மே 2014
<< | மே 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
மே 2014 (May 2014) , 2014 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைநதது. தமிழ் நாட்காட்டியின் படி வைகாசி மாதம் மே 15, வியாழக்கிழமை தொடங்கி, சூன் 14 இல் முடிவடைகிறது. இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் ரஜப் மாதம் மே 1, வியாழக்கிழமை தொடங்கி மே 29 வியாழக்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
தொகு- மே 1 - மே நாள்
- மே 1 - மங்கையர்க்கரசி நாயனார் குருபூசை
- மே 5 - சிங்க்கோ டே மாயோ
- மே 11 - உமாபதி சிவாச்சாரியார் குருபூசை
- மே 14 - சித்திரா பவுர்ணமி
- மே 14 - வெசாக்
- மே 17 - குமரகுருபரர் குருபூசை
- மே 27 - கழற்சிங்க நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- மே 31:
- ஆப்கானித்தானில் தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒரேயொரு அமெரிக்க ஆயுதப் படையினனான போவ் பேர்க்டால் என்பவர் குவாண்டானமோ விரிகுடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆப்கானியக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். (டைம்)
- சையின் "கங்னம் ஸ்டைல்" காணொளிப் பாடல் யூடியூப்பில் 2 பில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.. (டைம்)
- மே 30:
- சீனாவின் யூனான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 45 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏபி)
- மலாவியில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பீட்டர் முத்தாரிக்கா வெற்றி பெற்றார். (பிபிசி)
- மே 29:
- உக்ரைனிய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று சிலோவியான்ஸ்க் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உருசியா, கசக்ஸ்தான், பெலருஸ் தலைவர்கள் யூரேசிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தனர். (டைம்)
- மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: ஆஸ்திரேலியா அதன் தேடுதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதாக அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- சப்பானிய எண்ணெய் கப்பல் வெடித்து சிதறியதில், நான்கு ஊழியர்கள் படுகாயமடைந்தனர். (சீற்றடே குளோபல்)
- மே 28:
- தென் கொரியாவின் முதியோர் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர். (புளூம்பர்க்)
- பிரான்சில் கலே என்ற துறைமுக நகரில் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கைச் சேர்ந்த 800 பேர் குடியேறிகளின் முகாம் ஒன்றை பிரெஞ்சுக் காவல்துறையினர் முற்றுகையிட்டனர். (பிபிசி)
- விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகளில் பத்தில் ஒன்பது கட்டுரைகளில் தவறுகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். (பிபிசி) (ஜேஏஓஏ)
- மே 27:
- தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அதிகாரப் பகிர்ந்தளிப்பினை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். (தி இந்து)
- உக்ரைனின் தோனெத்ஸ்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 30 உருசிய-ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற தாக்குதைல் ஐக்கிய நாடுகள் அவையின் வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பைச்ச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- பாக்கித்தானில் குடும்பத்தினரின் விருப்புக்கு மாறாகக் காதலித்துத் திருமணம் புரிந்தமைக்காக பெண் ஒருவர் நீதிமன்றத்திற்கு முன்னால் அவரது குடும்பத்தினரால் கற்களால் எறிந்து படுகொலை செய்யப்பட்டார். (ராய்ட்டர்சு)
- மே 26:
- இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். (என்டிடிவி)
- எகிப்தில் அரசுத்தலைவர் தேர்தலுக்காக வாக்கெடுப்பு நடைபெற்றது. (ஏபி)
- உக்ரைனிய விமானப் படையினர் உருசிய ஆதரவுப் படையினர் வசமுள்ள தோனெத்ஸ்க் பன்னாட்டு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். (ஐரிசு டைம்சு)
- நரேந்திர மோதி 15வது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். (ஐபிஎன்)
- மே 25:
- உக்ரைனில் அரசுத்தலைவர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- பெல்ஜியத்தில் நடுவண், மற்றும் பிராந்திய நாடாளுமன்றங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன.
- சிபூட்டியில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற கிரனைட்டுத் தாக்குதலில் மூன்று எசுப்பானியப் படையினர் காயமடைந்தனர். (ஏபி)
- கொலொம்பியாவில் முதற்கட்ட அரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. (ராய்ட்டர்சு)
- பனி வளைதடியாட்டம் 2014 ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான இறுதிப்போட்டியில் உருசிய அணி பின்லாந்து அணியை 5-2 என்ற கணக்கில் வென்றது. (ஈஎஸ்பிஎன்)
- மே 24:
- உபெர் கோப்பை பாட்மின்டன் தொடரில், சீன பெண்கள் பாட்மின்டன் அணி சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. (மாலைமலர்)
- புதிய இந்தியப் பிரதமராக மே 26 இல் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோதியின் பதவியேற்பு வைபவத்தில் பாக்கித்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- தாய்லாந்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பிரபலமான கல்விமான்கள் உட்படப் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். (பிபிசி)
- சோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கினர். 10 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- கிரேக்கத்துக்கும், துருக்கிக்கும் இடையில் உள்ள ஐகியக் கடலில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் துருக்கியில் பெரும் சேதம் ஏற்பட்டது. (வேர்ல்ட் புலெட்டின்),(யுரோ நியூஸ்),(சிபிசி )
- கலிபோர்னியாவில் சான்டா பார்பரா நகரில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். (கைட்)
- தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவராக தனது இரண்டாவது பதவிக்காலத்தை யாக்கோபு சூமா ஆரம்பித்தார். (பிபிசி)
- வட அமெரிக்காவில் எரிகல் பொழிவு ஏற்பட்டது. (ஏபிசி)
- நைஜீரியாவின் மூன்று கிராமங்களை போகோ அராம் போராளிகள் தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- திருத்தந்தை பிரான்சிசு மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது 3 நாள் பயணமாக அம்மான் வந்தடைந்தார். (ஏபி)
- பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சுவில் யூத அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட துப்பாகிச் சூட்டு நிகழ்வில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தாய்லாந்தின் மேலவை இராணுவ ஆட்சியாளரினால் கலைக்கப்பட்டது. (அல்ஜசீரா)
- லிஸ்பனில் நடைபெற்ற யூஈஎஃப்ஏ கால்பந்து இறுதிப் போட்டியில் ரியால் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட்டை 4-1 என்ற கணக்கில் வென்று வெற்றிக்கிண்ணைத்தைப் பெற்றது. (BBC), (ஏஎஃப்பி)
- மே 23:
- கொங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது. (பிபிசி)
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இலங்கை தீவிரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- ஆப்கானித்தானில் ஏரத் மாகாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.(சீஎன்என்)
- உருசியாவின் செல்யாபின்கில் 2013 பெப்ரவரியில் வீழ்ந்து வெடித்த எரிவெள்ளி 290 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுகோளுடன் மோதிய வேறொரு சிறுகோளின் எச்சம் என ஆய்வுகள் கூறுகின்றன. (ராய்ட்டர்சு)
- சிரியாவின் போர்க்குற்றங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யக் கோரும் ஐநா பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை உருசியாவும், சீனாவும் தமது வீட்டோ உரிமையைப் பாவித்துத் தடுத்தன. (சீஎனென்)
- தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினாவத்ரா அந்நாட்டு இராணுவத் தலைவரினால் சிறைப்பிடிக்கப்பட்டார். (ராய்ட்டர்சு)
- மே 22:
- தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. (ஏபிசி)
- சீனாவின் உருமுச்சி நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர், 91 பேர் காயமடைந்தனர். (BBC) (ஆர்டீஈ)
- ஐரோப்பிய ஒன்றைய நாடாளுமன்றத்துக்கான பல-கட்டத் தேர்தல்கள் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்தன. (ஐரோப்பிய ஒன்றியம்)
- உக்ரைனில் உருசிய-சார்பு ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 11 உக்ரைனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- நியூயார்க் நகரில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல்களில் சிறுவர் பாலுணர்வுக் கிளர்ச்சியம் தொடர்பான 71 பேர் கைது செய்யப்பட்டனர். (அல்ஜசீரா)
- ஐக்கிய இராச்சியத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. (பிபிசி)
- மே 21:
- இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. (டைம்ஸ் ஒப் இந்தியா),(ஐபிஎன் லைவ்),(தி ஹிந்து)
- இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவுகூரப்பட்டது. (ஈழமுரசு)
- பாக்கித்தான் வான்படை விமானங்கள் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் குண்டு வீசித் தாக்கியதில் குறைந்தது 60 போராளிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- தனது பதவிக்காலத்தில் பொதுமக்களின் பணத்தை சூறையாடியமைக்காக எகிப்தின் முன்னாள் தலைவர் ஒசுனி முபாரக்க்கிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (பிபிசி)
- நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் போகோ அராம் போராளிகள் அலகார்னோ என்ற கிராமத்தைத் தாக்கியதி 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சீனத் தலைவர் சீ சின்பிங், உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் ஆகியோர் $400 பில்லியன் பெறுமதியான 30-ஆண்டுக்கால எரிவாயு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். (யூஎஸ்ஏ டுடே)
- கினி-பிசாவுவின் அரசுத்தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் ஒசே மாரியோ வாசு என்பவர் தெரிவு செய்யப்பட்டார். (ராய்ட்டர்சு)
- மே 20:
- ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக இரு நாட்களுக்கு முன்னர் வெளிவந்த ஆதாரப் படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய பெண் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர். (தமிழ்மிரர்)
- தாய்லாந்தில் இராணுவச் சட்டத்தை அந்நாட்டு இராணுவம் பிரகடனப்படுத்தியது. (பிபிசி)
- மாஸ்கோவில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு வண்டியுடன் மோதி தடம் புரண்டதில்ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- நைஜீரியாவின் ஜோசு நகரச் சந்தையில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 118 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- யெமன் நாட்டில் சியா, சுன்னி மற்றும் யேமனிய இராணுவத்தினருக்கிடையே இடம்பெற்ற மோதல்களில் 16 பெர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் அரசுமுறைப் பயணமாக சீனா வந்தடைந்தார். (பிபிசி)
- பாரதிய ஜனதா கட்சி, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் தலைவராக நரேந்திர மோதி iஅதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரசு)
- மலாவி பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. (பிபிசி)
- மே 19:
- உக்ரைனின் கிழக்கே ரஸ்தோவ், பெல்கோரத், பிரியான்ஸ்க் நகர்களில் இருந்து தமது படையினரை உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் விலக்கிக் கொண்டார். (பிபிசி)
- மே 18:
- முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பெல்ஜியம் (தமிழ்வின்), கனடா, ஆத்திரேலியா (தமிழ்வின்) உடபட உலக நாடுகளில் உள்ள தமிழர்களால் நினைவுகூரப்பட்டது.
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 6.4 நிலநடுக்கம் ஏற்பட்டது. (வாய்ஸ் ஒப் ரஷ்யா), (எபிஎ)
- ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைத் தரைப்படையால் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா தொடர்பாக இராணுவத்தினர் இழைத்ததாகக் கருதப்படும் மேலும் பல போர்க்குற்றப் படங்கள் வெளியாகின. (கொழும்பு டெலிகிராப்)
- வடகொரியாவில் 23-மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- வடக்கு கொலொம்பியாவில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 26 சிறுவர்கள் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- சீனா தென்சீனக் கடலில் எண்ணெய் அகழ்வு நிகழ்த்துவதை எதிர்த்து வியட்நாமில் சீனருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் அங்கிருந்து வெளியேறினர். (ராய்ட்டர்சு)
- மிகக் குறைந்த ஊழியத்தை அதிகரிப்பதற்கான சட்ட மாற்றத்திற்கு சுவிட்சர்லாந்து மக்கள் எதிர்த்து வாக்களித்தனர். (ஏபி)
- மே 17:
- இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோல்வியுற்றதை அடுத்து நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகும் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு பிரதமராக தனது கடைசி உரையை ஆற்றினார். (பிபிசி)
- லாவோஸ் நாட்டு விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியதில் பாதுகாப்பு அமைச்சர், அவரது மனைவி உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.(மாலைமலர்)
- நைஜீரியாவின் போகோ அராம் போராளிகளை ஒடுக்க நைஜீரியா, நைஜர், கமரூன், பெனின், சாட் நாடுகள் ஒன்றிணைந்தன. (நியூயோர்க் டைம்சு)
- தொல்லுயிரியல் தகவல்களின் படி, இதுவரை அறியப்பட்டவைகளுள் மிகப்பெரிய தொன்மாவின் எச்சங்கள் அர்கெந்தீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. (பிபிசி)
- மே 16:
- இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அஇஅதிமுக 37 இடங்களைக் கைப்பற்றியது.
- இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 339 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் காங்கிரசுக் கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது. (இந்தியா டுடே)
- ஈழப்போரின் இறுதிக் கட்ட வெற்றியைக் குறிக்க இலங்கை அரசு மாத்தறையில் மே 18 இல் நிகழ்த்தவிருக்கும் வெற்றி விழாவில் கனடா பங்குபற்றாது என அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் செலி வைற்றிங் தெரிவித்தார். (தி ஐலண்டு)
- கிரிமியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், தத்தார் இனத்தவர்கள் தாக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. (பிபிசி)
- கென்யா தலைநகர் நைரோபியில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை ஏந்திச் சென்ற உருசியாவின் புரோட்டொன்-எம் ஏவூர்தி சீன வான்பரப்பில் முற்றாக எரிந்தது. (சீஎனென்)
- மே 15:
- கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு ஹைதி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(தினதந்தி)
- இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்குக் கடத்தப்பட்ட 230 ஆமைகள் தாய்லாந்து விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. (WN)
- சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 8-மாதக் கர்ப்பிணி முசுலிம் பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- மூத்த இந்திய அரசியல்வாதி நா. த. திவாரி (88), தனது மகன் என அடையாளம் காணப்பட்டவரின் தாயாரைத் திருமணம் புரிந்து கொண்டார். (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: துருக்கியின் எல்லையில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- தாய்லாந்து, பேங்காக் நகரில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களின் போது அரசுப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சீனாவின் உரும்கி தொடருந்து நிலையத்தில் ஏப்ரல் 30 இடம்பெற்ற தாக்குதலுக்கு கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உரிமை கோரியது. (பிகார்பிரபா)
- வங்காளதேசத்தில் மேக்னா ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரக் காணவில்லை. (எஸ்பிஎஸ்)
- மே 14:
- இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் 5 ஆண்டுகளுக்குத் தடை செய்ய இந்திய நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது. (தினமலர்)
- இலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (அத தெரண)
- இலங்கையின் முல்லைத்தீவில் இராணுவ சேவைக்கு ஆள் திரட்டும் பணி இடம்பெற்றது. (டெய்லிமிரர்)
- ஏமனில் அசான் நகரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் 7 இராணுவத்தினரும், 16 அல் காயிதா போராளிகளும் கொல்லப்பட்டனர். (ஏபி)
- நைஜீரியா போர்னோ மாநிலத்தில் கிராம மக்களின் விழிப்புக் குழுவினர் போகோ அராம் போராளிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர். 200 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உக்ரைன்யப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. உருசிய-ஆதரவாளர்கள் இதில் பங்கேற்கவில்லை. (பிபிசி)
- துருக்கியில் சோமா நிலக்கரி சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக அதிகரிதது. மேலும் 120 பேர் சுரங்கத்தில் சிக்குண்டுள்ளனர். (ஏபி)
- சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை எதிர்த்து தெற்கு வியட்நாமில் சீன-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. வெளிநாட்டினருக்கு சொந்தமான 15 தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டன. (ஏபி)
- மே 13:
- ஐநா அமைதிப்படைக்கு முதல்முறையாக ஒரு பெண் தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். (கார்டியன்)
- எயிட்டியின் வடக்குக் கரைக்கு அப்பால் கொலம்பசு பயன்படுத்திய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (இன்டிபென்டென்ட்)
- இசுரேலின் முன்னாள் பிரதமர் எகூட் ஓல்மேர்ட் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (பிகார்பிரபா நியூஸ்)
- அண்டார்க்டிக்காவின் பனிவிரிப்பு மீள முடியாத அளவில் உருகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (வாசிங்டன் போஸ்ட்)
- கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் ஆறு உக்ரைனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (நெட்ஸ்கேப்)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் போவார் பிரதேசத்தில் 26-வயதுடைய பிரெஞ்சு செய்தியாளர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. (டைம்) (கார்டியன்)
- துருக்கியில் சோமா என்ற நகரில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். (பிபிசி)
- ஈராக் போர்: 2003-2008 காலப்பகுதியில் பிரித்தானியப் படையினர் ஈராக்கியக் கைதிகளை முறைகேடாக நடத்தியதாக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பக் கட்ட விசாரணைகளை நடத்தியது. (பிபிசி)
- நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரது விளக்கமறியலை தொடர்ந்தும் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. (தமிழ்வின்)
- மே 12:
- இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது இடங்களில் நினைவஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது.(தமிழ்ஒன்இந்திய),(தினமணி)
- லிபியா கடற்பகுதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காப்பாற்றப்பட்டுள்னர்.(தினமணி)
- நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 100 பள்ளி மாணவிகளைக் காட்டும் காணொளி ஒன்றை போகோ அராம் போராளிகள் வெளியிட்டனர். (பிபிசி)
- கிழக்கு உக்ரைனின் தோனெத்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய நகரங்களை உருசிய ஆதரவு தீவிரவாதிகள் இறைமையுள்ள நாடுகளாக அறிவித்தனர். (வாசிங்டன் போஸ்ட்)
- 1974 ஆம் ஆண்டில் சைப்பிரசு நாட்டை ஆக்கிரமித்து வடக்கு சைப்பிரசு என்ற அங்கீகரிக்கப்படாத பிராந்தியத்தை உருவாக்கியமைக்காக துருக்கி 124 மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (வாசிங்டன் போஸ்ட்)
- இந்தியப் பொதுத் தேர்தல், 2014: 9வது கடைசிக் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது. வரலாறு காணாத 66.64% வாக்குகள் செலுத்தப்பட்டன. மே 16 இல் முடிவுகள் அறிவிக்கப்படும். (டைம்சு ஒஃப் இந்தியா)
- மே 11:
- மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர் .(மாலைமலர்)
- துபாயில் நடந்த சாலை விபத்தில், இந்தியத் தொழிலாளர்கள் 9 பேர் உட்பட, 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். (தினமலர்), (எமிரேட்ஸ் 247)
- இந்தியாவின் மகாராட்டிரத்தில் நக்சலைடுகளின் தாக்குதலில் 7 சிறப்புக் காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிகார்பிரபா நியூஸ்)
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு தலைநகர் கின்ஷாசாவில் இடம்பெற்ற மோதலில் காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்டனர். (ஒகாபி வானொலி)
- மே 10:
- பன்னாட்டு விசாரணையைத் தவிர ஐநாவின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தயார் என இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். (தினத்தந்தி),(தினபூமி)
- தென்னாப்பிரிக்கா தேர்தலில் மொத்தமுள்ள 400 இடங்களில் ஆளும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சி 249 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. (எம்ஜி)
- மே 9:
- நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200 மாணவிகளை தீவிரவாதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. (தினமணி)
- செவ்வாய்க் கோளுக்கு ஒருவழி பயணமாக செல்ல விரும்புவோர் பட்டியலில் 44 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர். (நியூ இந்திய நியூஸ்), (தினமலர்)
- உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் கிரிமியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.(வால்ஸ்ட்ரீர் ஜர்னல்).
- வடகொரியாவில் இருந்து வந்த மூன்று ஆளில்லா விமானங்களைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக தென் கொரியா அறிவித்தது. (சீஎனென்)
- பாக்கித்தானின் சகீத் பெனாசிர் அபாத் மாவட்டத்தில் 5.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது, ஒருவர் கொல்லப்பட்டார், 70 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- மே 8:
- பாக்கித்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (நக்கீரன்), (எல்லே டைம்சு)
- மே 7:
- வெனிசுவேலாவில் கார் உற்பத்தியை போர்ட் தானுந்து நிறுவனம் நிறுத்தியுள்ளது. (தினகரன்)
- தமிழ்நாடு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி 900 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது (தினபூமி)
- நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 125 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஐநாவுடன் ஏற்பட்ட உடன்பாடு ஒன்றை அடுத்து ஓம்சு நகரில் இருந்து எதிர்ப்புக் குழுக்கள் வெளியேறின. (பிபிசி)
- தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து அவரைப் பதவியில் இருந்து நீக்கியது. (ஏபிசி)
- தென்னாப்பிரிக்காவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. (கார்டியன்)
- இந்தியப் பொதுத் தேர்தல், 2014: 7 மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தலில் 64 இடங்களுக்காக 60 மில்லொயன் மக்கல் வாக்களித்தனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- "பினோச்சியோ ரெக்சு என்ற தொன்மா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. (நெசனல் ஜியாகிரபிக்)
- மே 6:
- தெற்கு சூடான் அரசுக்கும் போராளிக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்களில் 9,000க்கும் அதிமான சிறுவர் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். (உதயன்)
- நைஜீரியாவில் மேலும் 8 மாணவிகள் போகோ அராம் போராளிகளால் கடத்தப்பட்டனர். (சிஎன்என்)
- மே 5:
- தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் 6.3 அளவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஏ பி)(பாக்ஸ் நியூஸ்)(சிஎன்என்)
- விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வானில் இலக்கைத் தாக்கக் கூடிய அதிநவீன "அஸ்திரா' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. (மாலை மலர்),(தினத்தந்தி)
- சப்பான் தலைநகர் டோக்கியோவில் 6.2 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (earthquaketrack).,(நியூஸ் ஒன் ஜப்பான்)
- மே 4:
- கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேவி தொடருந்தில் இருந்து இரண்டு பெட்டிகள் கழன்று சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (அத தெரன)
- சீனாவின் குவாங்டாங் நகரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். (பிபிசி)
- இந்திய மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் தொடர்வண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர். (தினமலர்),(திஇந்து)
- மே 3:
- அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார மற்றும் சமூகவியல் பேராசிரியரும், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவருமான கேரி பெக்கர் (83) உயிரிழந்தார். (ஆசியான் ஏஜ்), (ஹுப்பிங்டன் போஸ்ட்)
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் ஷா இல்லினாயி மாகாண நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் வழங்கியுள்ளது. (தி இந்து),(சென்னைஆன்லைன்),(தினத்தந்தி)
- ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள படாக்ஸான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதைந்துள்ளது. இதுவரை 350 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 2000க்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.(தின மலர்),(தி இந்து),(தின மணி)
- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போடோ போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்தது. (மாலைமலர்), (தினத்தந்தி), (புதிய தலைமுறை)
- மே 2:
- 3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப்பட்டது. (ஓன் இந்தியா), (தினமணி)
- சிரியாவில் நடந்த நச்சுக் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (வெப் துனியா), (ஓன் இந்தியா)
- அமெரிக்காவில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் ரூ.90.39 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக 3 இந்திய மருத்துவர்களை குற்றவாளிகள் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (மாலைமலர்)
- தென் கொரியாவில் நிலத்தடி தொடருந்துகள் இரண்டு மோதிக்கொண்டதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (பிபிசி)
- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- எத்தியோப்பியாவில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின் போது 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உக்ரைனின் கிழக்கே சிலோவியான்ஸ்க் நகரில் உக்ரைனிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர், இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒடேசா நகரில் இடம்பெற்ற மோதல்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். (சீஎன்என்), (பிபிசி)
- ஆப்கானித்தானில் பதக்சான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 350 பேர் உயிரிழந்தனர். 2,000 இற்கும் அதிகமானோரைக் காணவில்லை. (ஏபி)
- மே 1:
- உருசியாவின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். (சென்னை ஆன்லைன்),(லங்கா ஸ்ரீ )
- உலக வங்கியின் அறிக்கையின் படி கொள்வனவு ஆற்றல் சமநிலையில் அமெரிக்கா, மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. 2005 இல் இந்தியா 10வது நிலையில் இருந்தது. (டைம்சு ஒஃப் இந்தியா)
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களுரு - குவகாத்தி தொடர்வண்டி நின்றுகொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்; 30 பேர் காயமடைந்தனர். (பிபிசி), (தினத்தந்தி), (மாலைமலர்)
- நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
இறப்புகள்
தொகு- மே 17 - சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
- மே 21 - ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்