சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி

சோவியத் ஒன்றியம் சார்பில் பங்கேற்ற முன்னாள் ஆண்கள் தேசியக் கால்பந்தாட்ட அணி

சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி (Soviet Union national football team; உருசியம்: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу, sbornaya Sovyetskogo Soyuza po futbolu), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, உருசியா தேசிய காற்பந்து அணியாகத் தொடர்கிறது;[1] ஃபிஃபாவின் விதிமுறைகளின்படி, சோவியத் யூனியன் அணியின் செயல்பாடுகள் உருசிய கால்பந்து அணியின் சேர்க்கப்பட்டன.

சோவியத் யூனியன்
Shirt badge/Association crest
அடைபெயர்சிவப்பு இராணுவம் (Red Army)
கூட்டமைப்புசோவியத் யூனியன் கால்பந்துக் கூட்டமைப்பு
Most capsOleg Blokhin (112)
அதிகபட்ச கோல் அடித்தவர்Oleg Blokhin (42)
தன்னக விளையாட்டரங்கம்Central Lenin Stadium (after 1956)
Dynamo Stadium (before 1956)
Vorovsky Stadium (before 1928)
பீஃபா குறியீடுURS
அதிகபட்ச எலோ1
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 சோவியத் ஒன்றியம் 3–0 துருக்கி 
(Moscow, Soviet Union; 16 November 1924)
Last international

 சைப்பிரசு 0–3 சோவியத் ஒன்றியம் 
(இலார்னாக்கா, Cyprus; 13 November 1991)
பெரும் வெற்றி
 சோவியத் ஒன்றியம் 11–1 இந்தியா 
(Moscow, Soviet Union; 16 September 1955)
 பின்லாந்து 0–10 சோவியத் ஒன்றியம் 
(எல்சிங்கி, Finland; 15 August 1957)
பெரும் தோல்வி
 இங்கிலாந்து 5–0 சோவியத் ஒன்றியம் 
(இலண்டன், இங்கிலாந்து; 22 October 1958)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1958 இல்)
சிறந்த முடிவுநான்காம் இடம், 1966
யூரோ
பங்கேற்புகள்6 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1960
வென்ற பதக்கங்கள்
Men’s Football
தங்கப் பதக்கம் – முதலிடம் 1956 Melbourne Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 Seoul Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1972 Munich Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1976 Montreal Team

சோவியத் யூனியன் அணியானது, உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிக்கு, 1974 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தகுதிபெறாமல் இருந்திருக்கிறது. மொத்தமாக, ஏழுமுறை உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது. 1966 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்றதே இவ்வணியின் சிறப்பான செயல்பாடாகும்; இதில், அரையிறுதியில் மேற்கு செருமனி அணியிடம் 2-1 என்ற இலக்குக் கணக்கில் தோல்வியுற்றது.

சோவியத் யூனியன், ஐந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது. முதன்முதலில் நடத்தப்பட்ட 1960 யூரோவின் இறுதிப் போட்டியில் யூகோஸ்லாவிய அணியை 2-1 என்ற இலக்குக் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், 1964, 1972 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றது; 1968-இல் நான்காம் இடம்பெற்றது.

சோவியத் யூனியன், கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றது; 1956 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றது.

குறிப்புகள்

தொகு
  1. "FIFA". Archived from the original on 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.

வெளியிணைப்புகள்

தொகு