ஈவா துயர்த்தே கோப்பை

ஈவா துயர்த்தே கோப்பை (Copa Eva Duarte) என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்; இது லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்டது. 1940-இல் இப்போட்டி வாகையர் கோப்பை - Copa de Campeones என்ற பெயருடன் இருந்தது; ஆனால், 1945 வரை நடத்தப்படவில்லை. 1945-இல் அர்ஜென்டினாவின் தூதர் எசுப்பானிய இராணுவ அரசுடன் இருந்த நல்லுறவின் சின்னமாக கோபா டி ஓரோ அர்ஜென்டினா ("Copa de Oro Argentina") என்ற கோப்பையை பரிசளித்தார், அதன்பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.[1] ஆயினும், இவை அதிகாரபூர்வமான போட்டிகள் அல்ல.

1947-ஆம் ஆண்டில் கோபா ஈவா துயர்த்தே டி பெரோன் ("Copa Eva Duarte de Perón") என்று அதிகாரபூர்வமாக எசுப்பானிய கால்பந்துக் கூட்டமைப்பினால் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; இது ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் வண்ணம் செயல்பட்டது. செப்டம்பர்-திசம்பர் மாதங்களுக்கிடையே இப்போட்டி நடத்தப்பட்டது; இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது. இக்கோப்பையே தற்போதைய எசுப்பானிய உன்னதக் கோப்பைக்கு முன்னோடியாகும்.

ஈவா துயர்த்தே கோப்பைக்கு முன்னோடிகள்

தொகு
ஆண்டு வாகையர் இரண்டாம் இடம் முடிவு
Copa de Campeones de España 1940 அத்லெடிகோ மாட்ரிட் எசுப்பான்யோல் 10-4 (3–3 / 7-1)
Copa de Oro Argentina 1945 பார்சிலோனா அத்லெடிக் பில்பாஓ 5-4
Copa Presidente FEF 1941-47 அத்லெடிகோ மாட்ரிட் வேலன்சியா

4-0

ஆண்டுவாரியாக ஈவா துயர்த்தே கோப்பை வெற்றியாளர்கள்

தொகு
ஆண்டு வாகையர் இரண்டாம் இடம் முடிவு
ஈவா துயர்த்தே கோப்பை 1947 ரியல் மாட்ரிட் வேலன்சியா 3–1
ஈவா துயர்த்தே கோப்பை 1948 பார்சிலோனா செவியா 1–0
ஈவா துயர்த்தே கோப்பை 1949 வேலன்சியா பார்சிலோனா 7-4
ஈவா துயர்த்தே கோப்பை 1950 அத்லெடிக் பில்பாஓ அத்லெடிகோ மாட்ரிட் 7–5 (5–5 / 2–0)
ஈவா துயர்த்தே கோப்பை 1951 அத்லெடிகோ மாட்ரிட் பார்சிலோனா 2–0
ஈவா துயர்த்தே கோப்பை 1952 பார்சிலோனா* - -
ஈவா துயர்த்தே கோப்பை 1953 பார்சிலோனா* - -

* 1952 மற்றும் 1953-ஆகிய இரு ஆண்டுகளில் லா லீகா மற்றும் கோபா டெல் ரே ஆகிய இரண்டையும் வென்றதால் பார்சிலோனா அணிக்கு ஈவா துயர்த்தே கோப்பை வழங்கப்பட்டது.

அணிகள் வென்ற ஈவா துயர்த்தே கோப்பைப் பட்டங்கள்

தொகு
அணி வாகையர் இரண்டாமிடம் வென்ற ஆண்டுகள் தோற்ற ஆண்டுகள்
பார்சிலோனா 4 2 1945, 1948, 1952, 1953 1949, 1951
அத்லெடிகோ மாட்ரிட் 3 1 1940, 1947, 1951 1950
வேலன்சியா 1 1 1949 1947
அத்லெடிக் பில்பாஓ 1 1 1950 1945
ரியல் மாட்ரிட் 1 - 1947 -
செவியா - 1 - 1948
எசுப்பான்யோல் - 1 - 1940

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவா_துயர்த்தே_கோப்பை&oldid=4009118" இலிருந்து மீள்விக்கப்பட்டது