பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (Fisht Olympic Stadium, உருசியம்: Олимпийский стадион «Фишт», ஒ.பெ Olimpiyskiy stadion "Fisht", பஒஅ: [ɐlʲɪmˈpʲijskʲɪj stədʲɪˈon ˈfʲiʂt]) உருசியாவின் சோச்சியில் அமைந்துள்ள புறவெளி விளையாட்டரங்கம். சோச்சி ஒலிம்பிக் பூங்காவில் உள்ள இந்த விளையாட்டரங்கம் மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஃபிஸ்த் சிகரத்தை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 40,000 ஆகும். இது 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2014 குளிர்கால இணை ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. அவற்றின் துவக்க விழாவின்போதும் நிறைவு விழாவின்போதும் பயன்படுத்தப்பட்டது.
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு | |
---|---|
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கம் - சனவரி 2018. | |
இடம் | சோச்சி, கிராஸ்னதார் பிரதேசம், உருசியா |
அமைவு | 43°24′08″N 39°57′22″E / 43.4022667°N 39.9561111°E |
திறவு | 2013[1] |
உரிமையாளர் | உருசிய அரசு (ஒலிம்ப்சுட்ராய்) |
தரை | புல் தரை |
கட்டிட விலை | அமெரிக்க $779 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | பாப்புலசு,[2] புரோ அப்போல்டு |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 41,220 (பீபா உலகக் கோப்பை) 40,000 ( பீபா உலகக் கோப்பைக்குப் பிறகு) |
பரப்பளவு | 105 x 68 மீ |
இந்த விளையாட்டரங்கம் முதலில் மூடிய உள்ளரங்கமாகவே கட்டப்பட்டது; 2016இல் இது மீளமைக்கப்பட்டு திறந்தவெளி கால்பந்து விளையாட்டரங்கமாக மாற்றப்பட்டது. இது 2017இல் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளுக்காகவும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காகவும் பயன்பட்டது.
போட்டிகளும் முடிவுகளும்
தொகு2017 பீபா கூட்டமைப்புக்களின் கோப்பை
தொகுநாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப் பதிவு |
---|---|---|---|---|---|---|
19 சூன் 2017 | 18:00 | ஆத்திரேலியா | 2–3 | செருமனி | குழு பி | 28,605[3] |
21 சூன் 2017 | 21:00 | மெக்சிக்கோ | 2–1 | நியூசிலாந்து | குழு ஏ | 25,133[4] |
25 சூன் 2017 | 18:00 | செருமனி | 3–1 | கமரூன் | குழு பி | 30,230[5] |
29 சூன் 2017 | 21:00 | செருமனி | 4–1 | மெக்சிக்கோ | அரை-இறுதி | 37,923[6] |
2018 பீபா உலகக்கோப்பை
தொகு
நாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
15 சூன் 2018 | 21:00 | போர்த்துகல் | – | எசுப்பானியா | குழு பி | |
18 சூன் 2018 | 18:00 | பெல்ஜியம் | – | பனாமா | குழு ஜி | |
23 சூன் 2018 | 21:00 | செருமனி | – | சுவீடன் | குழு எஃப் | |
26 சூன் 2018 | 17:00 | ஆத்திரேலியா | – | பெரு | குழு சி | |
30 சூன் 2018 | 21:00 | வாகையாளர் குழு ஏ | – | இரண்டாமவர் குழு பி | பதின்மர் சுற்று | |
7 சூலை 2018 | 21:00 | வாகையாளர் ஆட்டம் 51 | – | வாகையாளர் ஆட்டம் 52 | கால்-இறுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fisht Olympic Stadium". Sochi2014.com. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sochi 2014 Main Stadium". portfolio.populous.com. Archived from the original on 2010-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
- ↑ "Match report – குழு B – Australia - Germany" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 19 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2017.
- ↑ "Match report – குழு A – Mexico - New Zealand" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 21 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
- ↑ "Match report – குழு B – Germany - Cameroon" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 25 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2017.
- ↑ "Match report – Semi-final – Germany - Mexico" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 29 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-21. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2017.