வாகுபி காசுரி

வாகுபி காசுரி (Wahbi Khazri, அரபு மொழி: وهبي خزري; பிறப்பு 8 பெப்ரவரி 1991) துனீசியத் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் லீக் 1 கழகமான ரென்னசிற்கு சுந்தர்லாந்து கழகத்திடமிருந்து கடனாகத் தரப்பட்டுள்ளார். பன்னாட்டுப் போட்டிகளில் துனீசியத் தேசிய காற்பந்து அணிக்காக ஆடுகிறார். இவ்வணிகளில் தாக்கும் நடுக்கள வீரராகவும் பக்கவாட்டு வீரராகவும் விளையாடுகின்றார்.

வாகுபி காசுரி
Wahbi Khazri.jpg
2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் காசுரி
சுய விவரம்
முழுப்பெயர்வாகுபி காசுரி[1]
பிறந்த தேதி8 பெப்ரவரி 1991 (1991-02-08) (அகவை 30)
பிறந்த இடம்அசாக்சியோ, பிரான்சு
உயரம்1.82 மீ[2]
ஆடும் நிலைதாக்கும் நடுக்கள வீரர் / பக்கவாட்டு வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ரென்னசு (சுந்தர்லாந்து கழகத்திலிருந்து கடனாக)
எண்8
இளநிலை வாழ்வழி
1995–2003இளையோர் அசாக்சியோ
2003–2009பாஸ்தியா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2009–2014பாஸ்தியா171(31)
2014–2016போர்தொ52(14)
2016–சுந்தர்லாந்து38(3)
2017–2018→ ரென்னசு (கடன்)24(9)
தேசிய அணி
2009துனீசியா 20 கீழ்1(1)
2012பிரான்சு U21 கீழ்1(0)
2013–துனீசியா39(14)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 06:39, 20 மே 2018 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 28 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

இவர் தமது காற்பந்தாட்ட வாழ்நாளை பாஸ்தியா கழகத்தில் தொடங்கினார். 183 ஆட்டங்களில் 34 கோல்கள் அடித்து தேசிய வாகையர் போட்டியிலும் லீக் 2 போட்டிகளிலும் தொடர்ந்து இரு பருவங்களில் வெற்றியை ஈட்டித் தந்தார். போர்தொவில் 18 மாதங்களைக் கழித்த காசுரி சனவரி 2016இல் சுநர்லாந்து கழகத்தில் இணைந்தார். 2017-18ஆம் பருவத்தில் ரென்னசு கழகத்திற்கு கடனாகத் தரப்பட்டுள்ளார்.

காசுரி துனீசிய 20 கீழோர் அணியிலும் 21 கீழோர் அணியிலும் ஆடியுள்ளார். மூத்தோர் போட்டிகளில் 2013இலிருந்து பங்கேற்கிறார். துனீசியாவிற்காக ஆபிரிக்கா நாடுகள் கோப்பையில் மூன்று முறையும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Squads for 2016/17 Premier League confirmed". Premier League (1 September 2016). பார்த்த நாள் 11 September 2016.
  2. "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). Fédération Internationale de Football Association (4 June 2018).

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகுபி_காசுரி&oldid=2721580" இருந்து மீள்விக்கப்பட்டது