எடின்சன் கவானி

எடின்சன் இராபர்ட்டோ கவானி கோமெசு (Edinson Roberto Cavani Gómez, எசுப்பானிய ஒலிப்பு: [ˈeðinsoŋ kaˈβani]; பிறப்பு 14 பெப்ரவரி 1987) உருகுவை நாட்டுத் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் பாரிசு செயின்ட்-செர்மைன் கழக அணியிலும் உருகுவை தேசிய காற்பந்து அணியிலும் முன்கள தாக்குநராக விளையாடுகிறார்.

எடின்சன் கவானி
Edinson Cavani 2018.jpg
உருசியாவில் நடைபெற்ற 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டத்தின்போது
சுய தகவல்கள்
முழுப் பெயர்எடின்சன் இராபர்ட்டோ கவானி கோமெசு[1]
பிறந்த நாள்14 பெப்ரவரி 1987 (1987-02-14) (அகவை 36)
பிறந்த இடம்சால்ட்டோ, உருகுவை
உயரம்1.88 மீ[2]
ஆடும் நிலை(கள்)தாக்கு வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பாரிசு செயின்ட்-செர்மைன்
எண்9
இளநிலை வாழ்வழி
2000–2005டானுபியோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2007டானுபியோ25(9)
2007–2010பாலெர்மோ109(34)
2010–2013நபோலி104(78)
2013–பாரிசு செயின்ட்-செர்மன்165(116)
பன்னாட்டு வாழ்வழி
2007உருகுவை 20 கீழ்14(9)
2012உருகுவை ஒலிம்பிக் அணி5(3)
2008–உருகுவை105(45)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 4 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 18:00, 30 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கவானி தனது காற்பந்தாட்ட வாழ்வை மொன்டிவிடீயோவிலுள்ள டானுபியோ கழகத்தில் தொடங்கினார். இரண்டாண்டுகள் இங்கு விளையாடிய பிறகு 2007இல் இத்தாலிய பலெர்மோ அணிக்கு மாறினார். இந்த அணிக்கு நான்கு பருவங்களுக்கு ஆடினார்; அச்சமயம் 109 ஆட்டங்களில் 34 கோல்கள் எடுத்தார். 2010இல் கவானி நபோலி கழகத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011–12 பருவத்தில் தனது முதல் விருதாக இத்தாலியக் கோப்பையை (Coppa Italia) வென்றார். ஐந்து கோல்கள் எடுத்த இவரே மிகக் கூடிய கோல்களை எடுத்தவரானார். நபோலி அணியில் முதலிரு பருவங்களில் 33 கோல்களும் மூன்றாவது பருவத்தில் 38 கோல்களும் எடுத்துச் சாதனை புரிந்தார். சீரீ ஏ லீக்கில் மிக அதிகமான கோல்களாக 29 கோல்களை அடித்துள்ளார். சூலை 16, 2013இல் கவானி பாரிசு செயின்ட்- செர்மைன் கழகத்தால் €64 மில்லியன் தொகைக்கு எடுக்கப்பட்டார். இது பிரான்சிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் உயர்ந்த தொகையாகும்.[3] சனவரி 2018இல் இக்கழகத்தில் 157 கோல்களை அடித்து சாதனை ஏற்படுத்தினார். இந்தக் கழகத்திற்கு நான்கு லீக் 1 பட்டங்களையும் 5 கூப் டெலா லீக் பட்டங்களையும் நான்கு கூப் டெலா பிரான்சு பட்டங்களையும் பெற்றுத் தந்துள்ளார்.[4] 2016–17 பருவத்தின் சிறந்த லீக் 1 ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

கவானி பன்னாட்டுப் போட்டிகளில் உருகுவை அணியில் விளையாடுகின்றார். பன்னாட்டு ஆட்டங்களில் தமது முதல் கோலை பெப்ரவரி 6, 2008இல் கொலம்பியாவிற்கு எதிராக அடித்தார். இதன் பிறகு உருகுவைக்காக 105 முறை ஆடி 45 கோல்களை அடித்துள்ளார். இது உருகுவையின் அணியில் லூயிசு சுவாரெசுக்கு அடுத்த நிலையாகும். இதுவரை ஆறு முதன்மை போட்டிகளில் பங்கேற்றுள்ளார்: the 2010 உலகக்கோப்பை காற்பந்து, 2011 கோப்பா அமெரிக்கா, 2013 பீபா கூட்டமைப்பு கோப்பை, 2014 உலகக் கோப்பை, 2015 கோப்பா அமெரிக்கா மற்றும் கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி. 2010 உலகக்கோப்பையில் இவரெடுத்த கோலினால் உருகுவை நான்காமிடத்தை எட்டியது. 2011இல் 15ஆவது கோப்பா அமெரிக்கா பட்டத்தை வென்று சாதனை புரிந்த உருகுவை அணியில் பங்கேற்றார். 2018 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் 11 கோல்கள் எடுத்து மிக உயர்ந்த கோல்களை அடித்த வீரரானார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Edinson Roberto CAVANI GOMEZ". SSC Napoli. 29 August 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2018 FIFA World Cup: List of players" (PDF). FIFA. 18 June 2018. p. 32. 12 ஆகஸ்ட் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 ஜூலை 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. <"Archived copy". 19 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 July 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)>
  4. "Edinson CAVANI". Ligue 1. http://www.ligue1.com/joueur/cavani-edinson-roberto. பார்த்த நாள்: 31 May 2015. 
  5. "Cavani and Mbappe win top Ligue 1 awards". ESPN. http://www.espn.co.uk/football/french-ligue-1/story/3127050/edinson-cavani-and-kylian-mbappe-scoop-up-top-ligue-1-awards. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடின்சன்_கவானி&oldid=3586329" இருந்து மீள்விக்கப்பட்டது