அத்லெடிகோ மாட்ரிட்


அத்லெடிகோ மாட்ரிட் (Atlético Madrid , எளிமையாக Atlético -அத்லெடிகோ ) என்பது எசுப்பானியாவின் லா லீகா கூட்டிணைவில் பங்குபெறும் கால்பந்துக் கழகமாகும்.[2] இதன் அமைவிடம் மாட்ரிட், ஸ்பெயின் ஆகும். அத்லெடிகோ மாட்ரிட் 9 முறை லா லீகா-வினை வென்றுள்ளது; 1996-ல் வென்ற இரட்டையும் இதில் அடங்கும். கோபா டெல் ரேவினை (அரசரின் கோப்பை) 10 முறை வென்றுள்ளனர். மேலும் 1 எசுப்பானிய உன்னதக் கோப்பையும் 3 ஈவா துயர்த்தே கோப்பையும் வென்றுள்ளனர். ஐரோப்பாவில், 1962-ல் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பையை வென்றுள்ளனர்; 1974-ஆம் ஆண்டு ஐரோப்பியக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்றனர்.[3] மேலும், யூரோப்பா கூட்டிணைவை 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளனர்; யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பையை 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியிருக்கின்றனர்.

அத்லெடிகோ டி மாட்ரிட்
முழுப்பெயர்அத்லெடிகோ டி மாட்ரிட் கழகம், S.A.D.
அடைபெயர்(கள்)
  • Los Colchoneros (The Mattress Makers)
  • Los Rojiblancos (The Red and Whites)
  • Los Indios (The Indians)
  • El Atleti (The Atleti– not to be confused with the more literal Athletic)
தோற்றம்26 ஏப்ரல் 1903; 121 ஆண்டுகள் முன்னர் (1903-04-26)
ஆட்டக்களம்Estadio Vicente Calderón,
Madrid
ஆட்டக்கள கொள்ளளவு54,960[1]
உரிமையாளர்Miguel Ángel Gil Marín
PresidentEnrique Cerezo
மேலாளர்டியகோ சிமியோனே
கூட்டமைப்புலா லீகா
2012–13 La Ligaலா லீகா, 3வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

தற்போது 54,960 பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட விசென்டே கால்தெரான் மைதானத்தில் (Vicente Calderón)[4] தன்னிடப் போட்டிகளை ஆடி வரும் இவர்கள், 2015-ஆம் ஆண்டில் 70,000 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய லா பெய்னேட்டா மைதானத்துக்கு (Estadio La Peineta) இடம்பெயர இருக்கின்றனர்.

எசுப்பானியாவில் அதிக ஆதரவாளர்கள் கொண்ட கால்பந்துக் கழகங்களில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா-வுக்கு அடுத்து அத்லெடிகோ மூன்றாமிடம் பெறுகின்றனர். மேலும் உலகிலேயே பெரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது; 65,000 பேர் பருவ நுழைவுச்சீட்டு கொண்ட ஆதரவாளர்கள் உள்ளனர்.

இவர்கள் இருக்கும் அதே நகரத்தில் இருக்கும் காரணத்தினால் இவர்களுக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையே பெருத்த போட்டி காலாகாலமாக இருந்து வந்திருக்கிறது.[5]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புதவிகள்

தொகு
  1. http://www.uefa.com/MultimediaFiles/Download/StatDoc/competitions/UEFACup/01/67/59/06/1675906_DOWNLOAD.pdf
  2. ":: Tienda Club Atlético de Madrid::" (in ஸ்பானிய மொழி). Atlético Madrid. Archived from the original on 13 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "1973/74: Müller ends Bayern wait". ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம். Archived from the original on 11 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  4. "Estadio Vicente Calderón". The Stadium Guide. Archived from the original on 22 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  5. "Real Madrid vs Atlético Madrid Derby: Great Local Football Derbies". Eurorivals. Archived from the original on 15 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்லெடிகோ_மாட்ரிட்&oldid=4075942" இலிருந்து மீள்விக்கப்பட்டது