கள், நிழற்சாலைகள் அடங்கியுள்ளன.

அண்மைக் காலத்தில் போர்ட்டோ அலெக்ரி பல அரசு-சார்பற்ற அமைப்புகளின் முனைப்பான உலக சமூக மன்றத்தை நடத்தி உள்ளது. மக்களே வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தீர்மானிக்கும் பங்கேற்பு வரவுச்செலவுத் திட்டம் என்ற முறைமையை முதலில் செயலாக்கியதற்காக புகழ் பெற்றது.[4] 2006இல் இங்கு உலகத் தேவலாயங்களின் சபையின் (World Council of Churches) 9வது அமர்வு நடந்துள்ளது. 2000ஆம் ஆண்டிலிருந்து, போர்ட்டோ அலெக்ரி பன்னாட்டு கட்டற்ற மென்பொருள் மன்றம் என்ற உலகின் பெரும் கட்டற்ற மென்பொருள் நிகழ்வை நடத்தி வருகிறது.

2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாடப்படும் நகரங்களில் ஒன்றாக போர்ட்டோ அலெக்ரி உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. இரியோ டி செனீரோ போன்ற மற்ற பிரேசிலிய வட்டாரமொழிகளில் [ˈpoʁtu aˈlɛɡɾi] என்றும் பேச்சுவழக்கில் [ˈpoʁtwɐˈlɛɡɾi] அல்லது [ˈpoʁtaˈlɛɡɾi] என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஐரோப்பிய போர்த்துக்கேயத்தில் [ˈpoɾtu ɐˈlɛɣɾ(ɨ)] எனப்படும்.
  2. "Location of Porto Alegre". Iguide.travel. பார்க்கப்பட்ட நாள் 2010-10-21.
  3. "Vegetation in the city". Scielo.br. 1990-01-06. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1590/S0103-84782001000500020. பார்க்கப்பட்ட நாள் 2010-10-21.
  4. Eva-Maria Verfürth (February 2013). "More generous than you might think". dandc.eu.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்டோ_அலெக்ரி&oldid=3524266" இலிருந்து மீள்விக்கப்பட்டது