2018 உலகக்கோப்பை காற்பந்து
2018 பீஃபா உலகக்கோப்பை (2018 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 21 வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி உருசியாவில் சூன் 14, 2018 முதல் சூலை 15, 2018 வரை நடைபெற்றது.[2] இந்தப் போட்டியை உருசியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Чемпионат мира по футболу 2018 | |
---|---|
சின்னம் | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | உருசியா |
நாட்கள் | 14 சூன் – 15 சூலை |
அணிகள் | 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 12 (11 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | பிரான்சு (2-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | குரோவாசியா |
மூன்றாம் இடம் | பெல்ஜியம் |
நான்காம் இடம் | இங்கிலாந்து |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 64 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 169 (2.64 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 30,31,768 (47,371/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ஹாரி கேன் (6 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | லூக்கா மோத்ரிச்[1] |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | கிலியான் எம்பாப்பே[1] |
சிறந்த கோல்காப்பாளர் | தீபோ கூர்த்துவா[1] |
← 2014 2022 → | |
2010 திசம்பர் 2 இல் இப்போட்டிகளை உருசியா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாவது காற்பந்து உலகக்கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இதுவாகும். ஒரு ஆட்டம் தவிர ஏனையவை உருசியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெற்றன.[3][4][5] உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி உதவி நடுவர்கள் பணியாற்றினார்கள்.[6]
இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன. உருசியா போட்டிகளை நடத்தும் நாடாகத் தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றன. உருசியாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெற்றன.[7][8][9]
நடப்பு உலகக்கோப்பை வாகையாளர் செருமனி குழுநிலை ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேறியது. 1938 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக செருமனி அணி இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறவில்லை.[10] கடந்த ஐந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் நடப்பு வாகையாளர்கள் இவ்வாறு குழுநிலை ஆட்டத்திலேயே வெளியேறியது இது நான்காவது முறையாகும். முன்னதாக பிரான்சு 2002 இலும், இத்தாலி 2010 இலும், எசுப்பானியா 2014 இலும் வெளியேறின.[11] பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்ட எசுப்பானியா, போர்த்துகல், அர்கெந்தீனா அணிகள்[12] 16-அணிகளின் சுற்றின் முடிவில் வெளியேற்றப்பட்டன. பலம் குன்றியதாகக் கருதப்பட்ட போட்டி நடத்தும் நாடு காலிறுதிக்கு முன்னேறியது. 1934, 1966, 1982, 2006 இற்குப் பின்னர் முதல் தடவையாக காலிறுதிகளில் ஐரோப்பிய அணிகள் மட்டும் விளையாடின.[13][14]
இறுதிப் போட்டி சூலை 15 இல் மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் பிரான்சு, குரோவாசிய அணிகளுக்கிடையே நடைபெற்றது. பிரான்சு 4–2 என்ற கோல் வேறுபாட்டில் வென்று தமது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. அடுத்தடுத்த நான்கு உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரே கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் (இத்தாலி 2006, எசுப்பானியா 2010, செருமனி 2014) கோப்பையை வென்றுள்ளன.
உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற பிரான்சு அணி 2021 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
போட்டி நடத்தும் நாடு தேர்வு
தொகு2018, 2022 உலகக் கோப்பைகளை நடத்துவதற்கான நாடுகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் 2009 சனவரியில் ஆரம்பமாயின. இதற்கான விண்ணப்பங்கள் 2009 பெப்ரவரி 2 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[15] ஆரம்பத்தில் ஒன்பது நாடுகள் விண்ணப்பித்திருந்தன, ஆனால் மெக்சிக்கோ பின்னர் விலகிக் கொண்டது.[16] இந்தோனேசியாவின் விண்ணப்பம் அந்நாட்டு அரசின் ஆதரவுக் கடிதம் கிடைக்காததால் 2010 பெப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.[17] ஐரோப்பிய நாடுகளல்லாத ஆத்திரேலியா, சப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பின்னர் படிப்படியாக விலகிக் கொண்டன. இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான தெரிவுகளில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியில் 2018 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து, உருசியா, நெதர்லாந்து/பெல்ஜியம், போர்த்துகல்/எசுப்பானியா ஆகிய நாடுகள் எஞ்சியிருந்தன.
2010 திசம்பர் 2 இல் சூரிக்கு நகரில் 22-உறுப்பினர் கொண்ட பீஃபா பேரவை வாக்களிக்கக் கூடியது.[18] இரண்டாவது கட்ட வாக்களிப்பில் உருசியா 2018 போட்டிகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[19]
வாக்களிப்பு முடிவுகள் வருமாறு:[20]
நாடுகள் | வாக்குகள் | |
---|---|---|
சுற்று 1 | சுற்று 2 | |
உருசியா | 9 | 13 |
போர்த்துக்கல் / ஸ்பெயின் | 7 | 7 |
பெல்ஜியம் / நெதர்லாந்து | 4 | 2 |
இங்கிலாந்து | 2 | - |
அணிகள்
தொகுதகுதிநிலை
தொகுஉலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துத் தகுதியுள்ள நாடுகளும் – 209 உறுப்பு நாடுகள் தகுதிநிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்று நடத்தும் நாடாக, உருசியா தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.[21] சிம்பாப்வே, இந்தோனேசியா ஆகியன தமது முதல் தகுதிகாண் போட்டிகளை விளையாடுவதற்கு முன்னரே தகுதியிழந்தன.[22][23] ஆனால், 2016 மே 13 இல் பீஃபா அமைப்பில் இணைந்த ஜிப்ரால்ட்டர், கொசோவோ ஆகியன தகுதிகாண் சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்பட்டன.[24][25][26] முதலாவது தகுதிகாண் போட்டி கிழக்குத் திமோர், டிலி நகரில் 2015 மார்ச் 12 இல் நடந்தது.[27] இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெறும் நாடுகளை அறிவிக்கும் முக்கிய நிகழ்வு சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் 2015 சூலை 25 இல் நடைபெற்றது.[2][28][29][30]
2018 இறுதிப் போட்டிகளில் பங்குபற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நாடுகளில், 20 நாடுகள் 2014 போட்டியில் பங்குபற்றியிருந்தன. ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதல் தடவையாகப் போட்டியிடுகின்றன.[31] எகிப்து 28 ஆண்டுகளுக்குப் பின்னரும், பெரு 36 ஆண்டுகளுக்குப் பின்னரும் பங்குபற்றுகின்றன. முதல் தடவையாக மூன்று நோர்டிக் நாடுகள் (தென்மார்க்கு, ஐசுலாந்து, சுவீடன்), நான்கு அரபு நாடுகள் (எகிப்து, மொரோக்கோ, சவூதி அரேபியா, துனீசியா) உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன.[32]
நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி (1958 இற்குப் பின்னர் முதல் தடவையாக), மூன்று முறை இரண்டாம் இடத்தை வென்ற நெதர்லாந்து ஆகியன தேர்ந்தெடுக்கப்படாத முக்கிய அணிகள் ஆகும். 2017 ஆப்பிரிக்கக் கோப்பை வெற்றியாளரான கமரூம், இரண்டு தடவை கோப்பா அமெரிக்காவை வென்ற சிலி, மற்றும் நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் தகுதி பெறவில்லை.
|
|
|
இறுதிக் குலுக்கல்
தொகுஇறுதிக் குலுக்கல் 2017 திசம்பர் 1 இல் மாஸ்கோவில் அரச கிரெம்லின் மாளிகையில் இடம்பெற்றது.[33][34] 32 அணிகள் நான்கு அணிகளாக எட்டுக் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதிக் குலுக்கலின் போது, 2017 அக்டோபர் பிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் நான்கு தொட்டிகளில் இடப்பட்டன. முதலாவது தொட்டியில் உருசியா (போட்டியை நடத்தும் நாடு) ஏ1 நிலைக்கும், சிறந்த ஏழு அணிகள் இடம்பெற்றன. இரண்டாம் தொட்டியில் அடுத்த சிறந்த எட்டு அணிகளும், இவ்வாறு 3-ஆம், 4-ஆம் தொட்டிகளும் நிரப்பப்பட்டன.[35] இக்குலுக்கல் முன்னைய போட்டிகளில் இடம்பெற்ற குலுக்கல் முறையை விட வேறுபட்டது.
தொட்டி 1 | தொட்டி 2 | தொட்டி 3 | தொட்டி 4 |
---|---|---|---|
உருசியா (65) (நடத்தும் நாடு) |
எசுப்பானியா (8) |
டென்மார்க் (19) |
செர்பியா (38) |
அரங்குகள்
தொகுஉலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நகரங்களினதும் அரங்குளினதும் இறுதித் தேர்வு 2012 செப்டம்பர் 29 இல் இடம்பெற்றன. 12 அரங்குகள் தெரிவாகின. இவற்றுள் லூசினிக்கி, எக்கத்தரீன்பூர்க், சோச்சி ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் புனரமைக்கப்பட்டன. ஏனைய 9 அரங்குகளும் புதிதாக அமைக்கப்பட்டன. $11.8 பில்லியன் இதற்காக செலவழிக்கப்பட்டது.[36]
12 அரங்குகளில், உருசியாவின் மிகப் பெரிய இரண்டு அரங்குகள் (லூசினிக்கி, சென் பீட்டர்சுபர்க் அரங்கு ஆகியன) ஒவ்வொன்றிலும் 7 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. சோச்சி, கசான், நீசுனி நோவ்கோரத், சமாரா ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் (ஒரு காலிறுதி ஆட்டம் உட்பட) ஆறு ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. மாஸ்கோவின் அத்கிறீத்தியே அரங்கு, ரசுதோவ்-நா-தனு ஆகியன ஒவ்வொன்றிலும் (ஒரு 16-ஆம் சுற்று ஆட்டம் உட்பட) 5 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. வோல்கோகிராத், கலினின்கிராத், எக்கத்தரீன்பூர்க், சரான்சுக் ஆகியன ஒவ்வொன்றிலும் 4 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.
மாஸ்கோ | சென் பீட்டர்ஸ்பேர்க் | சோச்சி | |
---|---|---|---|
லூசினிக்கி அரங்கு | அத்கிறீத்தியே அரங்கு (ஸ்பர்த்தாக் அரங்கு) |
கிரெத்தோவ்சுக்கி அரங்கு (சென் பீட்டர்சுபர்கு அரங்கு) |
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (பிஸ்த் அரங்கு) |
கொள்ளளவு: 81,000 | கொள்ளளவு: 45,360 | கொள்ளளவு: 68,134 | கொள்ளளவு: 47,659 |
சமாரா | கசான் | ||
கொசுமசு அரங்கு (சமாரா அரங்கு) |
கசான் அரங்கு | ||
கொள்ளளவு: 44,918 | கொள்ளளவு: 45,379 | ||
ரஸ்தோவ்-நா-தனு | வோல்கோகிராட் | ||
ரஸ்தோவ் அரங்கு | வோல்கோகிராட் அரங்கு | ||
கொள்ளளவு: 45,000 | கொள்ளளவு: 45,568 | ||
நீசுனி நோவ்கோரத் | சரான்சுக் | எக்கத்தரீன்பூர்க் | கலினின்கிராத் |
நீசுனி நோவ்கோரத் அரங்கு | மோர்தோவியா அரங்கு | மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க் அரங்கு) |
கலினின்கிராத் அரங்கு |
கொள்ளளவு: 44,899 | கொள்ளளவு: 44,442 | கொள்ளளவு: 35,696 | கொள்ளளவு: 35,212 |
கால அட்டவணை
தொகுமுழுமையான கால அட்டவணை 2015 சூலை 24 இல் அறிவிக்கப்பட்டது.[37][38] உருசியா குழு நிலையில் ஏ1 நிலைக்கு வைக்கப்பட்டது. சுற்றின் முதலாவது போட்டியில் உருசியா சவூதி அரேபியாவுடன் சூன் 14 இல் மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் விளையாடவுள்ளது.[39] லூசினிக்கி அரங்கில் சூலை 11 இல் இரண்டாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 15 இல் இறுதி ஆட்டமும் இடம்பெறுகின்றன. சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கிரெஸ்தோவ்சுக்கி அரங்கில் சூலை 10 இல் முதலாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 14 இல் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் இடம்பெறும்.[25]
நடுவர்கள்
தொகுபீஃபா உலகக்கோப்பை ஒன்றில் முதற்தடவையாக நிகழ்படக் கண்காணிப்பு நடுவர்கள் இம்முறை அனுமதிக்கப்பட்டாரக்ள்.[40]
2018 மார்ச் 29 இல், பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு 2018 உலகக்கோப்பைக்கு 36 நடுவர்கள் மற்றும் 63 உதவி நடுவர்கள் பட்டியலை அறிவித்தது.[41] 2018 ஏப்ரல் 30 இல், 13 நிகழ்பட நடுவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.[42] 2018 மே 30 இல், சவூதி அரேபிய நடுவர் பகாத் அல்-மிர்தாசி ஆட்டமுடிவை முன்கூட்டியே நிர்ணயித்த குற்றச்சாட்டில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.[43] கென்யாவின் உதவி நடுவர் மார்வா ராஞ்சி என்பவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து நடுவர் பணியில் இருந்து விலகினார்.[44]
2018 சூன் 15 இல், போர்த்துகலுக்கு எதிரான டியேகோ கொஸ்டாவின் கோல் நிகழ்பட உதவியுடன் தீர்மானிக்கப்பட்ட முதலாவது கோல் ஆகும்.[45] நிகழ்பட உதவியுடன் தீர்மானிக்கப்பட்ட முதலாவது தண்ட உதை சூன் 16 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக அந்துவான் கிரீசுமன் போட்ட கோல் ஆகும்.[46]
ஆரம்ப விழா
தொகுஆரம்ப விழா 2018 சூன் 14 வியாழக்கிழமை மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் இடம்பெற்றது. தொடர்ந்து உருசிய அணிக்கும் சவூதி அரேபிய அணிக்கும் இடையில் முதல் போட்டி இடம்பெற்றது[47][48]
பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ சிறுவன் ஒருவனுடன் "உருசியா 2018" மேலாடை அணிந்து அரங்கினுள் நுழைந்தார். அதன் பின்னர் ஆங்கிலேயப் பாப் பாடகர் ரொபி விக்ல்லியம்சு, உருசியாவின் ஐடா கரிஃபுலீனாவுடன் இணைந்து ஒரு பாடலையும், தனித்து இரண்டு பாடல்களையும் பாடினார். இவர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட 32 அணிகளின் தேசியக் கொடிகளையும் பெயர்களையும் தாங்கியவண்ணம் பெண்களும் ஆண்களுமாக அரங்கினுள் வந்தனர்.[49]
2018 உலக்கோப்பையின் அதிகாரபூர்வமான கால்பந்துடன் ரொனால்டோ வந்தார். இப்பந்து அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 2018 மார்ச் மாதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பூமிக்கு சூன் ஆரம்பத்தில் திரும்பியிருந்தது.[49]
குழு நிலை ஆட்டம்
தொகுகுழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு (சுற்று 16) முன்னேறும்.
அனைத்து நேரங்களும் உள்ளூர் நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[50]
- சமநிலையை முறி கட்டளை விதி
குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்:
- எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
- எல்லாக் குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
- எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
- சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
- பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம் | |
---|---|
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் | |
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள் |
குழு ஏ
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
உருகுவை | 3 | 3 | 0 | 0 | 5 | 0 | +5 | 9 |
உருசியா (ந) | 3 | 2 | 0 | 1 | 8 | 4 | +4 | 6 |
சவூதி அரேபியா | 3 | 1 | 0 | 2 | 2 | 7 | −5 | 3 |
எகிப்து | 3 | 0 | 0 | 3 | 2 | 6 | −4 | 0 |
முதல் ஆட்டம் 2018 சூன் 14 இல் நடைபெற்றது. மூலம்: FIFA பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
(ந) நடத்தும் நாடு.
உருசியா | 5–0 | சவூதி அரேபியா |
---|---|---|
கசீன்சுக்கி 12' சேரிசெவ் 43', 90+1' திசியூபா 71' கலோவின் 90+4' |
அறிக்கை |
உருசியா | 3–1 | எகிப்து |
---|---|---|
பாத்தி 47' (சுய கோல்) சேரிசெவ் 59' திசியூபா 62' |
அறிக்கை | சாலா 73' (தண்ட உதை) |
உருகுவை | 1–0 | சவூதி அரேபியா |
---|---|---|
சுவாரெசு 23' | அறிக்கை |
சவூதி அரேபியா | 2–1 | எகிப்து |
---|---|---|
அல்-பராஜ் 45+6' (தண்ட உதை) அல்-டவ்சாரி 90+5' |
அறிக்கை | சாலா 22' |
குழு பி
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
எசுப்பானியா | 3 | 1 | 2 | 0 | 6 | 5 | +1 | 5 |
போர்த்துகல் | 3 | 1 | 2 | 0 | 5 | 4 | +1 | 5 |
ஈரான் | 3 | 1 | 1 | 1 | 2 | 2 | 0 | 4 |
மொரோக்கோ | 3 | 0 | 1 | 2 | 2 | 4 | −2 | 1 |
முதல் ஆட்டம் 2018 சூன் 15 இல் நடைபெற்றது. மூலம்: FIFA பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
மொரோக்கோ | 0–1 | ஈரான் |
---|---|---|
அறிக்கை | புகாதூசு 90+5' (சுய கோல்) |
போர்த்துகல் | 3–3 | எசுப்பானியா |
---|---|---|
ரொனால்டோ 4' (தண்ட உதை), 44', 88' | அறிக்கை | கொஸ்டா 24', 55' நேச்சோ 58' |
போர்த்துகல் | 1–0 | மொரோக்கோ |
---|---|---|
ரொனால்டோ 4' | அறிக்கை |
ஈரான் | 0–1 | எசுப்பானியா |
---|---|---|
அறிக்கை | கொஸ்டா 54' |
ஈரான் | 1–1 | போர்த்துகல் |
---|---|---|
அன்சாரிபார்த் 90+3' (தண்ட உதை) | அறிக்கை | குவாரெசுமா 45' |
எசுப்பானியா | 2–2 | மொரோக்கோ |
---|---|---|
இசுக்கோ 19' அசுபாசு 90+1' |
அறிக்கை | பூத்தாயிப் 14' என்-நெசிரி 81' |
குழு சி
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
பிரான்சு | 3 | 2 | 1 | 0 | 3 | 1 | +2 | 7 |
டென்மார்க் | 3 | 1 | 2 | 0 | 2 | 1 | +1 | 5 |
பெரு | 3 | 1 | 0 | 2 | 2 | 2 | 0 | 3 |
ஆத்திரேலியா | 3 | 0 | 1 | 2 | 2 | 5 | −3 | 1 |
முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பிரான்சு | 2–1 | ஆத்திரேலியா |
---|---|---|
கிரீசுமேன் 58' (தண்ட உதை) பெகிச் 81' (சுய கோல்) |
அறிக்கை | எடினாக் 62' (தண்ட உதை) |
பெரு | 0–1 | டென்மார்க் |
---|---|---|
அறிக்கை | பவுல்சென் 59' |
டென்மார்க் | 1–1 | ஆத்திரேலியா |
---|---|---|
எரிக்சன் 7' | அறிக்கை | எடினாக் 38' (தண்ட உதை) |
பிரான்சு | 1–0 | பெரு |
---|---|---|
எம்பாப்பே 34' | அறிக்கை |
ஆத்திரேலியா | 0–2 | பெரு |
---|---|---|
அறிக்கை | கரில்லோ 18' குவரேரோ 50' |
குழு டி
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
குரோவாசியா | 3 | 3 | 0 | 0 | 7 | 1 | +6 | 9 |
அர்கெந்தீனா | 3 | 1 | 1 | 1 | 3 | 5 | −2 | 4 |
நைஜீரியா | 3 | 1 | 0 | 2 | 3 | 4 | −1 | 3 |
ஐசுலாந்து | 3 | 0 | 1 | 2 | 2 | 5 | −3 | 1 |
முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
அர்கெந்தீனா | 1–1 | ஐசுலாந்து |
---|---|---|
அகுவேரோ 19' | அறிக்கை | பின்போகசன் 23' |
குரோவாசியா | 2–0 | நைஜீரியா |
---|---|---|
எத்தெபோ 32' (சுய கோல்) மோத்ரிச் 71' (தண்ட உதை) |
அறிக்கை |
அர்கெந்தீனா | 0–3 | குரோவாசியா |
---|---|---|
அறிக்கை | இரெபிச் 53' மோத்ரிச் 80' இராக்கித்திச் 90+1' |
நைஜீரியா | 1–2 | அர்கெந்தீனா |
---|---|---|
மோசசு 51' (தண்ட உதை) | அறிக்கை | மெசி 14' ரோஜோ 86' |
ஐசுலாந்து | 1–2 | குரோவாசியா |
---|---|---|
ஜி. சிகுரோசொன் 76' (தண்ட உதை) | அறிக்கை | பதேலிச் 53' பெரிசிச் 90' |
குழு ஈ
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
பிரேசில் | 3 | 2 | 1 | 0 | 5 | 1 | +4 | 7 |
சுவிட்சர்லாந்து | 3 | 1 | 2 | 0 | 5 | 4 | +1 | 5 |
செர்பியா | 3 | 1 | 0 | 2 | 2 | 4 | −2 | 3 |
கோஸ்ட்டா ரிக்கா | 3 | 0 | 1 | 2 | 2 | 5 | −3 | 1 |
முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
கோஸ்ட்டா ரிக்கா | 0–1 | செர்பியா |
---|---|---|
அறிக்கை | கொலரோவ் 56' |
பிரேசில் | 1–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
கோட்டின்யோ 20' | அறிக்கை | சூபர் 50' |
பிரேசில் | 2–0 | கோஸ்ட்டா ரிக்கா |
---|---|---|
கோட்டின்யோ 90+1' நெய்மார் 90+7' |
அறிக்கை |
செர்பியா | 1–2 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
மித்ரோவிச் 5' | அறிக்கை | ஹாக்கா 52' சாகிரி 90' |
சுவிட்சர்லாந்து | 2–2 | கோஸ்ட்டா ரிக்கா |
---|---|---|
செமாயிலி 31' திரிமிச் 88' |
அறிக்கை | வாஸ்டன் 56' சொமர் 90+3' (சுய கோல்) |
குழு எஃப்
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
சுவீடன் | 3 | 2 | 0 | 1 | 5 | 2 | +3 | 6 |
மெக்சிக்கோ | 3 | 2 | 0 | 1 | 3 | 4 | −1 | 6 |
தென் கொரியா | 3 | 1 | 0 | 2 | 3 | 3 | 0 | 3 |
செருமனி | 3 | 1 | 0 | 2 | 2 | 4 | −2 | 3 |
முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
செருமனி | 0–1 | மெக்சிக்கோ |
---|---|---|
அறிக்கை | லொசானோ 35' |
சுவீடன் | 1–0 | தென் கொரியா |
---|---|---|
கிராங்குவிஸ்த் 65' (தண்ட உதை) | அறிக்கை |
தென் கொரியா | 1–2 | மெக்சிக்கோ |
---|---|---|
எயுங்-மின் 90+3' | அறிக்கை | வேலா 26' (தண்ட உதை) எர்னாண்டசு 66' |
தென் கொரியா | 2–0 | செருமனி |
---|---|---|
யங்-குவொன் 90+3' எயுங்-மின் 90+6' |
அறிக்கை |
மெக்சிக்கோ | 0–3 | சுவீடன் |
---|---|---|
அறிக்கை | அகுஸ்தின்சன் 50' கிராங்குவிஸ்த் 62' (தண்ட உதை) ஆல்வாரெசு 74' (சுய கோல்) |
குழு ஜி
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
பெல்ஜியம் | 3 | 3 | 0 | 0 | 9 | 2 | +7 | 9 |
இங்கிலாந்து | 3 | 2 | 0 | 1 | 8 | 3 | +5 | 6 |
தூனிசியா | 3 | 1 | 0 | 2 | 5 | 8 | −3 | 3 |
பனாமா | 3 | 0 | 0 | 3 | 2 | 11 | −9 | 0 |
முதல் ஆட்டம் 2018 சூன் 18 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
பெல்ஜியம் | 3–0 | பனாமா |
---|---|---|
மெர்ட்டென்சு 47' லுக்காக்கு 69', 75' |
அறிக்கை |
தூனிசியா | 1–2 | இங்கிலாந்து |
---|---|---|
சசி 35' (தண்ட உதை) | அறிக்கை | கேன் 11', 90+1' |
பெல்ஜியம் | 5–2 | தூனிசியா |
---|---|---|
அசார்டு 6' (தண்ட உதை), 51' லுக்காக்கு 16', 45+3' பட்சுயாவி 90' |
அறிக்கை | புரொன் 18' காசுரி 90+3' |
இங்கிலாந்து | 6–1 | பனாமா |
---|---|---|
ஸ்டோன்சு 8', 40' கேன் 22' (தண்ட உதை), 45+1' (தண்ட உதை), 62' லிங்கார்டு 36' |
அறிக்கை | பலோய் 78' |
இங்கிலாந்து | 0–1 | பெல்ஜியம் |
---|---|---|
அறிக்கை | ஜானுசாச் 51' |
குழு எச்
தொகுஅணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
கொலம்பியா | 3 | 2 | 0 | 1 | 5 | 2 | +3 | 6 |
சப்பான் | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4 |
செனிகல் | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4 |
போலந்து | 3 | 1 | 0 | 2 | 2 | 5 | −3 | 3 |
முதல் ஆட்டம் 2018 சூன் 19 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்
ஆட்டமிழக்கும் நிலை
தொகுஆட்டமிழக்கும் நிலைகளில், வழமையான நேரத்தில் ஆட்டம் சமநிலையில் முடியுமானால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் (ஒவ்வொன்றும் 15 நிமிடங்களாக இரண்டு பகுதிகள்) ஒதுக்கப்படும். தேவைப்படின், சமன்நீக்கி மோதல் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[99]
ஆட்டம் ஒன்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படின், ஒவ்வோர் அணிக்கும் நான்காவது மாற்றீடு செய்ய அனுமதிக்கப்படும். உலகக்கோப்பை போட்டி ஒன்றில் முதல் தடவையாக இவ்வாறு விளையாட அனுமதிக்கப்படுகிறது.[40]
சுற்று 16 | கால் இறுதிகள் | அரை இறுதிகள் | இறுதி | |||||||||||
30 சூன் – சோச்சி | ||||||||||||||
உருகுவை | 2 | |||||||||||||
6 சூலை – நீசுனி நோவ்கோரத் | ||||||||||||||
போர்த்துகல் | 1 | |||||||||||||
உருகுவை | 0 | |||||||||||||
30 சூன் – கசான் | ||||||||||||||
பிரான்சு | 2 | |||||||||||||
பிரான்சு | 4 | |||||||||||||
10 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க் | ||||||||||||||
அர்கெந்தீனா | 3 | |||||||||||||
பிரான்சு | 1 | |||||||||||||
2 சூலை – சமாரா | ||||||||||||||
பெல்ஜியம் | 0 | |||||||||||||
பிரேசில் | 2 | |||||||||||||
6 சூலை – கசான் | ||||||||||||||
மெக்சிக்கோ | 0 | |||||||||||||
பிரேசில் | 1 | |||||||||||||
2 சூலை – ரசுத்தோவ் | ||||||||||||||
பெல்ஜியம் | 2 | |||||||||||||
பெல்ஜியம் | 3 | |||||||||||||
15 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
சப்பான் | 2 | |||||||||||||
பிரான்சு | 4 | |||||||||||||
1 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
குரோவாசியா | 2 | |||||||||||||
எசுப்பானியா | 1 (3) | |||||||||||||
7 சூலை – சோச்சி | ||||||||||||||
உருசியா (சநீ) | 1 (4) | |||||||||||||
உருசியா | 2 (3) | |||||||||||||
1 சூலை – நீசுனி நோவ்கோரத் | ||||||||||||||
குரோவாசியா (சநீ) | 2 (4) | |||||||||||||
குரோவாசியா (சநீ) | 1 (3) | |||||||||||||
11 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி) | ||||||||||||||
டென்மார்க் | 1 (2) | |||||||||||||
குரோவாசியா (கூ.நே.) | 2 | |||||||||||||
3 சூலை – சென் பீட்டர்சுபர்கு | ||||||||||||||
இங்கிலாந்து | 1 | மூன்றாமிடப் போட்டி | ||||||||||||
சுவீடன் | 1 | |||||||||||||
7 சூலை – சமாரா | 14 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க் | |||||||||||||
சுவிட்சர்லாந்து | 0 | |||||||||||||
சுவீடன் | 0 | பெல்ஜியம் | 2 | |||||||||||
3 சூலை – மாஸ்கோ (அத்கிறீத்தியே) | ||||||||||||||
இங்கிலாந்து | 2 | இங்கிலாந்து | 0 | |||||||||||
கொலம்பியா | 1 (3) | |||||||||||||
இங்கிலாந்து (சநீ) | 1 (4) | |||||||||||||
சுற்று 16
தொகுபிரான்சு | 4–3 | அர்கெந்தீனா |
---|---|---|
கிரீசுமன் 13' (தண்ட உதை) பவார் 57' எம்பாப்பே 64', 68' |
அறிக்கை | டி மரீயா 41' மெர்சாடோ 48' அகுவேரோ 90+3' |
உருகுவை | 2–1 | போர்த்துகல் |
---|---|---|
கவானி 7', 62' | அறிக்கை | பேபே 55' |
எசுப்பானியா | 1–1 (கூ.நே) | உருசியா |
---|---|---|
இக்னசேவிச் 12' (சுய கோல்) | அறிக்கை | திசியூபா 41' (தண்ட உதை) |
ச.நீ | ||
இனியெஸ்தா பிக்கே கோக்கி ரமோசு ஆஸ்பாசு |
3–4 | சிமோலொவ் இக்னசேவிச் கலோவின் சேரிசெவ் |
குரோவாசியா | 1–1 (கூ.நே) | டென்மார்க் |
---|---|---|
மஞ்சூக்கிச் 4' | அறிக்கை | எம். யோர்ஜென்சன் 1' |
ச.நீ | ||
பாதெல்ச் கிரமாரிச் மோத்ரிச் பிவாரிச் ராக்கித்திச் |
3–2 | எரிக்சன் க்ஜாயெர் குரோன்-தெக்லி ஸ்கோன் என். யோர்ஜென்சன் |
பிரேசில் | 2–0 | மெக்சிக்கோ |
---|---|---|
நெய்மார் 51' பிர்மீனோ 88' |
அறிக்கை |
சுவீடன் | 1–0 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
போர்சுபர்கு 66' | அறிக்கை |
கொலம்பியா | 1–1 (கூ.நே) | இங்கிலாந்து |
---|---|---|
மினா 90+3' | அறிக்கை | கேன் 57' (தண்ட உதை) |
ச.நீ | ||
பால்காவோ உ. குவாத்ராதோ மூரியல் உரிபே பாக்கா |
3–4 | கேன் ராசுபோர்டு என்டர்சன் திரிப்பியர் டையர் |
கால் இறுதிகள்
தொகுஉருகுவை | 0–2 | பிரான்சு |
---|---|---|
அறிக்கை | வரானி 40' கிரீசுமன் 61' |
சுவீடன் | 0–2 | இங்கிலாந்து |
---|---|---|
அறிக்கை | மெகுவயர் 30' அல்லி 59' |
உருசியா | 2–2 (கூ.நே) | குரோவாசியா |
---|---|---|
சேரிசெவ் 31' பெர்னாண்டசு 115' |
அறிக்கை | கிரமாரிச் 39' வீதா 101' |
ச.நீ | ||
சிமோலொவ் சகோயெவ் பெர்னாண்டசு இக்னசேவிச் குசியாயெவ் |
3–4 | புரொசோவிச் கொவாசிச் மோத்ரிச் வீதா ராக்கித்திச் |
அரை இறுதிகள்
தொகுபிரான்சு | 1–0 | பெல்ஜியம் |
---|---|---|
உம்தித்தி 51' | அறிக்கை |
குரோவாசியா | 2–1 (கூ.நே) | இங்கிலாந்து |
---|---|---|
பெரிசிச் 68' மஞ்சூக்கிச் 109' |
அறிக்கை | திரிப்பியர் 5' |
மூன்றாமிடப் போட்டி
தொகுபெல்ஜியம் | 2–0 | இங்கிலாந்து |
---|---|---|
மெயூனியர் 4' ஏ. அசார்டு 82' |
அறிக்கை |
இறுதி
தொகுபிரான்சு | 4–2 | குரோவாசியா |
---|---|---|
மஞ்சூக்கிச் 18' (சுய கோல்) கிரீசுமன் 38' (தண்ட உதை) போக்பா 59' எம்பாப்பே 65' |
அறிக்கை | பெரிசிச் 28' மஞ்சூக்கிச் 69' |
புள்ளிவிபரம்
தொகுகோல் அடித்தவர்கள்
தொகு64 ஆட்டங்களில் 169 கோல்கள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.64 கோல்கள்.
- 6 கோல்கள்
- 4 கோல்கள்
- 3 கோல்கள்
- 2 கோல்கள்
- 1 கோல்
- ஆங்கெல் டி மரீயா
- கேப்ரியல் மெர்காடோ
- லியோனல் மெஸ்ஸி
- மார்க்கோசு ரோஜோ
- மிச்சி பட்சுயாவி
- நாசர் சாட்லி
- கெவின் டெ புரூய்னி
- மறோவேன் பெலாயினி
- ஆட்னன் ஜனுசாச்
- டிரீசு மெர்ட்டென்சு
- தோமசு மெயூனியர்
- யான் வெர்த்தோங்கன்
- ரொபெர்த்தோ பிர்மீனோ
- பவுலீனியோ
- ரெனாட்டோ அகுஸ்தோ
- தியாகோ சில்வா
- குவான் குவாத்ராதோ
- ரதமெல் பல்காவோ
- குவான் பெர்னாண்டோ குவின்டேரோ
- கென்டல் வாஸ்டன்
- மிலான் பதேலிச்
- ஆந்திரேய் கிரமாரிச்
- இவான் ரெக்கித்திச்
- ஆன்டி ரெபிச்
- தொமகோச் வீதா
- கிறித்தியான் எரிக்சன்
- மத்தாயசு யோர்ஜென்சன்
- யூசுப் போல்சென்
- டெலி அல்லி
- ஜெசி லிங்கார்டு
- ஹாரி மெகுவயர்
- கீரன் திரிப்பியர்
- பெஞ்சமின் பவார்
- பவுல் போக்பா
- சாமுவேல் உம்தித்தி
- ரபாயெல் வரானி
- டோனி குரூசு
- மார்க்கோ ரெயூசு
- அல்ஃபிரெயோ பின்போகசன்
- கில்ஃபி சிகுரோசன்
- கரிம் அன்சாரிபார்த்
- கெங்கி அரகூச்சி
- கெய்சூக்கி ஒண்டா
- சிஞ்சி ககாவா
- யுவா ஒசாக்கோ
- யாவியர் எர்னாண்டெசு
- இர்விங் லொசானோ
- கார்லோசு வேலா
- காலித் பூத்தாயிப்
- யூசெப் என்-நெசிரி
- விக்டர் மோசசு
- பெலிப் பலோய்
- அந்திரே கரீலோ
- பவோலோ குவெரேரோ
- சான் பெட்னாரெக்
- கிரிசிகோர்சு கிரிச்சோவியாக்
- பேபே
- ரிக்கார்டோ குவரேசுமா
- மாரியோ பெர்னாண்டசு
- யூரி கசீன்ஸ்கி
- அலெக்சாந்தர் கலோவின்
- சலிம் அல்-டவ்சாரி
- சல்மான் அல்-பராஜ்
- சாதியோ மனே
- உம்பாயே நியாங்
- மூசா வாகுவே
- அலெக்சாந்தர் கொலரோவ்
- அலெக்சாந்தர் மித்ரோவிச்
- கிம் யங்-குவொன்
- இயாகோ அஸ்பாசு
- இசுக்கோ
- நேச்சோ
- லுத்விக் அகுஸ்தின்சன்
- எமில் போர்சுபர்கு
- ஓலா தொய்வோனென்
- யோசிப் திரிமிச்
- பிளெரிம் சிமைலி
- செர்தான் சாகிரி
- கிரானித் ஹாக்கா
- ஸ்டீவன் சூபர்
- டிலான் புரொன்
- பெர்சானி சசி
- பிராக்கிரெடின் பென் யூசெப்
- ஒசே கிமேனெசு
- 1 சுய கோல்
- அசீசு பெகிச் (பிரான்சிற்கு எதிராக)
- பெர்னாண்டீனியோ (பெல்ஜியத்திற்கு எதிராக)
- மரியோ மஞ்சூக்கிச் (பிரான்சுக்கு எதிராக)
- அகமது பாத்தி (உருசியாவிற்கு எதிராக)
- எட்சன் ஆல்வரெசு (சுவீடனுக்கு எதிராக)
- அசீசு புகாதூசு (ஈரானுக்கு எதிராக)
- ஒகெனிக்காரோ எத்தேபோ (குரோவாசியாவுக்கு எதிராக)
- தியாகோ சியோனெக் (செனிகலுக்கு எதிராக)
- தெனீசு சேரிசெவ் (உருகுவைக்கு எதிராக)
- செர்கேய் இக்னசேவிச் (எசுப்பானியாவுக்கு எதிராக)
- யான் சொமர் (கோஸ்ட்டா ரிக்காவுக்கு எதிராக)