யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை

யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை என்பது ஒவ்வொரு ஆண்டும் யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படும் போட்டியாகும்; இத

யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை (UEFA Super Cup) என்பது ஒவ்வொரு ஆண்டும் யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படும் போட்டியாகும்; இது அவ்வாண்டின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்படும். பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டிணைவுகள் ஆரம்பிக்கும் காலத்தில், ஆகத்து மாத இறுதியில், குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று நடத்தப்படும்.

யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை
தோற்றம்1972
(recognised by UEFA since 1973)
மண்டலம்ஐரோப்பா (யூஈஎஃப்ஏ)
அணிகளின் எண்ணிக்கை2
தற்போதைய வாகையாளர்செருமனி Bayern Munich (1st title)
இணையதளம்Official Website
2014 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை

1972-லிருந்து 1999-வரை ஐரோப்பியக் கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை/யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை வெற்றியாளருக்கும் இடையே இந்த உன்னதக் கோப்பைப் போட்டி நடத்தப்பட்டது. யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை - போட்டி நடத்துவது நிறுத்தப்பட்ட பிறகு, வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளருக்கும் இடையே உன்னதக் கோப்பை-போட்டி நடத்தப்பட்டது; 2009-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ கோப்பையானது யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று பெயர் மாற்றப்பட்டது.

தற்போதைய வெற்றியாளர்கள் செருமனியின் பேயர்ன் மியூனிச் அணியாகும். ஐரோப்பிய உன்னதக் கோப்பையை அதிகமுறை வென்றவர்கள் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இத்தாலியின் ஏசி மிலான் அணியாகும்.

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூஈஎஃப்ஏ_உன்னதக்_கோப்பை&oldid=1620735" இலிருந்து மீள்விக்கப்பட்டது