அடிடாஸ் டெல்ஸ்டார் 18

அடிடாஸ் டெல்ஸ்டார் 18 (Adidas Telstar 18) என்பது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கான அலுவலகரீதியான காற்பந்து ஆகும். இது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு பங்காளியும் உலகக்கோப்பை காற்பந்து 1970 முதல் கால்பந்து வினியோகம் செய்யும் அடிடாஸ் நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டது. இது முன்னைய அடிடாஸ் டெல்ஸ்டார் உதைபந்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.[1]

டெல்ஸ்டார் 18
அடிடாஸ் டெல்ஸ்டார் 18
வகைகால்பந்து
அறிமுகம்2017 (2017)
உற்பத்திஅடிடாஸ்
உபயோகம்ஆம்
தற்போதைய வினியோகம்பாக்கிஸ்தான்

டெல்ஸ்டார் 18 மாஸ்கோவில் நவம்பர் 9, 2017 அன்று, 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் பொற்பந்து வெற்றிபெற்ற[2][3] லியோனல் மெஸ்ஸியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.[4]

டெல்ஸ்டார் மிச்தா

தொகு

குழு நிலை ஆட்டங்கள் நிறைவுற்றதும், ஆட்டமிழப்பு நிலை போட்டிகளில் புதிய பந்து பயன்படுத்தப்படும். இதற்கு டெல்ஸ்டார் மிச்தா என்ற பெயரிடப்பட்டுள்ளது. மிச்தா ("Мечта") என்பது உருசிய மொழியில் கனவு அல்லது குறிக்கோள் எனப் பொருள்படும்.[5]

உசாத்துணை

தொகு
  1. "2018 FIFA World Cup™ official match ball unveiled: an exciting re-imagining". FIFA.com. Fédération Internationale de Football Association (FIFA). November 9, 2017. Archived from the original on நவம்பர் 9, 2017. பார்க்கப்பட்ட நாள் December 16, 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  2. Bate, Adam (July 16, 2014). "World Cup Final: Was Lionel Messi Really a Disappointment in Brazil or Have We Just Become Numb to His Genius?". Sky Sports.
  3. "World Cup 2014: Lionel Messi Golden Ball Surprised Sepp Blatter". BBC Sport. July 14, 2014.
  4. Wright, Chris (November 9, 2017). "Adidas unveil 2018 World Cup ball: The Telstar 18". ESPN. பார்க்கப்பட்ட நாள் December 16, 2017.
  5. "adidas Football Reveals Official Match Ball for the Knockout Stage of the 2018 FIFA World Cup Russia™". 2018 FIFA World Cup™. 2018-06-26. https://www.fifa.com/worldcup/news/adidas-football-reveals-official-match-ball-for-the-knockout-stage-of-the-2018-f. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adidas Telstar 18
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிடாஸ்_டெல்ஸ்டார்_18&oldid=3607080" இலிருந்து மீள்விக்கப்பட்டது