லா லீகா (La Liga) என்பது ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகும். அந்நாட்டில் பிரீமெரா டிவிசன் என்று அறியப்படுகின்றது. வணிக காரணங்களுக்காக லீகா சான்டென்டர்(Liga Santander)[1] என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் 20 அணிகள் இதில் பங்கேற்கும். கடைசி மூன்று இடங்களில் முடிக்கும் அணிகள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலைக் கூட்டிணைவில் பங்கேற்க தரம் குறைக்கப்படும்; இரண்டாம் நிலைக் கூட்டிணைவிலிருந்து மூன்று அணிகள் தரம் உயர்த்தப்படும்.

லா லீகா
நாடுகள்ஸ்பெயின்
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்1929
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்செகுன்டா டிவிசன்
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
கோபா டெல் ரே
எசுப்பானிய உன்னதக் கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
பார்சிலோனா (24வது பட்டம்)
(2016-17)
அதிகமுறை
வாகைசூடியோர்
ரியல் மாட்ரிட் (32 பட்டங்கள்)
இணையதளம்www.laliga.es
2019-20

1929-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதில் இதுவரை 60 அணிகள் பங்கேற்றுள்ளன; 9 அணிகள் வாகையர் பட்டம் சூடியுள்ளன. 1950-களிலிருந்து ரியல் மாட்ரிட் கால்பந்து கழகமும் பார்சிலோனா கால்பந்துக் கழகமும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ரியல் மாட்ரிட் 32 முறையும் பார்சிலோனா 24 முறையும் வாகையர் பட்டம் சூடியுள்ளன.

யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணக கணக்கின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பிவிலேயே லா லீகாவே சிறந்த கூட்டிணைவுத் தொடராகும். உலக அளவில் புகழ்வாய்ந்த விளையாட்டுத் தொடர்களில் லா லீகாவும் ஒன்றாகும். 2014-15 பருவத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 26,741 பார்வையாளர்கள் வருகின்றனர்; ஒரு விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இந்த வருகைப்பதிவு ஆறாம் இடம் பிடிக்கிறது; கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை செருமனியின் புன்டசுலீகா, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் இந்தியாவின் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவற்றுக்குப் பிறகு நான்காம் இடம் பிடிக்கிறது.[2][3][4]

உசாத்துணைகள்

தொகு
  1. "LaLiga and Santander strike title sponsorship deal". LaLiga. 21 July 2016. Archived from the original on 25 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Attendances in India, China and the USA catching up with the major European leagues". World Soccer. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  3. "India » Indian Super League 2015 » Attendance » overall". worldfootball.net. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  4. "European football statistics". 2008. http://www.european-football-statistics.co.uk/attn.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_லீகா&oldid=4009142" இலிருந்து மீள்விக்கப்பட்டது