எசுப்பானிய உன்னதக் கோப்பை
எசுப்பானிய உன்னதக் கோப்பை (Supercopa de España, Supercup of Spain) என்பது எசுப்பானியாவில் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும். இது லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்படுகிறது.
தோற்றம் | 1982 |
---|---|
மண்டலம் | எசுப்பானியா |
அணிகளின் எண்ணிக்கை | 2 |
தற்போதைய வாகையாளர் | பார்சிலோனா (11வது பட்டம்) |
2013 Supercopa de España |
பார்சிலோனா அணி 11 முறை வென்றுள்ளது (அதிகபட்சம்), அதற்கடுத்து ரியல் மாட்ரிட் அணி 9 முறை வென்றுள்ளது.
வரலாறு
தொகுதற்போதைய வடிவில் இப்போட்டி 1982-முதல் இருக்கிறது. 1940-க்கும் 1953-க்கும் இடையே எசுப்பானிய கூட்டிணைவு வாகையருக்கும் கூட்டிணைவுக் கோப்பை வெற்றியாளருக்கும் பலவகை பெயர்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.[1]
1940-இல் இதன் பெயர் வாகையர் கோப்பை (Copa de Campeones) ஆகும். ஆனால், இப்போட்டி 1945-வரை நடத்தப்படவில்லை; 1945-ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் தூதர், எசுப்பானிய இராணுவ அரசுடன் இருந்த நட்புறவின் காரணமாக கோபா டி ஓரோ அர்ஜென்டினா (Copa de oro Argentina) கோப்பையை வழங்கியதன் பின்னரே நடத்தப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் ஈவா துயர்த்தே கோப்பை-யென்ற (Copa Eva Duarte) பெயருடன் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் போட்டியாக செயல்பட ஆரம்பித்தது; செப்டம்பர்-திசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது, இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது.