இலார்னாக்கா

இலார்னாக்கா (Larnaca, கிரேக்க மொழி: Λάρνακα, துருக்கியம்: Larnaka அல்லது İskele) சைப்பிரசின் தென்கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும்; இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நிக்கோசியா, லிமாசோல் அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது. நகரியப் பகுதியின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி 84,591 ஆகும்.

இலார்னாக்கா
மேல் இடதிலிருந்து வலதாக: அதினான் அவென்யூ, கோட்டை, உப்புநீரேறியும் அலா சுல்தான் டெக்கேயும், புனித லாசரசு தேவாலயம்
நாடு சைப்பிரசு
மாவட்டம்இலார்னாக்கா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி மன்றம்
 • மேயர்அண்ட்ரியாசு லூரூட்சியாடிசு
ஏற்றம்85 ft (26 m)
மக்கள்தொகை (2011)[1]
 • நகரம்51,468
 • நகர்ப்புறம்84,591
 The urban population is the aggregate of the populations of Larnaca, Aradippou, Livadia, Dromolaxia and Meneou.
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு+357 24
இணையதளம்www.larnaka.org.cy

பனைமரங்களடர்ந்த கடற்கரைக்குப் புகழ்பெற்ற இலார்னாக்காவில் புனிந லசாரசு தேவாலயம், அலா சுல்தான் டெக்கே, காமரெசு நீர்க்கட்டுக் கால்வாய், மற்றும் பழங்கால கோட்டை சுற்றுலாத் தலங்களாக உள்ளன. உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர் செனோவின் பிறந்த இடமான கிடியோன் நகர அரசு இடிபாடுகளின் மீது இந்த நகரம் எழுந்துள்ளது.

நாட்டின் முதன்மை வானூர்தி நிலையமான இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குள்ளது. இங்கு பயணியர் மற்றும் சரக்குக் போக்குவரத்திற்கான துறைமுகமும் உள்ளது.

ஒளிப்படத் தொகுப்பு தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. "Population - Place of Residence, 2011". Statistical Service of Cyprus (CYSTAT). 17 April 2014. Archived from the original on 16 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலார்னாக்கா&oldid=3927908" இலிருந்து மீள்விக்கப்பட்டது