கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்

கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ஆங்: East Turkestan Islamic Movement, துருக்கிய மொழி: Doğu Türkistan İslâm Hareketi) சீனாவின் மேற்கில் அமைந்துள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் உய்குர்ப் போராளிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.[1][2] சீனாவிலிருந்து உய்குர் மக்களை விடுதலை செய்து கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். 2003இல் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட ஹசான் மஹ்சூம் இவ்வமைப்பை உருவாக்கினார்.

சீன மக்கள் குடியரசு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் அவை ஆகியோரால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[3] 1990களில் ஷின்ஜியாங் பகுதியில் பல தானுந்து குண்டுவெடிப்புகளை இவ்வமைப்பு செய்துள்ளது என்று குற்றம்சாட்டிய சீன அரசு இது அல் கைதாவை ஒத்து இருக்கிறது என்றும் கூறியுள்ளது.[4]

சான்றுகள்தொகு