பனாமா தேசிய காற்பந்து அணி

பனாமா தேசிய காற்பந்து அணி (Panama national football team, எசுப்பானியம்: Selección de fútbol de Panama) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பனாமா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். பனாமாவில் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கும் பனாமா காற்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இந்த அணி இயங்குகின்றது. இந்தக் கூட்டமைப்பு வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் வட்டார உன்கேஃப் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 2005 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கான்காகேஃப் தங்கக் கோப்பை போட்டிகளில் இரண்டாமிடத்தை எட்டியது. 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை தகுதிப் போட்டிகளில் நான்காம் சுற்றுவரை வென்றது.

பனாமா
அடைபெயர்லாசு கேனலரோசு (கால்வாய் மனிதர்)
லா மாரியா ரோகா (சிவப்பு அலை)
கூட்டமைப்புபனாமா காற்பந்து கூட்டமைப்பு
பெடரேசன் பனாமெனா டெ புட்பால்
மண்டல கூட்டமைப்புஉன்காஃப் (நடு அமெரிக்கா)
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்எர்னான் டாரியோ கோமெசு
அணித் தலைவர்பெலிப்பெ பலோய்
Most capsகாப்ரியல் என்ரிக் கோமெசு (121)
அதிகபட்ச கோல் அடித்தவர்லூயி டெகாடா (42)
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ ரோமல் பெர்னாண்டசு
பீஃபா குறியீடுPAN
பீஃபா தரவரிசை56 (சூன் 2 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை29 (மார்ச் 2014)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை150 (ஆகத்து 1995)
எலோ தரவரிசை43 (ஏப்ரல் 16, 2016)
அதிகபட்ச எலோ28 (சூலை 2013)
குறைந்தபட்ச எலோ151 (சூன் 1984)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பனாமா 3–1 வெனிசுவேலா 
(பனாமா நகரம், பனாமா; 12 பெப்ரவரி 1938)[1]
பெரும் வெற்றி
 பனாமா 12–1 புவேர்ட்டோ ரிக்கோ 
(பார்ரன்கிலா, கொலொம்பியா; 13 திசம்பர் 1946)[1]
பெரும் தோல்வி
 பனாமா 0–11 கோஸ்ட்டா ரிக்கா 
(பனாமா நகரம், பனாமா; 16 பெப்ரவரி 1938)[1]
கான்காகேஃப்
& தங்கக் கோப்பை
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம்: 2005, 2013

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Barrie Courtney. "Panama – International Results". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2013.

வெளி இணைப்புகள் தொகு