மோர்தோவியா அரங்கு
மோர்தோவியா அரங்கு (Mordovia Arena, உருசியம்: «Мордовия Арена») உருசியக் கூட்டமைப்பில் தன்னாட்சி பெற்ற மொர்தோவியா குடியரசின் தலைநகராகிய சரான்சுக்கில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்களுக்காக சீரமைக்கப்பட்டுள்ளது. தவிரவும் மோர்தோவியா சாரன்சுக்கி கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் உள்ளது. இதன் கொள்ளளவு 44,442 பார்வையாளர்களாகும். இந்த அரங்கின் மொத்தப் பரப்பு 122,700 சதுர மீட்டராகும்.
மோர்தோவியா அரங்கு | |
---|---|
இடம் | சரான்சுக், மொர்தோவியா, உருசியா |
அமைவு | 54°10′58″N 45°12′05″E / 54.18278°N 45.20139°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 2010 |
எழும்புச்செயல் முடிவு | 2010-2018 |
திறவு | |
உரிமையாளர் | |
ஆளுனர் | மோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம் |
தரை | புல்தரை |
கட்டிட விலை | $300 மில்லியன் |
குத்தகை அணி(கள்) | மோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம் |
அமரக்கூடிய பேர் | 44,442 (2018 பிபா உலகக்கோப்பை) 30,000 (உலகக்கோப்பைக்குப் பிறகு) |
இந்த அரங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது; நகரின் முதன்மையான கட்டமைப்புகளிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. இதன் வடிவமைப்பு சூரியனின் படிமத்தை ஒத்துள்ளது. இது மோர்தோவிய மக்களின் தொன்மை மரபுகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1] பிபா உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சாரான்சுக் மற்றும் மோர்தோவியாவின் மிகப்பெரும் விளையாட்டரங்காகவும் மனமகிழ் மையமாகவும் விளங்கும்.[2]
2018 பிபா உலகக் கோப்பை
தொகுஇந்த விளையாட்டரங்கில் 2018 பிபா உலகக் கோப்பைப் போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 21, 2018 அன்று சோதனை ஆட்டம் ஒன்று நடத்தப்பட்டது.[3]
நாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
16 சூன் 2018 | 19:00 | பெரு | – | டென்மார்க் | குழு சி | |
19 சூன் 2018 | 15:00 | கொலம்பியா | – | சப்பான் | குழு எச் | |
25 சூன் 2018 | 21:00 | ஈரான் | – | போர்த்துகல் | குழு பி | |
28 சூன் 2018 | 21:00 | பனாமா | – | தூனிசியா | குழு ஜி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Стадион ЧМ-2018 "Мордовия-Арена" получил разрешение на ввод в эксплуатацию". worldcup2018.tass.ru. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
- ↑ "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums" (in en-GB). 7 December 2010. https://www.telegraph.co.uk/sport/football/picturegalleries/8187285/Russia-2018-Fifa-World-Cup-artists-impressions-of-stadiums.html?image=11.
- ↑ "Mordovia Arena set to host first test match in April ahead of 2018 FIFA World Cup". TASS. 29 September 2017. http://tass.com/sport/968140.