பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்

கால்பந்து கிளப்
(பார்சிலோனா கால்பந்துக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பார்சிலோனோ காற்பந்தாட்டக் கழகம், (F.C. Barcelona) பார்செலோனாவிலுள்ள ஓர் காட்டலான்/எசுப்பானிய கால்பந்தாட்டக் கழகம். இவர்கள் 2010/11 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டி வெற்றியாளர்கள். லா லீகா, கோப்பா டெல் ரே மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவை ஒரே ஆண்டில் வென்ற கால்பந்துக் கழகம் இதுவே ஆகும். இவர்களது முதன்மை எதிர்க் கழகமாக ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் உள்ளது. பல போட்டிகளை வென்று பார்செலோனா கால்பந்துக் கழகம் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்குகிறது.

பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்
முழுப்பெயர்புட்பால் கிளப் பார்சிலோனா
அடைபெயர்(கள்)பார்சா
தோற்றம்1899
ஆட்டக்களம்கேம்ப் நூ, பார்செலோனா
ஆட்டக்கள கொள்ளளவு99,354
மேலாளர்லூயிசு என்ரிகே
கூட்டமைப்புலா லீகா
2018/19லா லீகா, முதலாவது
சொந்த ஆட்டக்களத்தில் சூளுரை: Més que un club ( காட்டலான் மொழியில்): கழகத்திற்கும் மேற்பட்டது.

ஜோஆன் கேம்பார் என்பவர் வழிநடத்துதலின்படி சில சுவிட்சர்லாந்து, ஆங்கிலேய மற்றும் காட்டலோனிய கால்பந்து வீரர்களால் பார்சிலோனா கால்பந்துக் கழகம் 1899-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காட்டலோனிய பண்பாடு மற்றும் இனவுணர்வுகளின் சின்னமாக இக்கழகம் விளங்குகிறது; அதன் காரணமாகவே கழகத்தின் தாரக மந்திரம் ஒரு கழகத்தினும் மேலானது ( "Més que un club"- More than a club) என்பதாக இருக்கிறது. பெரும்பாலான மற்ற கால்பந்துக் கழகங்களைப் போலன்றி, பார்சிலோனா கால்பந்துக் கழகம் அதன் ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது, உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆண்டுக்கு $613 மில்லியன் வரவு-செலவுடன், உலகின் இரண்டாவது பணக்கார கால்பந்துக் கழகமாகத் திகழ்கிறது; மேலும், $2.6 பில்லியன் மதிப்புடன் உலகின் மூன்றாவது மிகப்பெரும் மதிப்புமிக்க விளையாட்டு அணியாக இருக்கிறது.[1][2]

பார்சிலோனா அணி, எசுப்பானியாவிலேயே அதிக வெற்றிகளை ருசித்த அணியாகும்; மொத்தமாக 83 வாகையர் பதக்கங்களை வென்றுள்ளனர். திசம்பர்-31, 2009, அன்று பன்னாட்டு கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிபர கூட்டமைப்பின் அனைத்துலக கழக தரவரிசையில் முதல் இடம் பெற்றனர்[3]; மேலும், தற்போதைய ஐரோப்பிய கால்பந்துக் கூட்டமைப்பின் கழக தரவரிசையிலும் முதல் இடத்தில் இருக்கின்றனர்[4]. எசுப்பானியாவின் உள்நாட்டுப் போட்டிகளில் பார்சிலோனா அணியினரின் வெற்றி வரலாறு பின்வருமாறு: 22 லா லீகா, 26 கோபா டெல் ரே, 11 எசுப்பானிய உன்னதக் கோப்பை, 3 ஈவா துயர்த்தே கோப்பை (உன்னதக் கோப்பையின் முன்னோடி)[5], 2 லா லீகா கோப்பை (எசுப்பானிய கூட்டிணைவுக் கோப்பை). பன்னாட்டு கழக கால்பந்துப் போட்டிகளில் பார்சிலோனாவின் வெற்றி வரலாறு பின்வருமாறு: 4 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, 4 யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை (இதுவே அதிகபட்ச வெற்றி சாதனை), 4 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, 3 நகர்களிடை காட்சிப் போட்டிக் கோப்பை (அதிகபட்ச சாதனை)[6], மற்றும் அதிகபட்ச சாதனையாக 2 பிபா கழக உலகக் கோப்பைகளையும் வென்றுள்ளனர்[7]. பார்சிலோனா அணியினருக்கும் ரியல் மாட்ரிட் அணியினருக்கும் பெரும் வரலாறு கொண்ட போட்டித் தன்மை உள்ளது; இவ்விறு அணிகளுக்கும் இடையிலான போட்டி எல் கிளாசிகோ ("El Clásico") என்றழைக்கப்படுகிறது.

உலக அளவில் பெரும் ஆதரவு கொண்ட விளையாட்டு அணிகளில் பார்சிலோனா ஒன்றாக விளங்குகிறது; சமூக வலைதளங்களில் மிகப்பெரும் இரசிகர் பலம் கொண்ட விளையாட்டு அணியாக பார்சிலோனா இருக்கிறது ( ஃபேஸ்புக்கில் 52 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள், டுவிட்டரில் கிட்டத்தட்ட 11 மில்லியன் பின்பற்றுவோர், கூகுள்+-இல் 6 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள்)[8][9][10][11]. பார்சிலோனா அணி வீரர்களே அதிகமுறை பாலோன் தி'ஓர் விருதையும் (10 முறை) மற்றும் ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் விருதையும் (7 முறை) வென்றுள்ளனர். 2010-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த வீரர்களின் முதல் மூவராக பார்சிலோனா கழகத்தின் இளையோர் பயிற்சிக் கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி, ஆந்த்ரெ இனியஸ்தா, க்சாவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாறாகும்; மூவரும் 2010-ஆம் ஆண்டு தங்கப் பந்து (பிஃபா) விருது நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு ஒரே கால்பந்துப் பயிற்சிப் பள்ளியில் கற்ற மூவரும் ஓராண்டில் உலகின் சிறந்த வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டது இதுவே முதல் நிகழ்வாகும்.

1955-ஆம் ஆண்டு முதல் அனைத்து வருடங்களிலும் ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற மிகச்சில கால்பந்துக் கழகங்களில் பார்சிலோனாவும் ஒன்றாகும். லா லீகாவிலிருந்து இரண்டாம் நிலை கூட்டிணைவுக்குத் தரம் குறைக்கப்படாத மூன்று கழகங்களில் இது ஒன்றாகும் (மற்ற இரண்டு தரம் குறைக்கப்படாத கழகங்கள்: அத்லெடிக் பில்பாஓ, ரியல் மாட்ரிட் ஆகியன). 2009-ஆம் ஆண்டில் லா லீகா, கோபா டெல் ரே மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு ஆகிய மூன்றையும் வென்றது; இங்ஙனம் அம்மூன்றையும் ஒரே பருவத்தில் வென்ற முதல் எசுப்பானிய கால்பந்துக் கழகம் பார்சிலோனாவாகும். மேலும், அதே ஆண்டில் அது பங்கேற்ற ஆறு கோப்பைப் போட்டிகளையும் வென்று வாகை சூடிய முதல் அணியாக வரலாறு படைத்தது; மேற்சொன்ன மூன்று கோப்பைகளோடு, எசுப்பானிய உன்னதக் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, மற்றும் பிபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றையும் வென்றது.[12] 2011-ஆம் ஆண்டில் மீண்டும் ஐரோப்பிய வாகையர் பட்டம் வென்றார்கள். அவ்வாண்டில் பார்சிலோனா 5 பட்டங்களை வென்றது; கோபா டெல் ரே மட்டும் வெல்லவில்லை - அதில் இரண்டாம் இடம் பிடித்தனர். இந்த அனைத்தையும் வெல்லும் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 6 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு-இல் அரையிறுதியை எட்டியது; 4 ஆண்டுகளில் 14 கோப்பைகளை வென்றது. பெப் கார்டியோலாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இந்த அணி, பல்வேறு பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிபுணர்களால், வரலாற்றின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[13][14][15][16]

மேலும் பார்க்க தொகு

குறிப்புதவிகள் தொகு

 1. Badenhausen, Kurt (July 15, 2013). "Real Madrid Tops The World's Most Valuable Sports Teams". Forbes. http://www.forbes.com/sites/kurtbadenhausen/2013/07/15/real-madrid-tops-the-worlds-most-valuable-sports-teams/. பார்த்த நாள்: January 6, 2014. 
 2. "Deloitte Football Money League 2013". Deloitte UK இம் மூலத்தில் இருந்து 30 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130730063842/http://www.deloitte.com/view/en_GB/uk/industries/sportsbusinessgroup/sports/football/deloitte-football-money-league/7c19cb03a366c310VgnVCM1000003256f70aRCRD.htm. பார்த்த நாள்: 30 January 2013. 
 3. "All-Time Club World Ranking, by International Federation of Football History & Statistics" இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014132701/http://www.iffhs.de/?3d4d443d0b803e8b40384c00205fdcdc3bfcdc0aec70aeedbe1a. 
 4. "UEFA club coefficients 2013/14". http://www.uefa.com/memberassociations/uefarankings/club/index.html. 
 5. ஈவா துயர்த்தே கோப்பையானது அப்பெயரிலேயே இராச்சிய எசுப்பானிய கால்பந்துக் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு 1947-லிருந்து 1953-வரை நடத்தப்பட்டது; ஆகையால், பார்சிலோனா அணியினரின் 1945-ஆம் ஆண்டு ஓரோ அர்ஜென்டினா கோப்பை வெற்றி இக்கணக்கெடுப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை, 1948, 1952 மற்றும் 1953 கோப்பை வெற்றிகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.
 6. ஃபிஃபாவினால் ஒரு முக்கியக் கோப்பையாக பாவிக்கப்பட்டது (see FIFA.com F.C. Barcelona's profile at http://www.fifa.com/classicfootball/clubs/club=44217/ பரணிடப்பட்டது 2012-01-06 at the வந்தவழி இயந்திரம்) ஆனால் இது அதிகாரபூர்வமான கோப்பையல்ல, ஏனெனில் யூஈஎஃப்ஏ-வினால் அங்கீகரிக்கப்படவில்லை.
 7. "Football Europe: FC Barcelona". யூஈஎஃப்ஏ இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100603054639/http://en.archive.uefa.com/footballeurope/club%3D50080/domestic.html. பார்த்த நாள்: 4 May 2009. 
 8. "Barcelona becomes first sports team to have 50 Million Facebook fans". Forbes.com. http://www.forbes.com/sites/mikeozanian/2014/01/03/barcelona-becomes-first-sports-team-to-have-50-million-facebook-fans/. 
 9. "FC Barcelona official Facebook page". Facebook. https://www.facebook.com/fcbarcelona. 
 10. "FC Barcelona official Twitter page". Twitter. https://twitter.com/FCBarcelona. 
 11. "Barcelona wins Social Star Award for 'Most Popular Sports Team'". http://www.straitstimes.com/the-big-story/social-media-awards/story/social-star-awards-2013-list-winners-20130523. 
 12. "FC Barcelona Records". FC Barcelona. 12 January 2012. http://arxiu.fcbarcelona.cat/web/english/club/historia/records/rec_colectius.html. பார்த்த நாள்: 12 January 2012. 
 13. "Is this Barcelona team the best of all time?" இம் மூலத்தில் இருந்து 2017-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171030184012/http://worldsport.blogs.cnn.com/2011/12/23/is-this-barcelona-team-the-best-of-all-time/. 
 14. "The great European Cup teams: Barcelona 2009–2011". http://www.theguardian.com/football/blog/2013/may/24/great-european-cup-teams-barcelona. 
 15. "Barça: The Making of the Greatest Team in the World". http://www.amazon.co.uk/Barca-Making-Greatest-Team-World/dp/0956497152. 
 16. "Who's the Greatest of Them All? Barcelona! (by Newsweek)". http://mag.newsweek.com/2011/06/03/is-barcelona-the-greatest-soccer-team-ever.html.