உருசிய தேசிய காற்பந்து அணி
உருசிய தேசிய காற்பந்து அணி (Russia national football team, உருசியம்: национа́льная сбо́рная Росси́и по футбо́лу) பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் உருசியாவின் சார்பில் பங்கேற்கும் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணியை உருசிய காற்பந்து ஒன்றியம் (உருசியம்: Российский Футбольный Союз) நிருவகிக்கிறது. உருசியா ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. 1960 இல் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் சோவியத் அணியாகப் பங்குபற்றி ஐரோப்பியக் கோப்பையை வென்றது.[2]
அடைபெயர் | Сборная (ஸ்போர்னயா, தேசிய அணி) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | உருசிய காற்பந்து ஒன்றியம் Российский футбольный союз | ||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | இசுதானிசுலாவ் செர்சேசொவ் | ||
அணித் தலைவர் | ஈகர் அக்கின்ஃபியேயெவ் | ||
Most caps | சிர்கேய் இக்னசேவிச் (127) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பட்டியல்
| ||
தன்னக விளையாட்டரங்கம் | லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ | ||
பீஃபா குறியீடு | RUS | ||
பீஃபா தரவரிசை | 70 ▼ 4 (7 சூன் 2018) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 3 (ஏப்ரல் 1996) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 70 (சூன் 2018–இன்று) | ||
எலோ தரவரிசை | 38 5 (7 சூலை 2018) | ||
அதிகபட்ச எலோ | 7 (ஆகத்து 2009) | ||
குறைந்தபட்ச எலோ | 50 (29 மார்ச் 2017) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
உருசியா 2–0 மெக்சிக்கோ (மாஸ்கோ, உருசியா; 16 ஆகத்து 1992) | |||
பெரும் வெற்றி | |||
சான் மரீனோ 0–7 உருசியா (சான் மரீனோ, 7 சூன் 1995) லீக்கின்ஸ்டைன் 0–7 உருசியா (வாதூசு, லீக்கின்ஸ்டைன்; 8 செப்டம்பர் 2015) | |||
பெரும் தோல்வி | |||
போர்த்துகல் 7–1 உருசியா (லிஸ்பன், போர்த்துகல்; 13 அக்டோபர் 2004) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1958 இல்) | ||
சிறந்த முடிவு | நான்காவது இடம் (1966)[1] | ||
ஐரோப்பிய வாகையாளர் | |||
பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1960 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர் (1960) | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2017 இல்) | ||
சிறந்த முடிவு | குழுநிலை (2017) |
உருசிய அணி (1991 சோவியத் பிளவின் பின்னர்) மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. 1994, 2002, 2014); 2018-இல் உலகக்கோப்பையை நடத்தும் நாடாக விளையாடத் தகுதி பெற்று, காலிறுதிப் போட்டி வரை விளையாடியது. நான்கு முறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது (1996, 2004, 2008 மற்றும் 2012). யூரோ 2008- இலேயே முதன்முறையாக குழுநிலையைத் தாண்டி அடுத்த நிலைக்குச் சென்றனர்.
உருசிய அணி தனது உள்ளக விளையாட்டுகளை மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி அரங்கில் விளையாடுகிறது. இதன் தற்போதைய பயிற்சியாளர் இசுதானிசுலாவு செர்சேசொவ் ஆவார்.
குறிப்புதவிகள்
தொகு- ↑ உருசிய அணியின் சிறந்த பெறுபேறு: 2018 இல் காலிறுதி. ஆனாலும், உருசியா சோவியத் ஒன்றியத்தின் பதில் அணியாக பீஃபா கருதுகிறது.
- ↑ "Russia– Association Information". FIFA.com. 15 July 2015. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 24-10-2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- Official website (in English)
- FIFA profile பரணிடப்பட்டது 2018-06-18 at the வந்தவழி இயந்திரம்
- Russian National Football Team பரணிடப்பட்டது 2020-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Russia national team 1912–
- RSSSF archive of results 1912–2003
- RSSSF archive of most capped players and highest goalscorers
- Planet World Cup archive of results in the World Cup
- Planet World Cup archive of squads in the World Cup
- Planet World Cup archive of results in the World Cup qualifiers