ஊரடங்கு
ஊரடங்கு (curfew) என்பது அசாதாரண பதட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அரசு, காவல்துறையினர் நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தும் சட்ட வரையறைக்குட்பட்ட உத்தரவாகும். பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூட கூடாது. கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதை தடுக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு
தொகுபிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக நடுக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
தொகுஇன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்பாதுகாப்பு போன்றவை நிகழும் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சட்ட அதிகாரம்
தொகுஇந்தியாவில், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிபதிக்கு, இந்திய தண்டனைச் சட்டம், 1973, சட்டப் பிரிவு 144இன், கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[2]
உலக ஊரடங்கு உத்தரவு பதிவுகள்
தொகு- பரமக்குடியில் செப்டம்பர் 11, 2012 அன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
- தருமபுரியில் சூலை 5, 2013 அன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "curfew". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ [In every district district magistrate has power to maintain public order. under section 144 of CRPC DM has power to impose this section by proclaiming curfew orders CURFEW LAWS OF INDIA (Criminal Law)]