இவான் பெரிசிச்

இவான் பெரிசிச் (Ivan Perišić, Croatian pronunciation: [ǐʋan pěriʃitɕ];[3][4] பிறப்பு 2 பெப்ரவரி 1989) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இன்டர் மிலானிலும் குரோவாசியா தேசிய அணியிலும் நடுக்கள வீரராக பக்கவாட்டில் விளையாடுகிறார். தவிர தாக்கும் நடுக்களத்தவராகவும் இரண்டாம் தாக்குபவராகவும் விளையாடக் கூடியவர்.

இவான் பெரிசிச்

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின்போது
சுய தகவல்கள்
முழுப் பெயர்இவான் பெரிசிச்[1]
பிறந்த நாள்2 பெப்ரவரி 1989 (1989-02-02) (அகவை 35)
பிறந்த இடம்இசுப்ளிட்,
குவாரேசியா சோசலிசக் குடியரசு,
யுகோசுலாவியா
உயரம்1.86 மீ[2]
ஆடும் நிலை(கள்)பக்கவாட்டு வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
இன்டர் மிலான்
எண்44
இளநிலை வாழ்வழி
2000–2006அசுதுக் இசுப்ளிட்
2006–2007சோச்சோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2007–2009Sochaux B
2009Roeselare (loan)17(5)
2009–2011Club Brugge70(31)
2011–2013Borussia Dortmund42(9)
2013–2015VfL Wolfsburg70(18)
2015–இன்டர் மிலான்107(29)
பன்னாட்டு வாழ்வழி
2005குரோவாசியா 17கீழ்7(0)
2007குரோவாசியா 19கீழ்2(0)
2009–2010குரோவாசியா 21 கீழ்8(3)
2011–குரோவாசியா72(20)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23:00, 11 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

இளவயதில் அஜ்துக் இசுப்ளிட் கழகத்திலும் சோச்சோ கழகத்திலும் பயிற்சி பெற்ற பெர்சிச் புருக்கெ கழகத்தில் ஆடும்போது, பெல்ஜியத்தின் 2011ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிமுகத்தால் பொருசியா டோர்ட்மண்டு கழகத்தில் ஆட அழைக்கப்பட்டார். சனவரி 2013இல் €8 மில்லியனுக்கு வோல்சுபர்கால் எடுக்கப்பட்டார். இரண்டரை பருவங்கள் அங்கு ஆடிய பின்னர் இன்டர் மிலனுக்கு €16 மில்லியனுக்கு இடம் பெயர்ந்தார்.

பெரிசிச் தனது குவாரேசியா நாட்டு தேசிய அணியில் 2011இல் அறிமுகமானார்.தொடர்ந்து யூரோ 2012, the 2014 உலகக் கோப்பை, யூரோ 2016, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் குவாரேசியா தேசிய அணியில் பங்கேற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF). FIFA. 11 June 2014. p. 12 இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170806141058/http://www.fifadata.com/document/FWC/2014/pdf/FWC_2014_SquadLists.pdf. பார்த்த நாள்: 8 July 2014. 
  2. "Ivan Perišić". FC Internazionale Milano. Archived from the original on 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Ìvan". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018. Ìvan
  4. "Pètar". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018. Pèrišić
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_பெரிசிச்&oldid=3579944" இலிருந்து மீள்விக்கப்பட்டது