தி வாசிங்டன் போஸ்ட்

(தி வாஷிங்டன் போஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) என்பது அமெரிக்க நாளிதழ் ஆகும். இது 1877 இல் துவக்கப்பட்டு, வாசிங்டன், டி. சி.யில் இருந்து வெளியிடப்படுகிறது.[7]

தி வாஷிங்டன் போஸ்ட்
The Washington Post
"Democracy Dies in Darkness"
வகைநாளிதழ்
வடிவம்விரிதாள்
உரிமையாளர்(கள்)டபிளுயூபி கம்பெனி எல்எல்சி
(நாஷ் ஹோல்டிங் எல்எல்சி)
(ஜெப் பெசோஸ்)[1][2]
நிறுவுனர்(கள்)ஸ்டில்சன் ஹட்சின்ஸ்
வெளியீட்டாளர்ஃப்ரெட் ரியான்[3]
ஆசிரியர்மார்ட்டின் பரோன்[2]
எழுத்துப் பணியாளர்கள்Approx. 740 journalists[4]
நிறுவியதுதிசம்பர் 6, 1877; 146 ஆண்டுகள் முன்னர் (1877-12-06)
மொழிஆங்கிலம்
தலைமையகம்
விற்பனை
  • 474,767 daily
  • 838,014 Sunday[6]
(as of 2013 மார்ச்)
ISSN0190-8286
OCLC எண்2269358
இணையத்தளம்www.washingtonpost.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு

அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாசிங்டன், டி. சி., மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது விரிதாளாக பிரசுரிக்கப்படுகிறது.

இந்த செய்தித்தாள் 47 புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது. 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆறு தனித்திறன் புலிட்சர்களும் இதில் அடங்கும், 2002 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் ஏழு விருதுகள் பெற்றது. ஒரு ஆண்டில் ஒரே ஒரு செய்தித்தாளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பரிசுகளில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[8] போஸ்ட் பத்திரிகையாளர்கள் 18 நிமேன் பெல்லோஷிப்ஸையும் 368 வெள்ளை மாளிகை செய்தி ஒளிப்பட சங்க விருதுகளையும் பெற்றுள்ளனர். 1970 களின் முற்பகுதியில், செய்தித்தாள் வரலாற்றில் மிக பிரபலமான புலனாய்வு, நிருபர்களான பாப் உட்வார்ட் மற்றும் கார்ல் பெர்ன்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு 'வாட்டர்கேட் ஊழல்' என்று அறியப்பட்ட விசாரணைக்கு தலைமைத் தாங்கினர்; இந்த பத்திரிக்கை அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பதவிவிலகும் நிலை ஏற்பட்டது.[9]

2013 ஆம் ஆண்டில், அதன் நீண்டகால உரிமையாளர் குடும்பமான, கிரஹாம் குடும்பமானது செய்தித்தாள் நிறுவனத்தை அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு 250 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது.[1][2][10]

வரலாறு

தொகு

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பத்திரிக்கை துவங்கிய பிறகு, 1889 முதல் 1933 வரை, பலரிடம் கைமாறி யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946 இல், அவர் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார்.

பிலிப் கிரஹாம் தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கிரஹாமால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு பத்திரிக்கை சரிவை சந்திக்கத் தொடங்கியது. 1963 இல் கிரஹாம் தற்கொலை செய்துகொண்டதால், பத்திரிகை கிரஹாமின் மனைவி கேத்தரின் கிரஹாமின் கைகளில் வந்து சேர்ந்து பின் தலை நிமிர்ந்தது.[11] அதன் பிறகு அவர்களின் குடும்ப சொத்தாக இருந்த இந்த இதழ் அக்கடும்பத்தால் 2013 ஆம் ஆண்டில், அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு விற்கப்பட்டது.


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Fahri, Paul (1 October 2013). "The Washington Post Closes Sale to Amazon Founder Jeff Bezos". The Washington Post (Washington, D.C.: The Washington Post). பன்னாட்டுத் தர தொடர் எண்:0190-8286. https://www.washingtonpost.com/business/economy/washington-post-closes-sale-to-amazon-founder-jeff-bezos/2013/10/01/fca3b16a-2acf-11e3-97a3-ff2758228523_story.html. பார்த்த நாள்: 1 October 2013. "Bezos's $250 million purchase was completed as expected with the signing of sale documents. The signing transfers the newspaper and other assets from The Washington Post Co. to Nash Holdings, Bezos's private investment company." 
  2. 2.0 2.1 2.2 Clabaugh, Jeff (1 October 2013). "Jeff Bezos Completes Washington Post Acquisition". Washington Business Journal (American City Business Journals). http://www.bizjournals.com/washington/news/2013/10/01/jeff-bezos-completes-washington-post.html. பார்த்த நாள்: 1 October 2013. "Amazon founder Jeff Bezos is now officially the head of a newspaper, completing his $250 million acquisition of the Washington Post's publishing business Tuesday afternoon." 
  3. Somaiya, Ravi (2 September 2014). "Publisher of The Washington Post Will Resign". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2014/09/03/business/Katharine-Weymouth-publisher-of-The-Washington-Post-will-resign.html?_r=0. பார்த்த நாள்: 12 June 2015. 
  4. "Contact The Washington Post reporters, columnists and bloggers". The Washington Post இம் மூலத்தில் இருந்து 22 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120122043722/http://projects.washingtonpost.com/staff/email/. 
  5. Achenbach, Joel (10 December 2015). "Hello, new Washington Post, home to tiny offices but big new ambitions". பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
  6. Total Circ for US Newspapers at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2013-05-03)
  7. "The Washington Post – 134 years young". The Washington Post. 6 December 2011. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
  8. Howard Kurtz (8 April 2008). "The Post Wins 6 Pulitzer Prizes". The Washington Post. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/04/07/AR2008040701359_2.html?hpid=artslot&sid=ST2008040701372. பார்த்த நாள்: 8 August 2008. 
  9. "Walter Reed and Beyond". The Washington Post. https://www.washingtonpost.com/wp-srv/nation/walter-reed/index.html. பார்த்த நாள்: 25 May 2010. 
  10. Farhi, Paul (5 August 2013). "Washington Post To Be Sold to Jeff Bezos, the Founder of Amazon". The Washington Post (Washington, D.C.: The Washington Post Company). பன்னாட்டுத் தர தொடர் எண்:0190-8286. https://www.washingtonpost.com/national/washington-post-to-be-sold-to-jeff-bezos/2013/08/05/ca537c9e-fe0c-11e2-9711-3708310f6f4d_story.html?hpid=z1#. பார்த்த நாள்: 5 August 2013. 
  11. ந.வினோத் குமார் (19 சனவரி 2018). "ஒரு நாளிதழின் வரலாறு! - தி போஸ்ட்(ஆங்கிலம்)". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வாசிங்டன்_போஸ்ட்&oldid=3577474" இலிருந்து மீள்விக்கப்பட்டது