காகா (காற்பந்தாட்ட வீரர்)
பிரேசில் காற்பந்தாட்ட வீரர்
காகா (Kaká) என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (Ricardo Izecson dos Santos Leite; பிறப்பு: ஏப்ரல் 22, 1982), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் ரியல் மாட்ரிட் [1] மற்றும் பிரேசில் அணிகளுக்கு விளையாடி உள்ளார். எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.
Personal information | |||
---|---|---|---|
Full name | ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே | ||
Date of birth | ஏப்ரல் 22, 1982 | ||
Place of birth | பிரேசிலியா, பிரேசில் | ||
Height | 1.86 m (6 அடி 1 அங்) | ||
Playing position | Attacking midfielder | ||
Club information | |||
Current club | ரியல் மாட்ரிட் | ||
Number | 8 | ||
Youth career | |||
1994–2000 | சாவோ பாவுலோ | ||
Senior career* | |||
Years | Team | Apps† | (Gls)† |
2001–2003 | சாவோ பாவுலோ | 59 | (23) |
2003–2009 | மிலன் | 193 | (70) |
2009– | ரியல் மாட்ரிட் | 10 | (3) |
National team | |||
2002– | பிரேசில் | 73 | (26) |
* Senior club appearances and goals counted for the domestic league only. † Appearances (Goals). |