முதன்மை பட்டியைத் திறக்கவும்

பில்போர்ட் (Billboard) இசைத்துறையில் மட்டுமே பற்றுடைய ஓர் அமெரிக்க வார இதழ். உலகில் ஒரு தொழிலுக்காக சிறப்பாக வெளியிடப்படும் பழமையான இதழ்களில் ஒன்று என்ற பெருமையும் கொண்டது. இது பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கோவை தரவுகளை பதிந்து வருகிறது. மிகவும் பரவலாக விரும்பப்படும் பாடல்களையும் இசைக்கோவைகளையும் வார அளவில் இற்றைப்படுத்தி வருகிறது. இவ்விதழ் வெளியிடும் புகழ்பெற்ற இரு அட்டவணைகளாக, இசைவகைகளாகப் பிரிக்காது அனைத்து வகைகளையும் உள்ளடக்கி அனைத்து ஊடகங்களிலும் விற்பனையளவில் மிக உயர்ந்த 100 பாடல்கள் அடங்கிய பில்போர்டு ஹாட் 100 மற்றும் இசைக்கோவைகளில் மட்டும் அவ்வாறு சாதனை படைத்த பில்போர்ட் 200, உள்ளன.

பில்போர்ட்
பில்போர்ட் சின்னம்
இடைவெளிவாரந்தரி
நுகர்வளவு16,327
முதல் வெளியீடு1894
நிறுவனம்பிரோமிதெயசு குளோபல் மீடியா
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.billboard.com
ISSN0006-2510

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்போர்ட்_(இதழ்)&oldid=1359842" இருந்து மீள்விக்கப்பட்டது