பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்
பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் (Blackburn Rovers F.C.) என்பது இங்கிலாந்தின் "பிளாக்பர்ன்", லங்காஷைர், நகரில் அமைந்துள்ள தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் 1875-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2011-12-ஆம் பருவத்தில் பிரீமியர் லீக்கிலிருந்து தரக்குறைப்பு செய்யப்பட்ட பிறகு, இங்கிலாந்தின் இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான "சாம்பியன்ஷிப்"பில் ஆடிவருகிறது.
முழுப்பெயர் | பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் |
---|---|
அடைபெயர்(கள்) | Rovers The Blue and Whites The Riversiders[1] |
தோற்றம் | 1875 |
ஆட்டக்களம் | எவுட் பார்க், பிளாக்பர்ன், லங்காஷைர் |
கொள்ளளவு | 31,367 |
உரிமையாளர் | Venky's London Ltd. (99.9%) |
Director | Mike Cheston |
மேலாளர் | ஓவன் காய்ல் (Owen Coyle) |
கூட்டமைப்பு | Football League Championship |
2015–16 Football League Championship | சாம்பியன்ஷிப், 15-ஆம் இடம் |
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் |
1888-இல் இங்கிலாந்து கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன-உறுப்பினராகவிருந்தது; மேலும், இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும் நிறுவன-உறுப்பினராகவிருந்த மூன்று கால்பந்துக் கழகங்களுள் இதுவும் ஒன்றாகும்; மற்ற இரண்டு கழகங்கள் - அஸ்டன் வில்லா மற்றும் எவர்டன்.
பிளாக்பர்ன் நகரில் அமைந்திருக்கும் "எவுட் பார்க்" மைதானத்தில் 1890-ஆம் ஆண்டிலிருந்து தமது அமைவிடப் போட்டிகளை ஆடிவருகிறது. இக்கழகம் 3 கூட்டிணைவுத் தொடர் வாகைப் பட்டங்களையும் (இரண்டு முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் வாகையர் மற்றும் ஒரு பிரீமியர் லீக் வாகையர் பட்டம்), 6 எஃப் ஏ கோப்பைகளையும், 1 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையையும் வென்றுள்ளது.[2] மேலும், எஃப் ஏ கோப்பையை மூன்று முறை தொடர்ச்சியாக வென்ற ஒரே கால்பந்துக் கழகம் பிளாக்பர்ன் ரோவர்சே ஆகும்.
பிரீமியர் லீக் வாகைப் பட்டம் சூடிய ஆறு கால்பந்துக் கழகங்களுள் பிளாக்பர்ன் ரோவர்சும் ஒன்றாகும். மற்றையவை: மான்செஸ்டர் யுனைடெட் (13), செல்சீ (4), ஆர்சனல் (3), மான்செஸ்டர் சிட்டி (2) மற்றும் லெஸ்டர் சிட்டி (1).
உசாத்துணைகள்
தொகு- ↑ "Nicknames". Club Nicknames. The-Football-Club.com. 2 August 2009. Archived from the original on 7 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 August 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Top 10 most successful English football clubs revealed: Liverpool, Man United and more!". talkSPORT. 8 October 2014.