அத்லெடிக் பில்பாஓ
அத்லெடிக் கிளப் (Athletic Club), பொதுவாக அத்லெடிக் பில்பாஓ (Athletic Bilbao) என்று அறியப்படுகின்ற, கால்பந்துக் கழகமானது ஸ்பெயின் நாட்டின் பில்பாஓ நகரில் அமைவிடமாகக் கொண்டது.[1] இக்கழகம் எசுப்பானியாவில் பொதுவாக சிங்கங்கள் (Los Leones) என்றும் அறியப்படுகிறது.
முழுப்பெயர் | அத்லெடிக் கிளப் | ||
---|---|---|---|
அடைபெயர்(கள்) | Los Leones (சிங்கங்கள்) | ||
தோற்றம் | 1898 | ||
ஆட்டக்களம் | San Mamés, பில்பாஓ | ||
கொள்ளளவு | 53,332 | ||
President | Josu Urrutia | ||
மேலாளர் | Ernesto Valverde | ||
கூட்டமைப்பு | லா லீகா | ||
2012–13 | லா லீகா, 12வது | ||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | ||
| |||
1929-ஆம் ஆண்டில் லா லீகா தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பங்கேற்றுவருகிறது. லா லீகா வாகையர் பட்டத்தை எட்டு முறை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், நான்காம் இடம் பெறும் கழகமாக இருக்கிறது. மேலும், லா லீகா-வின் ஆரம்பத்திலிருந்து அதில் பங்கேற்கும் கழகமாகவும், அதிலிருந்து தரக்குறைப்பு செய்யப்படாத மூன்று கழகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது; தகுதிக் குறைப்பு செய்யப்படாத மற்ற இரு கழகங்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகியவையாகும். இக்கழகம் பெண்களுக்கான அணி ஒன்றையும் கொண்டது; பெண்களுக்கான முதல்தர கால்பந்துக் கூட்டிணைவில் நான்கு முறை வாகையர் பட்டத்தை அவ்வணி கைப்பற்றியிருக்கிறது.
தமது அமைவிட மக்களின் விளையாட்டு வீரர்களையே பெரும் அளவில் பயன்படுத்துவது, இக்கழகத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று ஆகும்; அதாவது, இக்கழகம் பாஸ்க் இன வீரர்களையே பெருமளவில் கொண்டிருக்கும். எசுப்பானியாவின் பாஸ்க் பகுதி, மற்றும் ஃப்ரான்சின் தென் பகுதிகளில் இருக்கும் பாஸ்க் இன வீரர்களை வாங்கிப் பயன்படுத்துவது இக்கழகத்தின் வழக்கமாகும். அதைத் தவிர்த்து, தமக்கென தனியான இளையோர் பயிற்றுவிப்புக் கழகத்தையும் கொண்டிருக்கிறது. தமது இன வீரர்களைப் பயன்படுத்தும் இப்பண்பினால் அதற்குப் பெரும் ஆதரவும் உள்ளது, எதிர்ப்பும் உள்ளது. தமது பயிற்றுவிப்புக் கழக வீரர்களை முதல்தர வீரர்களாக உருவாக்குவதிலும், கழக பற்றுறுதிக்காகவும் பெருமளவு புகழப்படுகிறது. எசுப்பானியாவில் தொழில்முறை கழகங்களில் விளையாட்டு நிறுவனமாக அல்லாத நான்கு கழகங்களில் அத்லெடிக் கிளப் ஒன்றாகும்; மற்றையவை பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மற்றும் ஒசசூனா. இக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களே உரிமையாளர்களாகவும் நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்.
மேலும் பார்க்க
தொகுகுறிப்புதவிகள்
தொகு- ↑ "Official name". Athletic-club.net. பார்க்கப்பட்ட நாள் 2009-12-03.