சபிவாக்கா (Zabivaka; உருசியம்: Забива́ка, "கோல் அடிப்பவர்") என்பது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் உத்தியோகபூர்வ நற்றாளி ஆகும். இந்த நற்றாளி 21 ஒக்டோபர் 2016 அன்று வெளிப்படுத்தப்பட்டது. இது ஒரு மாந்தவுருவக ஐரோவாசியா ஓநாயை (Canis lupus lupus) பிரதிபலிக்கிறது. இது பழுப்பும் வெள்ளையும் கொண்ட உரோமத்துடன், "RUSSIA 2018" என்ற எழுத்துக்கள் கொண்ட மேற்சட்டை அணிந்தவாறு, செம்மஞ்சள் காப்புக் கண்ணாடி அணிந்து காணப்படும். வடிவமைப்பாளர்களின் கருத்துப்படி, பனிச்சறுக்கில் பயன்படுத்தப்படும் காப்புக் கண்ணாடி அல்ல, மாறாக அது மிதிவண்டி ஒட்டம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் காப்புக் கண்ணாடி ஆகும். மேலும், அத பற்றிக் குறிப்பிடுகையில், "சபிவாக்கா களத்தில் மிகவும் வேகமாக இருப்பதால் அவனுக்கு கண் பாதுகாப்புத் தேவை".[1] மேற்சட்டையிலும் காற்சட்டையிலும் உள்ள வெள்ளை, நீல, சிவப்பு நிறங்கள் உருசிய அணியின் தேசிய நிறங்கள் ஆகும்.

சபிவாக்கா, நற்றாளி

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சபிவாக்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபிவாக்கா&oldid=3607082" இலிருந்து மீள்விக்கப்பட்டது