கண்ணீர் புகை குண்டு
கண்ணீர் புகை குண்டு (ஆங்கிலம்:Tear gas, formally known as a lachrymatory agent or lachrymator) என்பது வேதியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்துகிறது. மேலும் தற்காலிக பார்வைக் கோளாறை உண்டு பண்ணுகிறது.
பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் ஓசி, சிஎசு, சி ஆர், சிஎன், நானிவமைட், ப்ரோமோசிடோன், பினாசில் பிரோமைட், சிலில் பிரோமைட், மற்றும் சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட் (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன.
பாதிப்பும் உபயோகமும்
தொகுகண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன, தும்மலை வரவழைக்கின்றன, இருமல், மூச்சு விட சிரமம், கண்ணில் வலி, தற்காலிக கண் பார்வை போதல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. முதலாம் உலகப் போரின் போது நச்சுக்கலந்த புகை குண்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க
தொகு- BBC information about CS gas
- How to combat CS gas பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம் at eco-action.org
- Brone et al (2008)