நோவாக் ஜோக்கொவிச்
நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: [ˈnɔvaːk 'ʥɔːkɔviʨ], ⓘ, பிறப்பு மே 22, 1987, பெல்கிரேட்) செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார். சூலை 4,2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 23 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார். நான்கு பெருவெற்றித் தொடர்களிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.
2019 விம்பிள்டன் கோப்பையுடன் நோவாக் ஜோக்கொவிச் | ||||||||
தாய்மொழிப் பெயர் | Новак Ђоковић Novak Đoković | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
நாடு | செர்பியா | |||||||
வாழ்விடம் | மான்டே கார்லோ, மொனாக்கோ | |||||||
பிறப்பு | 22 மே 1987 பெல்கிறேட், செர்பியா, யுகோசுலாவியா (இப்போது செர்பியா) | |||||||
உயரம் | 1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)[1][2] | |||||||
தொழில் ஆரம்பம் | 2003 | |||||||
விளையாட்டுகள் | வலது கை ஆட்டக்காரர் | |||||||
பயிற்சியாளர் | கொரான் இவானிசெவிச் | |||||||
பரிசுப் பணம் | US$159,041,453[3] * தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் இதுவரை அதிக பணத்தை பெற்றவர் | |||||||
இணையதளம் | novakdjokovic.com | |||||||
ஒற்றையர் போட்டிகள் | ||||||||
சாதனைகள் | 1012–204 (83.22%)[a] | |||||||
பட்டங்கள் | 94 (தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் மூன்றாம் இடம்) | |||||||
அதிகூடிய தரவரிசை | 4 யூலை 2011இல் முதல் இடம் | |||||||
தற்போதைய தரவரிசை | இரண்டாம் இடம் (17 சூலை 2023)[4] | |||||||
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | ||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | வெற்றி (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023) | |||||||
பிரெஞ்சு ஓப்பன் | வெற்ற' (2016, 2021, 2023) | |||||||
விம்பிள்டன் | வெற்றி (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022) | |||||||
அமெரிக்க ஓப்பன் | வெற்றி (2011, 2015, 2018) | |||||||
ஏனைய தொடர்கள் | ||||||||
Tour Finals | வெற்றி (2008, 2012, 2013, 2014, 2015, 2022) | |||||||
ஒலிம்பிக் போட்டிகள் | 2008 கோடை கால ஒலிம்பிக்சு | |||||||
இரட்டையர் போட்டிகள் | ||||||||
சாதனைகள் | 61–76 (44.53%) | |||||||
பட்டங்கள் | 1 | |||||||
அதியுயர் தரவரிசை | 114ஆம் இடம் (30 நவம்பர் 2009) | |||||||
தற்போதைய தரவரிசை | 533ஆம் இடம் (27 யூன் 2022)[5] | |||||||
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | ||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | முதல் சுற்று - 2006,2007 | |||||||
பிரெஞ்சு ஓப்பன் | முதல் சுற்று - 2006 | |||||||
விம்பிள்டன் | இரண்டாம் சுற்று - 2006 | |||||||
அமெரிக்க ஓப்பன் | முதல் சுற்று - 2006 | |||||||
ஏனைய இரட்டையர் தொடர்கள் | ||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | இரண்டாம் சுற்று 2016 | |||||||
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள் | ||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | கால் இறுதி - 2020 | |||||||
அணிப் போட்டிகள் | ||||||||
டேவிசுக் கோப்பை | வெற்றி 2010 டேவிசுக் கோப்பை | |||||||
ஒப்மேன் கோப்பை | இறுதி, 2008, 20213 ஓப்மேன் கோப்பை | |||||||
ஏடிபி விளையாட்டு குழுவில் தலைவராக | ||||||||
பதவியில் 30 ஆகத்து 2016 – 30 ஆகத்து 2020 | ||||||||
துணை அதிபர் | கெவின் ஆண்டர்சன் | |||||||
முன்னையவர் | எரிக் புடோரக் | |||||||
பின்னவர் | கெவின் ஆண்டர்சன் | |||||||
கையெழுத்து | ||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||
இற்றைப்படுத்தப்பட்டது: 10 யூலை 2022. |
ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்
தொகுஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார். ஏழு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.
விம்பிள்டன்
தொகு2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.
பிரெஞ்சு ஓப்பன்
தொகுஜோக்கொவிச் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுகளில் வென்று பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.[6]
குறிப்புகள்
தொகு- ↑ In ATP Tour and Grand Slam main draw matches, Summer Olympics, Davis Cup and Laver Cup; 2nd in the Open Era
மேற்கோள்கள்
தொகு- ↑ "Novak Djokovic". ATP Tour. பார்க்கப்பட்ட நாள் 1 April 2019.
- ↑ "Djokovic, Novak". novakdjokovic.com. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
- ↑ "ATP Prize Money Leaders" (PDF).
- ↑ "Rankings Singles". atptour.com.
- ↑ "Rankings Doubles". atptour.com.
- ↑ https://www.dinamalar.com/news_detail.asp?id=2784345