கலினின்கிராத் அரங்கு
கலினின்கிராத்து அரங்கு (Kaliningrad Stadium, உருசியம்: Стадион Калининград) என்றும் பால்திகா அரங்கு (Arena Baltika) என்றும் அறியப்படும் இந்த கால்பந்து விளையாட்டரங்கம் உருசியாவின் புறநில ஆட்சிப்பகுதியாக பால்டிக் பகுதியில் உள்ள கலினின்கிராடின் அக்த்யாப்ரஸ்கி தீவில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தவிரவும் உள்ளூர் பால்திகா கலினின்கிராத்து கால்பந்துக் கழகத்தின் இருப்பிடமாகவும் உள்ளது.
Стадион Калининград | |
அமைவிடம் | கலினின்கிராத், உருசியா |
---|---|
ஆட்கூற்றுகள் | 54°41′53″N 20°32′02″E / 54.69806°N 20.53389°E |
இருக்கை எண்ணிக்கை | 35,212 |
கட்டுமானம் | |
Broke ground | 2015 |
கட்டப்பட்டது | 2016–2018 |
திறக்கப்பட்டது | மே 12, 2018 | (திட்டம்)
கட்டுமான செலவு | € 257 மில்லியன் |
குடியிருப்போர் | |
பால்திகா கலினின்கிராத்து கால்பந்துக் கழகம் (2018–நடப்பு) |
இரண்டு அடுக்குகளாக உள்ள அரங்கத்தில் நவீன பாதுகாப்பு அமைப்புகளும் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி அமைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2006 உலகக் கோப்பையின் சில ஆட்டங்கள் நிகழ்ந்தேறிய ஜெர்மனியின் மியூனிக்கில் உள்ள அல்லையன்சு அரங்கை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை நிர்மாணிப்பதற்கான திட்டமிடப்பட்ட செலவாக 11 பில்லியன் ரூபிள்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டிய பிறகு முதல் ஆட்டம் ஏப்ரல் 11, 2018 அன்று நடந்தது. 2018 உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இதன் இருக்கைகள் 25,000ஆக இருக்கும்.
கலினின்கிராத்து அரங்கு போலந்து எல்லையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது; 2018 உலகக்கோப்பை அரங்குகளிலேயே ஐரோப்பிய செங்கன் நாடுகளுக்கு மிக அண்மையில் உள்ள அரங்கமாக இது விளங்கும்.
ஆகத்து 10, 2015இல் இது "அரங்கு கலினின்கிராத்து" அல்லது தமிழ்மரபில் கலினின்கிராத்து அரங்கு எனப் பெயரிடப்பட்டது. [1]
2018 பிபா உலகக் கோப்பை
தொகுநாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
16 சூன் 2018 | 21:00 | குரோவாசியா | – | நைஜீரியா | குழு டி | |
22 சூன் 2018 | 20:00 | செர்பியா | – | சுவிட்சர்லாந்து | குழு ஈ | |
25 சூன் 2018 | 20:00 | எசுப்பானியா | – | மொரோக்கோ | குழு பி | |
28 சூன் 2018 | 20:00 | இங்கிலாந்து | – | பெல்ஜியம் | குழு ஜி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Арена к ЧМ-2018 по футболу в Калининграде будет называться "Стадион Калининград"" (in Russian). TASS. 10 August 2015. http://tass.ru/sport/2177074. பார்த்த நாள்: 2 December 2017.
வெளி இணைப்புகள்
தொகு