நைஜீரிய தேசிய காற்பந்து அணி
நைஜீரிய தேசிய கால்பந்து அணி (Nigeria national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் நைஜீரியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் தேசிய கால்பந்து அணியாகும். இவ்வணி, உன்னதப் பருந்துகள் என்றும், முன்னதாக பச்சைப் பருந்துகள் என்றும் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டது. நைஜீரிய நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான நைஜீரிய கால்பந்துச் சங்கம் இவ்வணியை நிர்வகிக்கிறது. ஏப்ரல் 1994 பிஃபா உலகத் தரவரிசையில் உலக அளவில் 5-வது தர எண் கொடுக்கப்பட்டிருந்தது; பிபா உலகத் தரவரிசையில் ஓர் ஆப்பிரிக்க அணியினால் பெறப்பட்ட அதிகபட்ச தரவரிசை இடம் இதுவேயாகும்.
அடைபெயர் | உன்னதப் பருந்துகள் | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | நைஜீரிய கால்பந்துச் சங்கம் | ||
மண்டல கூட்டமைப்பு | WAFU (மேற்கு ஆப்பிரிக்கா) | ||
கண்ட கூட்டமைப்பு | CAF (ஆப்பிரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Stephen Keshi | ||
அணித் தலைவர் | Vincent Enyeama | ||
Most caps | Joseph Yobo (95) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Rashidi Yekini (37) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Abuja Stadium | ||
பீஃபா குறியீடு | NGA | ||
பீஃபா தரவரிசை | 33 3 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 5 (ஏப்ரல் 1994) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 82 (நவம்பர் 1999) | ||
எலோ தரவரிசை | 30 | ||
அதிகபட்ச எலோ | 14 (31 மே 2004) | ||
குறைந்தபட்ச எலோ | 87 (27 திசம்பர் 1964) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Sierra Leone 0–2 Nigeria (Freetown, Sierra Leone; 10 August 1949)[1] | |||
பெரும் வெற்றி | |||
Nigeria 10–1 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dahomey (Lagos, Nigeria; 28 November 1959) | |||
பெரும் தோல்வி | |||
கோல்ட் கோஸ்ட் 7–0 Nigeria (அக்ரா, Gold Coast; 1 June 1955) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1994 இல்) | ||
சிறந்த முடிவு | 16-அணிகள் சுற்று, 1994 & 1998 | ||
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை | |||
பங்கேற்புகள் | 17 (முதற்தடவையாக 1963 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1980, 1994 & 2013 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 1995 இல்) | ||
சிறந்த முடிவு | 4th, 1995 |
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையின் தற்போதைய வாகையர், நைஜீரிய அணியினரே ஆவர். இக்கோப்பையை இவர்கள் 3 முறை வென்றிருக்கின்றனர். உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இரண்டுமுறை 16-அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கடந்த ஆறு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில், ஐந்துக்கு இவர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர்; முதல்முறையாக உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றது 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை. மேலும், 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்; ஒலிம்பிக் கால்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அணி இதுவேயாகும்.
குறிப்புதவிகள்
தொகு- ↑ Courtney, Barrie. "Sierra Leone – List of International Matches". Rec.Sport.Soccer Statistics Foundation. பார்க்கப்பட்ட நாள் 4 November 2010.
வெளியிணைப்புகள்
தொகு- Kick Off Nigeria – Nigerian Football/Soccer News
- Cyber Eagles – Nigerian Football Discussion Forum
- GreenEagles.org – Unofficial Database of The Super Eagles of Nigeria பரணிடப்பட்டது 2012-01-10 at the வந்தவழி இயந்திரம்
- RSSSF archive of results 1955–2008
- Nigeria at the World Cups
- Nigeria Teams at World Cups
- Nigeria: Head-to-Head Records at World Cups