ஒஸ்கார் (காற்பந்தாட்ட வீரர்)

பிரேசிலைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்

ஒஸ்கார் டோசு சான்டோசு எம்போபா ஜூனியர் (Oscar dos Santos Emboaba Júnior, தமிழக வழக்கு:ஆசுக்கார் டோசு சான்டோசு எம்போபா ஜூனியர், பிறப்பு 9 செப்டம்பர் 1991), பரவலாக ஒஸ்கார், பிரேசிலைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் ஆகும். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகம் செல்சீக்காகவும் பிரேசிலின் தேசிய அணிக்காகவும் நடுக்கள விளையாட்டாளராகவும் முன்னணி விளையாட்டாளராகவும் ஆடி வருகின்றார்.

ஒஸ்கார்

2012இல் செல்சீக்காக ஒஸ்கார் விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ஒஸ்கார் டோசு சான்டோசு
எம்போபா ஜூனியர்[1]
பிறந்த நாள்9 செப்டம்பர் 1991 (1991-09-09) (அகவை 32)
பிறந்த இடம்அமெரிக்கானா, சாவோ பாவுலோ, பிரேசில்
உயரம்1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[2]
ஆடும் நிலை(கள்)தாக்குகின்ற நடுக்கள விளையாட்டாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
செல்சீ
எண்11
இளநிலை வாழ்வழி
1998–2004யூனியோ பார்பரென்செ
2004–2009சாவோ பாவுலோ காற்பந்துக் கழகம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2008–2010சாவோ பாவுலோ11(0)
2010–2012இன்டர்னேசியோனல்36(11)
2012–செல்சீ67(12)
பன்னாட்டு வாழ்வழி
2009–2011பிரேசில் U2025(6)
2012பிரேசில் U236(1)
2011–பிரேசில்32(10)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 11 மே 2014 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 12 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

ஓஸ்கார் தனது விளையாட்டு வாழ்வை சாவோ பாவுலோ காற்பந்துக் கழகத்தில் தொடங்கினார். 2008ஆம் ஆண்டில் இக்கழகம் பிரேசிலிய சீரீ ஏ கோப்பை வெல்ல துணை நின்றார். தமது ஒப்பந்தத்தில் இருந்த முறைகேடுகளுக்காக இக்கழகத்திற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்த சில சர்ச்சைகளுக்குப் பிறகு இசுபோர்ட்சு கிளப் இன்டர்னேனியோனலில் சேர்ந்தார். இக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினார். இவரது ஆட்டத்திறமையைக் கண்டு 2012இல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்துக் கழகம் செல்சீ இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஓஸ்கார் பிரேசிலின் சார்பாக 20 அகவையினருக்கு கீழான அணியிலும் 2012 ஒலிம்பிக்கிலும் தேசிய அணியிலும் விளையாடி உள்ளார். 20 அகவைக்கு கீழானவர்களுக்கான உலகக்கோப்பையில் ஆகத்து 20, 2011 அன்று போர்த்துகல்லிற்கு எதிரான இறுதியாட்டத்தில் மூன்று கோல்கள் அடித்து பிரேசிலுக்கு வெற்றி வாங்கித் தந்தார்.[3] இத்தகையோருக்கான உலகக்கோப்பையில் மூன்று கோல்கள் (ஹாட்றிக்) இட்ட முதல் விளையாட்டாளராக சாதனை படைத்தார்.[4][5] தமது தேசிய அணியில் முதன்முதலாக அர்கெந்தீனாவிற்கு எதிராக ஆடினார்; 4-3 என்ற கணக்கில் தோற்ற இந்த ஆட்டத்தில் பிரேசிலின் முதல் கோலை இவர் அடித்தார். இவரது விளையாட்டுப் பாணியும் திறனும் பிரேசிலின் புகழ்பெற்ற நடுக்கள வீரர் காகாவை ஒத்திருப்பதாகக் கருதுகின்றனர்.[6][7][8]

மேற்சான்றுகள் தொகு

  1. "Barclays Premier League Squad Numbers 2013/14". Premier League. 16 ஆகத்து 2013 இம் மூலத்தில் இருந்து 2013-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130821225359/http://www.premierleague.com/en-gb/news/news/2013-14/aug/premier-league-squad-numbers-seasons-2013-14.html. பார்த்த நாள்: 17 ஆகத்து 2013. 
  2. "Player Profile: Oscar". Premier League இம் மூலத்தில் இருந்து 2013-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224043001/http://www.premierleague.com/en-gb/players/profile.overview.html/oscar. பார்த்த நாள்: 24 திசம்பர் 2013. 
  3. "Oscar treble wins thrilling final for Brazil". FIFA. 21 ஆகத்து 2011. Archived from the original on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Cometh the hour, cometh the Oscar". FIFA. 21 ஆகத்து 2011. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Oscar extols Colombia springboard". FIFA. 20 ஆகத்து 2012. Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Chelsea target Oscar is living up to Kaka comparisons". Goal.com. 12 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Malyon, Ed (25 சூலை 2012). "Chelsea and Tottenham target Oscar: What fans can expect from the new Kaka by South American football expert Ed Malyon". Daily Mirror. http://www.mirror.co.uk/sport/football/news/chelsea-and-tottenham-target-oscar-what-1139500. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2012. 
  8. "Chelsea's Oscar – 'the new Kaka'?". Hereisthecity.com. 20 செப்டம்பர் 2012. Archived from the original on 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒஸ்கார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.