இங்கிலீஷ் பிரீமியர் லீக்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் (Premier League) இங்கிலாந்தில் உள்ள ஒரு கால்பந்தாட்டத் தொடர் போட்டியாகும். இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன.[1][2][3]

பிரீமியர் லீக் (முதன்மை கூட்டிணைவு)
நாடுகள் இங்கிலாந்து
 வேல்சு
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து
சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்20 February 1992
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்Football League Championship
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
எஃப் ஏ கோப்பை
கூட்டிணைவு
கோப்பை(கள்)
கூட்டிணைவுக் கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
லெஸ்டர் சிட்டி
(2015-16-ஆம் பருவ பிரீமியர் லீக்,
முதல்முறை வாகையர்)
அதிகமுறை
வாகைசூடியோர்
மான்செஸ்டர் யுனைடெட்
(13 பட்டங்கள்)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
Sky Sports
ESPN
BBC Sport (Highlights only)
இணையதளம்Premierleague.com
2016-17 பிரீமியர் லீக்

1992-ல் பிரீமியர் லீகின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 47 கால்பந்து கழகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. அவற்றுள் ஆறு கழகங்களே வாகையர் பட்டம் வென்றுள்ளன: மான்செஸ்டர் யுனைடெட்(13), செல்சீ(4), ஆர்சனல்(3),மான்செஸ்டர் சிட்டி(2), பிளாக்பர்ன் ரோவர்ஸ்(1) மற்றும் லெஸ்டர் சிட்டி(1) . 2015-16 பருவத்தில் வென்று நடப்பு வாகையராக உள்ளோர் - லெஸ்டர் சிட்டி ஆவர்.

வரலாறு

தொகு

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால்பந்தாட்ட லீகிலிருந்து பிரிந்து 22 அணிகளுடன் உருவாக்கப்பட்டது. இது உருவாகும் முன் இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட தொடர்களுள் முதன்மையானதாக இருந்தது. 1990 களின் தொடக்கத்தில் கால்பந்தாட்டத்தின் புகழ் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்தது. கால்பந்தினால் வரும் வருவாயும் பெருகிக் கொண்டே சென்றது. இவற்றுள் முதல் பிரிவு அணிகளே பெரும் பங்கு புகழும் வருவாயும் உடையதாக இருந்தன. எனவே அவற்றை மட்டும் பிரித்து புதிதாக ஒரு தொடரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆர்சனல், ஆஸ்டன் வில்லா, ப்ளாக்பர்ன் ரோவர்ஸ், செல்சீ, கோவன்ட்ரி சிட்டி, கிரிஸ்டல் பாலஸ், எவர்டன், இப்ஸ்விக் டவுன், லீட்ஸ் யுனைடட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடட், மிடில்ஸ்போரோ, நார்விக் சிட்டி, நாட்டிங்காம் ஃபாரஸ்ட், ஓல்தாம் அதலடிக், குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ், ஷெஃபீல்ட் யுனைடட், ஷெஃபீல்ட் வெனஸ்டே, செளதாம்டன், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், மற்றும் விம்பிள்டன் ஆகிய 22 அணிகள் 1992-93 இல் நடைபெற்ற ப்ரீமியர் லீகின் முதல் பருவத்தில் பங்கேற்றன. 1995 இல் அணிகளின் எண்ணிக்கை இருபதாக குறைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, இந்தத் தொடரில் பதினேழு பருவங்கள் முடிவடைந்துள்ளன.

நிறுவனம்

தொகு
 
ப்ரீமியர் லீகின் சின்னம்

இந்த லீக் ஒரு லிமிடட் நிறுவனமாக செயல்படுகிறது. இதில் பங்கேற்கும் இருபது அணிகளும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்கள். இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக், ப்ரீமியர் லீகின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதில்லை, எனினும் அதன் முடிவுகளில் தலையிட தடுப்பாணை (veto) உரிமை பெற்றுள்ளது. ப்ரீமியர் லீகே உலகில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட தொடர்களில் மிகவும் பணக்காரத் தொடராகும். 2006-07 நிதியாணடில் இதன் மொத்த வருவாய் சுமார் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பங்குபெறும் இருபது அணிகளில் பதினோரு அணிகள் லாபத்தில் இயங்கின. உலகில் உள்ள அனைத்து விளையாட்டு தொடர்களுள் வருவாயின் அடிப்படையில் ப்ரீமியர் லீக் நான்காவது பெரிய தொடராகும்.

வடிவமும் விதிமுறைகளும்

தொகு
 
லீக் கோப்பை

ப்ரீமியன் லீகில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் புதிய பருவம் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை போட்டிகள் நடை பெறுகின்றன். ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதுகின்றது – ஒரு முறை சொந்த ஊரிலும், இன்னொரு முறை எதிரணியின் ஊரிலும். மொத்தம் 380 போட்டிகள் நடக்கின்றன. வெற்றிபெறும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஆட்டம் சம நிலையில் (draw) முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. தோற்கும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. பருவத்தின் இறுதியில் அதிகமான புள்ளிகள் பெற்றுள்ள அணி அவ்வாண்டின் தொடர் சாம்பியனாக அறிவிக்கப்படுகிறது. தர வரிசையில் கடைசியாக வரும் மூன்று அணிகள் அடுத்த பருவத்தில் இரண்டாம் தர இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக்கிற்கு தள்ளப்படுகின்றன. அவற்றுக்கு பதில் இங்கிலாந்து கால்பந்தாட்ட லீகின் தர வரிசையில் உள்ள முதல் மூன்று அணிகள் ப்ரீமியர் லீகில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த லீகின் அணிகள் எந்த நாட்டு விளையாட்டு வீரர்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். சம்பளம், வீரர்களின் வயது, எண்ணிக்கை என எதற்கும் உச்ச வரம்பு கிடையாது. மற்ற லீக் தொடர்களுடன் ஒப்பிடும் போது ப்ரீமியர் லீக் வீரர்களின் சம்பளம் மிக அதிகமாக உள்ளது. 2003-04 ஆம் பருவத்தில் ப்ரீமியர் லீக் வீரரின் சராசரி ஆண்டு வருமானம் 6,76,000 பிரிடிஷ் பவுண்டுகள்.

வெற்றிபெற்ற அணிகள்

தொகு
 
2006 இல் ஆர்சனல், மிடில்ஸ்போரோ அணிகள் மோதுகின்றன

இதுவரை முடிந்த பருவங்களில் வென்ற அணிகள் பின்வருமாறு

பருவம் வென்ற அணி
1992-93 மான்செஸ்டர் யுனைடட்
1993-94 மான்செஸ்டர் யுனைடட்
1994-95 ப்ளாக்பர்ன் ரோவர்ஸ்
1995-96 மான்செஸ்டர் யுனைடட்
1996-97 மான்செஸ்டர் யுனைடட்
1997-98 ஆர்சனல்
1998-99 மான்செஸ்டர் யுனைடட்
1999-2000 மான்செஸ்டர் யுனைடட்
2000-01 மான்செஸ்டர் யுனைடட்
2001-02 ஆர்சனல்
2002-03 மான்செஸ்டர் யுனைடட்
2003-04 ஆர்சனல்
2004-05 செல்சீ
2005-06 செல்சீ
2006-07 மான்செஸ்டர் யுனைடட்
2007-08 மான்செஸ்டர் யுனைடட்
2008-09 மான்செஸ்டர் யுனைடட்
2009-10 செல்சீ
2010-11 மான்செஸ்டர் யுனைடட்
2011-12 மான்செஸ்டர் சிட்டி
2012-13 மான்செஸ்டர் யுனைடட்
2013-14 மான்செஸ்டர் சிட்டி
2014-15 செல்சீ
2015-16 லெஸ்டர் சிட்டி

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
FA Premier League
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு
  1. "When will goal-line technology be introduced?". Archived from the original on 9 July 2013. The total number of matches can be calculated using the formula n*(n-1) where n is the total number of teams.
  2. "Why is there a Saturday football blackout in the UK for live streams & TV broadcasts?". Goal. Archived from the original on 2 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  3. "United (versus Liverpool) Nations". The Observer. 6 January 2002 இம் மூலத்தில் இருந்து 1 October 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061001220933/http://observer.guardian.co.uk/osm/story/0,,626773,00.html.