எக்கத்தரீன்பூர்க்
எக்கத்தரீன்பூர்க் (Yekaterinburg, உருசியம்: Екатеринбу́рг), என்பது உருசிய நகரமும், சிவெர்த்லோவ்சுக் மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். இது யூரேசியக் கண்டத்தின் மத்தியில், ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், உரால் மலைகளின் கிழக்கே இசெட் ஆற்றில் அமைந்துள்ளது.[12][13] இந்நகரம் சிவெர்த்லோவ்ஸ்க் மாகாணத்தில் முக்கிய கலாசார, மற்றும் தொழிற்துறை மையமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,349,772 ஆகும்.[6] எக்கத்தரீன்பூர்கின் நகர்ப்புறம் உருசியாவின் நான்காவது பெரியதும், நாட்டில் தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் மூன்று நகரங்களில் ஒன்றும் ஆகும்.
எக்கத்தரீன்பூர்க்
Екатеринбург | |
---|---|
நகரம்[1] | |
மணிக்கூட்டுத் திசையில்: நகர நிருவாகக் கட்டடம், உரால் மாநிலக் கல்லூரி, எக்கத்தரீன்பூர்க் நகரம், செவஸ்தியானொவின் மனை, போரிஸ் யெல்ட்சின் அரசுத்தலைவர் மையம், அனைத்துப் புனிதர்களின் தேவாலயம் | |
ஆள்கூறுகள்: 56°50′N 60°35′E / 56.833°N 60.583°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | சிவெர்த்லோவ்சுக் மாகாணம்[1] |
நிறுவிய ஆண்டு | நவம்பர் 18, 1723[2] |
நகரம் status since | 1796 |
அரசு | |
• நிர்வாகம் | நகர சபை[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 495 km2 (191 sq mi) |
ஏற்றம் | 237 m (778 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 13,49,772 |
• மதிப்பீடு (2017)[7] | 14,88,791 |
• தரவரிசை | 2010 இல் 4-வது |
• அடர்த்தி | 2,700/km2 (7,100/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | எக்கத்தரீன்பூர்க் நகரம்[8] |
• Capital of | சிவெர்த்லோவ்சுக் மாகாணம்,[1] எக்கத்தரீன்பூர்க் நகரம் |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | எக்கத்தரீன்பூர்க் நகர வட்டம்[9] |
• Capital of | எக்கத்தரீன்பூர்க் நகர வட்டம்[9] |
நேர வலயம் | ஒசநே+5 ([10]) |
அஞ்சல் குறியீடு(கள்)[11] | 620000 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 343[11] |
OKTMO குறியீடு | 65701000001 |
நகரம் Day | ஆகத்து 3-வது சனிக்கிழமை |
இணையதளம் | www |
எக்கத்தரீன்பூர்க் நகரம் 1723 நவம்பர் 18 இல் உருசியப் பேரரசர் முதலாம் பேதுருவின் மனைவி எக்கத்தரீனின் (உருசியாவின் முதலாம் கேத்தரீன்) நினைவாக உருவாக்கப்பட்டது. இது உருசியப் பேரரசின் சுரங்கத் தொழிலுக்கான தலைநகராக விளங்கியது. 1781 இல் பேரரசி இரண்டாம் கேத்தரீன் இந்நகருக்கு பேர்ம் மாகாணத்தின் மாவட்ட நகர நிலையைக் கொடுத்து, பேரரசின் முக்கிய சாலையை (சைபீரிய சாலை) இந்நகரூடாக அமைத்தார். எக்கத்தரீன்பூர்க் சைபீரியாவுக்கான முக்கிய நகராக விளங்கி, ஆசியாவுக்கான சாளரம் என அழைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில், எக்கத்தரீன்பூர்க் உரால் பகுதியின் முக்கிய புரட்சியாளர்களின் மையமாக விளங்கியது. 1924 இல், உருசியா சோசலிசக் குடியரசான பிற்பாடு, இந்நகரம் போல்செவிக் புரட்சியாளர் யாக்கோவ் சிவெர்த்லோ என்பவரின் நினைவாக சிவெர்த்லோவ்ஸ்க் (Sverdlovsk, உருசியம்: Свердло́вск) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சோவியத் ஆட்சிக் காலத்தில், இந்நகரம் தொற்துறை, மற்றும் நிருவாக ரீதியில், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தது. 1991 இல், சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரின் பெயர் மீண்டும் எக்கத்தரீன்பூர்க் என மாற்ரப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Law #30-OZ
- ↑ Haywood, A. J. (2010). Siberia: A Cultural History, Oxford University Press, p. 32
- ↑ Charter of Yekaterinburg, Article 24.1
- ↑ Official website of Yekaterinburg. Alexander Edmundovich Yakob, Head of Administration of the City of Yekaterinburg பரணிடப்பட்டது 2015-07-12 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ "Стратегический план развития Екатеринбурга до 2015 года. Раздел II. Исходные конкурентные возможности Екатеринбурга. Внутренние факторы развития города". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-05-25.
- ↑ 6.0 6.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Federal State Statistic Service". Government of Russia. 2017-01-01. Archived from the original on 2017-07-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ "Federal State Statistic Service". Government of Russia. 1 January 2024. Retrieved 6 June 2024
- ↑ 9.0 9.1 Law #85-OZ
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 11.0 11.1 Ekaterinburg.com. General Information பரணிடப்பட்டது 2013-01-21 at Archive.today
- ↑ http://www.ekburg.ru/english_version/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-25.
வெளி இணைப்புகள்
தொகு- Official website of Yekaterinburg (உருசிய மொழியில்)