அர்ஜென் ரொபென்

அர்ஜென் ரொபென் (Arjen Robben, சனவரி 23, 1984) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமானிய புன்டசுலீகா கழகமான பேயர்ன் மியூனிக்கிலும் நெதர்லாந்து தேசிய காற்பந்து அணியிலும் நடுக்கள காற்பந்தாட்ட வீரராக ஆடி வருகிறார். இவர் தமது நாட்டிற்காக யூரோ 2004, 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னணி ஆட்டக்காரராக கருதப்பட்டாலும் இவர் முன்னணி வீரர்களுக்கு பின்னாலிருந்து தாக்குதலை நடத்துபவராக விளங்குகிறார். கால்களால் பந்தை மேலாளும் விதம், விரைவு, குறுக்கே அனுப்பும் திறன், வலது புறமிருந்து இடது கால் மூலமாக நீண்டதொலைவு துல்லியமாக உதைக்கும் திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.

அர்ஜென் ரொபென்
Arjen Robben.jpg
பேயர்ன் மியூனிக்கில் 2012இல் விளையாடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்அர்ஜென் ரொபென்[1]
பிறந்த தேதி23 சனவரி 1984 (1984-01-23) (அகவை 36)
பிறந்த இடம்பெதும், நெதர்லாந்து
உயரம்1.80 m (5 ft 11 in)[2]
ஆடும் நிலைநடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பேயர்ன் மியூனிக்
எண்10
இளநிலை வாழ்வழி
1989–1996பெதும்
1996–2000குரோனிஞ்சென்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2000–2002குரோனிஞ்சென்50(8)
2002–2004பிஎஸ்வீ56(17)
2004–2007செல்சீ67(15)
2007–2009ரியல் மாட்ரிட்50(11)
2009–பேயர்ன் மியூனிக்106(56)
தேசிய அணி
1999நெதர்லாந்து U151(0)
1999–2000நெதர்லாந்து U1611(4)
2000நெதர்லாந்து U173(1)
2001–2002நெதர்லாந்து U198(2)
2001–2003நெதர்லாந்து U218(1)
2003–நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி76(25)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15:31, 10 மே 2014 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்சான்றுகள்தொகு

  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF). FIFA. 7 திசம்பர் 2013. p. 5. http://www.fifadata.com/document/FCWC/2013/pdf/FCWC_2013_SquadLists.pdf. பார்த்த நாள்: 7 திசம்பர் 2013. 
  2. "Player Profile". Bayern Munich. பார்த்த நாள் 24 ஏப்ரல் 2014.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜென்_ரொபென்&oldid=2694011" இருந்து மீள்விக்கப்பட்டது