அம்மான்
அமான் (Amman அரபு: عمان), ஜோர்தான் இராச்சியத்தில் தலைநகரமும் அதன் முக்கிய வர்த்தக மையமும் ஆகும். இதன் மக்கள்தொகை (2005 ஆம் ஆண்டில்) 125,400 ஆகும். ஜோர்தானின் மிகப்பெரிய நகரமும் இதுவாகும். அம்மான் ஜோர்தான் நாட்டின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் கொண்ட நகரம் ஆகும். வடமத்திய ஜோர்தானின் அமைந்துள்ள அம்மான் நகரமானது அம்மான் கவர்னரேட்டின் நிர்வாகம், நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும்.[2] இந்நகரில் 4,007,526 மக்கள் வசிக்கின்றனர். அம்மான் நகரம் 1,680 சதுர கிலோமீற்றர் (648.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. நவீனமயமாக்கப்பட்ட அரபு நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.[3] அரபு மற்றும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.[4]
அமான்
عمان | |
---|---|
![]() ஜோர்தானில் அமானின் அமைவிடம் | |
நாடு | ஜோர்தான் |
அரசு | |
• மேயர் | ஒமார் அல்மானி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,680 km2 (650 sq mi) |
• நிலம் | 700 km2 (300 sq mi) |
ஏற்றம் | 773 m (2,356 ft) |
மக்கள்தொகை (2005)[1] | |
• மொத்தம் | 21,25,400 |
இணையதளம் | http://www.ammancity.gov.jo |
புவியியல்
தொகுஅம்மான் கிழக்கு கரை பீட பூமியில் அமைந்துள்ளது. மூன்று பெரிய வறண்ட ஆற்றுப்படுகையால் வகைப்படுத்தப்படும் மேட்டுநிலமாகும். ஆரம்பத்தில் இந்நகரம் ஏழு மலைகளினால் கட்டப்பட்டது.[5] உயரம் 700 முதல் 1,100 மீ (2,300 முதல் 3,600 அடி) வரை உயரத்தில் அமைந்திருக்கும் இப்பகுதியின் வடமேற்கில் அல் சால்ட், வடகிழக்கில் அல்-சார்க் என்பன அமைந்துள்ளன. மடாபா, அல்-கரக், மான் என்பன முறையே மேற்கிலும், தென்மேற்கிலும், தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. அம்மானில் மீதமுள்ள நீருற்றுகளில் ஒன்று சர்கா ஆறுடன் இணைந்து நீர் வழங்குகிறது.[6]
காலநிலை
தொகுகோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி மத்திய தரைக்கடல் காலநிலை மண்டலத்திற்கு அருகிலுள்ள அம்மான் அரை வறண்ட காலநிலைக்குள் வகைப்படுத்தப்படுகின்றது. கோடைக்காலம் லேசான வெப்பமாகவும், தென்றலாகவும் இருக்கும். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு வெப்ப அலைகள் கோடையில் ஏற்படலாம். வசந்த காலம் பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையே தொடங்கி ஒரு மாதம் வரை நீடிக்கும். குளிர்காலம் பொதுவாக நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் தொடக்கத்தில் இருந்து மார்ச் நடுப்பகுதி வரை தொடர்கிறது. வருடாந்திர சராசரி மழைவீழ்ச்சி 300 மிமீ (12 அங்குலம்) ஆகும்.[7] அவ்வப்போது வறட்சி ஏற்படுவது பொதுவானது. பெரும்பாலும் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மழை பெய்யும். கடும் மூடுபனி வழக்கமாக வருடத்திற்கு குறைந்தது 120 நாட்கள் காணப்படும்.[8]
பொருளாதாரம்
தொகுஜோர்தானின் பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அரபு வசந்த எழுச்சிகளின் விளைவாக அரபு உலகில் அமைதியின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் ஜோர்தான் அதன் வங்கித்துறை வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மான் நகரம் ஐந்து கண்டங்களில் உள்ள 30 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பன்னாட்டு அரபு வங்கியின் மையமாகும் அரபு வங்கி அம்மான் பங்குச் சந்தையில் 28% ஐக் குறிக்கிறது.[9] மேலும் இந்நகரம் வணிக ரீதியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
சுற்றுலாத்துறை
தொகுஅம்மான் நகரம் அதிக பார்வையிடப்படும் 4 வது அரபு நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நகரத்தில் செலவிட்டனர்.[10] ஜோர்தான் மற்றும் அம்மான் நகரம் மத்திய கிழக்கின் மருத்துவ சுற்றுலாவின் மையமாகும். அம்மான் ஆண்டுக்கு 250,000 வெளிநாட்டு நோயாளிகளினால் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைப் பெறுகின்றது.[11]
புள்ளிவிபரங்கள்
தொகு2015 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி அம்மான் நகரில் 4,007,526 மக்கள் வசிக்கின்றனர்.[12] இது ஜோர்தான் நாட்டின் மொத்த சனத்தொகையில் 42% ஆகும். 1,680 கி.மீ. 2 (648.7 சதுர மைல்) மொத்த பரப்பளவைக் கொண்ட இந்நகரம் ஒரு சதுர கிலோமீற்றர் (6,200 / சதுர மைல்) பரப்பளவிற்கு சுமார் 2,380 மக்கள் அடர்த்தியைக் கொண்டது.[13] 20 நூற்றாண்டின் குடியேற்றங்கள் மற்றும் அகதிகளின் குடியேற்றங்களினால் சனத்தொகை அதிவேகமாக உயர்ந்துள்ளது. இன்று நகரத்தின் இரண்டு முக்கிய குழுக்கள் பாலஸ்தீனிய அல்லது ஜோர்டானிய வம்சாவளியைச் சேர்ந்த அரேபியர்கள் ஆவார்கள். பிற இனக்குழுக்கள் மக்கள் தொகையில் சுமார் 2% வீதம் உள்ளனர். பாலஸ்தீனிய அல்லது ஜோர்டானிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் விகிதம் குறித்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.[14]
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Amman Photo Gallery பரணிடப்பட்டது 2008-09-28 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
தொகு- ↑ Jordan Department of Statistics
- ↑ "Revealed: the 20 cities UAE residents visit most". ArabianBusiness.com (in ஆங்கிலம்). Retrieved 2019-11-03.
- ↑ "Westernized media in Jordan breaking old taboos". RT International (in ஆங்கிலம்). Retrieved 2019-11-03.
- ↑ "Number of tourists dropped by 14% in 2013 — official report". Jordan Times (in ஆங்கிலம்). 2014-02-18. Retrieved 2019-11-03.
- ↑ Donagan, Zechariah (2009). Mountains Before the Temple. Xulon Press. p. 236. ISBN 978-1615795307.
- ↑ "AQUASTAT - FAO's Information System on Water and Agriculture". www.fao.org. Retrieved 2019-11-03.
- ↑ "Average Weather in October in Amman, Jordan - Weather Spark". weatherspark.com. Retrieved 2019-11-03.
- ↑ "Cityscape.jo | Real Estate in Amman and Jordan for Apartments and Villas - Rent & Buy". web.archive.org. 2013-12-02. Archived from the original on 2013-12-02. Retrieved 2019-11-03.
- ↑ "Jordan Banking Sector Brief" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05.
- ↑ "MasterCard Worldwide's Global Destination Cities Index". web.archive.org. 2012-07-18. Archived from the original on 2012-07-18. Retrieved 2019-11-03.
- ↑ "'Jordan remains medical tourism hub despite regional unrest' | The Jordan Times". web.archive.org. 2012-12-03. Archived from the original on 2012-12-03. Retrieved 2019-11-03.
- ↑ "Population stands at around 9.5 million, including 2.9 million guests". Jordan Times (in ஆங்கிலம்). 2016-01-30. Retrieved 2019-11-03.
- ↑ "Turning Drains Into Sponges and Water Scarcity Into Water Abundance" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Dakwar, pp. 31–32.