யாக்கோபு சூமா

தென்னாபிரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர்

யாக்கோபு சூமா (Jacob Gedleyihlekisa Zuma, பிறப்பு: ஏப்ரல் 12, 1942) தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் 14 பிப்ரவரி 2018 வரை பதவியில் இருந்தார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2007, டிசம்பர் 18 இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

யாக்கோபு சூமா
Jacob Zuma
தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
9 மே 2009[1] – 14 பிப்ரவரி 2018
முன்னவர் கலேமா மொட்லாந்தே
பின்வந்தவர் சிறில் ராமஃபோசா
ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 டிசம்பர் 2007
முன்னவர் தாபோ உம்பெக்கி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2005
தென்னாபிரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்
பதவியில்
14 ஜூன் 1999 – 14 ஜூன் 2005
குடியரசுத் தலைவர் தாபோ உம்பெக்கி
முன்னவர் தாபோ உம்பெக்கி
பின்வந்தவர் பூம்சிலி உம்லாம்போ-உங்கூக்கா
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஏப்ரல் 1942 (1942-04-12) (அகவை 81)
இன்காண்டிலா, தென்னாபிரிக்கா
அரசியல் கட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) 3
பிள்ளைகள் 18
சமயம் கிறித்தவர்

சூமா அரசியல் ஊழல், பாலியல் குற்றங்களுக்காகப் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றத்தில் இருந்து இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். 2009, ஏப்ரல் 6 இல் இவர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.[2]

2021 தென்னாப்பிரிக்கா கலவரம் தொகு

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுக்குப் பிறகு அந்நாட்டில் சூலை 2021-இல் ஏற்பட்ட கலவரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.[3] செப்டம்பர் 2021 இல், ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Zuma sworn in as SA's fourth democratic President". 2011-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. ஜேக்கப் ஜூமா
  3. "தென்னாப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா கலவரம்". 2021-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. Afrique du Sud: la justice confirme la condamnation de Jacob Zuma à de la prison

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோபு_சூமா&oldid=3569220" இருந்து மீள்விக்கப்பட்டது