ரொமேலு லுக்காக்கு
ரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார்.[4] இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார்.[5] பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1][6]
மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக 2017இல் விளையாடியபோது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ரொமுலு மெனாமா லுக்காக்கு பொலிங்கோலி [1] | ||
பிறந்த நாள் | 13 மே 1993[2] | ||
பிறந்த இடம் | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் | ||
உயரம் | 1.90 மீ[3] | ||
ஆடும் நிலை(கள்) | அடிப்பாளர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | மான்செஸ்டர் யுனைடெட் | ||
எண் | 9 | ||
இளநிலை வாழ்வழி | |||
1999–2003 | ரூபெல் பூம் | ||
2003–2004 | கேஎப்சி விந்தாம் | ||
2004–2006 | லியர்செ | ||
2006–2009 | அன்டர்லெக்ட | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2009–2011 | அன்டர்லெக்ட் | 73 | (33) |
2011–2014 | செல்சீ | 10 | (0) |
2012–2013 | → வெஸ்ட் பிரோம்விச் அல்பியான் (கடன்) | 35 | (17) |
2013–2014 | → எவர்டன் (கடன்) | 31 | (15) |
2014–2017 | எவர்டன் | 110 | (53) |
2017– | மான்செஸ்டர் யுனைடெட் | 34 | (16) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2008 | பெல்ஜியம் U15 | 4 | (1) |
2011 | பெல்ஜியம் U18 | 1 | (0) |
2009 | பெல்ஜியம் U21 | 5 | (1) |
2010– | பெல்ஜியம் | 70 | (38) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 17:45, 29 ஏப்ரல் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 16:56, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
லுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல் பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lukaku: Romelu Menama Lukaku Bolingoli: Player". BDFutbol. பார்க்கப்பட்ட நாள் 3 June 2018.
- ↑ "ரொமேலு லுக்காக்கு". Barry Hugman's Footballers. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
- ↑ "Romelu Lukaku: Overview". Premier League. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
- ↑ "Romelu Lukaku becomes fourth-youngest player to score 50 goals before turning 23 in Premier League history". Daily Mail. 21 November 2015. http://www.dailymail.co.uk/sport/football/article-3328456/Romelu-Lukaku-joins-Cristiano-Ronaldo-Wayne-Rooney-50-Premier-League-goals-turning-23.html. பார்த்த நாள்: 22 November 2015.
- ↑ Wright, Nick (31 March 2018). "Romelu Lukaku's 100 Premier League goals in stats". Sky Sports. http://www.skysports.com/football/news/11667/11311506/romelu-lukakus-100-premier-league-goals-in-stats. பார்த்த நாள்: 31 March 2018.
- ↑ "Duivels winnen geen zieltjes met krappe oefenzege, Lukaku topschutter aller tijden". m.live.sporza.be. Archived from the original on 2017-11-17. பார்க்கப்பட்ட நாள் 2018-06-19.