முதன்மை பட்டியைத் திறக்கவும்

செவியா கால்பந்துக் கழகம் (Sevilla Fútbol Club, S.A.D.) என்பது எசுப்பானியாவின் செவீயா நகரை அமைவிடமாகக் கொண்ட ஒரு கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் உயர்நிலை கால்பந்துக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடி வருகிறது. அக்டோபர் 14,1905, அன்று தொடங்கப்பட்ட இக்கழகம், லா லீகாவில் 1934-35 பருவத்தில் முதன்முறையாகப் பங்கேற்றது.[2]

செவியா
செவியா கால்பந்துக் கழகம்.png
முழுப்பெயர்செவியா கால்பந்துக் கழகம்
அடைமொழிSevillistas
Los Rojiblancos (The Red and Whites)
Los Nervionenses (The Ones from Nervión)
Los Palanganas (The Bathtubs)
தோற்றம்14 அக்டோபர் 1905 (1905-10-14) (113 ஆண்டுகளுக்கு முன்னர்)
ஆட்டக்களம்Ramón Sánchez Pizjuán,
Seville, Andalusia, Spain
ஆட்டக்கள கொள்ளளவு45,500[1]
அவைத்தலைவர்José Castro Carmona
மேலாளர்Unai Emery
கூட்டமைப்புலா லீகா
2012–13லா லீகா, 9வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

எசுப்பானியாவின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம் செவியாவாகும்.[3] ஆன்டலூசியா பிரதேசத்தில் அமைந்த கழகங்களில் மிக அதிக அளவில் வெற்றியை ருசித்த அணியாகும். இக்கழகத்தின் வெற்றிகள்:

67 பருவங்கள் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் ஆடியிருக்கும் இக்கழகம், 13 முறை இரண்டாம்நிலைக் கூட்டிணைவில் ஆடியிருக்கிறது.[4] லா லீகா வரலாற்றில் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இது ஏழாம் இடத்தில் இருக்கிறது. செவீயா நகரின் மற்றொரு முக்கிய கால்பந்துக் கழகமான ரியல் பெடிசு இவர்களின் முக்கிய எதிரிகளாவர்; ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுடன் மோதும் செவீயா-உள்ளூர்ப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் பார்க்கதொகு

குறிப்புதவிகள்தொகு

  1. "Datos del Sevilla F. C. S. A. D.". lfp.es. பார்த்த நாள் 1 August 2010.spanish
  2. "Sevilla Fútbol Club" (Spanish). Xerez Club Deportivo S. A. D.. பார்த்த நாள் 11 November 2010.
  3. "The British Newspaper Archive". The British Newspaper Archive. பார்த்த நாள் October 5, 2012.
  4. "Clasificación histórica de la Liga Española". alsolano.com. பார்த்த நாள் 1 August 2010.