செர்பிய தேசிய காற்பந்து அணி
செர்பிய தேசிய காற்பந்து அணி (Serbia national football team, செருபிய மொழி: Фудбалска репрезентација Србије / Fudbalska reprezentacija Srbije) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செர்பியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செர்பிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இதன் உள்ளக விளையாட்டுகள் பெல்கிறேட் நகரில் ராச்கோ மித்திச் அரங்கில் விளையாடப்படுகின்றன.
அடைபெயர் | Орлови / ஒர்லோவி (கழுகுகள்) | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | செர்பியா கால்பந்து சங்கம் | ||||||||||||||||||||||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் | ||||||||||||||||||||||
தன்னக விளையாட்டரங்கம் | ராஜ்கோ மித்தீச் அரங்கு, பெல்கிறேட் | ||||||||||||||||||||||
பீஃபா குறியீடு | SRB | ||||||||||||||||||||||
பீஃபா தரவரிசை | 35 (17 மே 2018) | ||||||||||||||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 6 (டிசம்பர் 1998) | ||||||||||||||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 101 (டிசம்பர் 1994) | ||||||||||||||||||||||
எலோ தரவரிசை | 24 (20 ஏப்ரல் 2018) | ||||||||||||||||||||||
அதிகபட்ச எலோ | 4 (சூன் 1998) | ||||||||||||||||||||||
குறைந்தபட்ச எலோ | 47 (அக்டோபர் 2012) | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||||||||||||||||||||||
செக்கோசிலோவாக்கியா 7–0 யுகோசுலாவியா (ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920) செர்பியாவாக செக் குடியரசு 1–3 செர்பியா (செக் குடியரசு; 18 ஆகத்து 2006) | |||||||||||||||||||||||
பெரும் வெற்றி | |||||||||||||||||||||||
யுகோசுலாவியா 10–0 வெனிசுவேலா (குரிடிபே, பிரேசில்; 14 சூன் 1972) | |||||||||||||||||||||||
பெரும் தோல்வி | |||||||||||||||||||||||
செக்கோசிலோவாக்கியா 7–0 யூகோசுலாவியா (ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920) உருகுவை 7–0 யூகோசுலாவியா (பாரிஸ், பிரான்சு; 26 மே 1924) செக்கோசிலோவாக்கியா 7–0 யூகோசுலாவியா (பிராகா, செக்கோசிலோவாக்கியா; 28 அக்டோபர் 1925) | |||||||||||||||||||||||
உலகக் கோப்பை | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 12 (முதற்தடவையாக 1930 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | மூன்றாமிடம், 1930 | ||||||||||||||||||||||
ஐரோப்பிய வாகையாளர் | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 5 (முதற்தடவையாக 1960 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 1960, 1968 | ||||||||||||||||||||||
Honours
|
செர்பியாவினதும், அருகிலுள்ள பால்கன் நாடுகளிலும் கால்பந்து நீண்ட வரலாற்றைக் கொண்டது. செர்பிய அணி யுகோசுலாவிய தேசிய அணிகளில் இணைந்து விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 1930, 1962 உலகக் கோப்பைகளில் விளையாடி நான்காவதாக வந்தது. செர்பிய அதேசியக் கால்பந்து சங்கத்தை யுகோசுலாவிய, செர்பிய- செர்பிய-மொண்டெனேகுரோ தேசிய அணிகளின் கால்வழியினராக பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் ஆகியன அங்கீகரித்துள்ளன.[1][2][3]
செர்பியாவும் மொண்டெனேகுரோவும் கலைக்கப்பட்ட பின்னர், செர்பியா 2006 முதல் தனித் தேசிய அணியாக பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ History பரணிடப்பட்டது 27 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம் at FSS official website, Retrieved 4 October 2012 (செர்பிய மொழி)
- ↑ Serbia பரணிடப்பட்டது 2017-07-23 at the வந்தவழி இயந்திரம் at பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு official website
- ↑ News: Serbia at ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் official website, published 1 January 2011, Retrieved 4 October 2012
வெளி இணைப்புகள்
தொகு- UEFA team profile
- FIFA team profile பரணிடப்பட்டது 2018-06-15 at the வந்தவழி இயந்திரம்