ஆகத்து 2014
<< | ஆகத்து 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
ஆகத்து 2014 (August 2014, ஆகத்து 2014), 2014 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகத்து 17, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, செப்டம்பர் 17 புதன்கிழமையில் முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் சவ்வால் மாதம் சூலை 29 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி ஆகத்து 27 புதன்கிழமையில் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஆகத்து 31:
- பிரபல எழுத்தாளரும், பாஜக மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா (71), கோவா மாநில முதல் பெண் ஆளுநராக பதவியேற்றர். (தே டைம்ஸ் ஒப் இந்தியா),(பிரஸ்ட் போஸ்ட்)
- ஆகத்து 30:
- லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டி பிரதமர் டொம் தபானி நாட்டை விட்டு வெளியேறி தென்னாப்பிரிக்கா சென்றார். (பிபிசி)
- ஏழு பேருடன் சென்ற உக்ரைனின் அன்டோனொவ் விமானம் அல்சீரியாவின் சகாரா பகுதியில் வீழ்ந்தது. (ஏஎஃப்பி)
- ஆகத்து 29:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியக் கிளர்ச்சியாளர்கள் கோலான் குன்றுகள் பகுதியில் ஐநா தளம் ஒன்றைத் தாக்கி 42 பிஜி அமைதிப்படையினரைக் கைது செய்தனர். மேலும் 75 பிலிப்பீன்சு படையினர் சுற்றி வளைக்கப்பட்டனர். (கார்டியன்)
- பிரேசிலின் பொருளாதாரம் பின்னடைவைக் கண்டது. (பிபிசி)
- பப்புவா நியூ கினியில் தவுர்வூர் எரிமலை வெடித்தது. (ஏபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: செனிகலில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார். (ஏபி)
- ஆகத்து 28:
- சிரிய உள்நாட்டுப் போர்: டெயிர் எசோர் என்ற சிரியப் பழங்குடியினர் தாம் இசுலாமிய தேசப் போராளிகளிடம் இருந்து இனவொழிப்பை எதிர்கொள்ளுவதாக உலக நாடுகளிடம் முறையிட்டுள்ளனர். (டைம்சு)
- ஐநாவின் 43 பிஜிய அமைதிப் படையினர் கோலான் குன்றுகள் பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: சேதமடைந்த விமானத்தைத் தேடும் பணிக்கான செலவுகள் குறித்து ஆஸ்திரேலியா, மலேசியா சீனா ஆகியன உடன்பாட்டுக்கு வந்தன. (ஏபி)
- ஆகத்து 27:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரிய இசுலாமியப் போராளிகள் இசுரேல்-சிரிய எல்லையில் உள்ள குனெய்த்ரா என்ற இடத்தைக் கைப்பற்றினர். (டைம்சு ஒஃப் இசுலே)
- ஆகத்து 26:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: சண்டை ஆரம்பித்து 50 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு காசா, எகிப்து, மற்றும் இசுரேல் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. (டைம்சு ஒஃப் இசுரேல்)
- உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் உக்ரைன் தலைவர் பெத்ரோ பொரொசென்கோவை மின்ஸ்க் நகரில் சந்தித்து உரையாடினார். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- ஆகத்து 25:
- நைஜீரியாவில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை போகோ அராம் இயக்கத்தினர் இசுலாமிய நாடாகப் பிரகடனப்படுத்தினர். (பிபிசி)
- தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் முன்னாள் இராணுவப் புரட்சித் தலைவர் பிரயூத் சான்-ஓச்சா என்பவரைப் பிரதமராக அறிவித்தார். (ராய்ட்டர்சு)
- ஈராக், பக்தாத் நகரில் சியா பள்ளிவாசல் ஒன்றினுள் தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். (நியூயோர்க் டைம்சு)
- உக்ரைன் அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ நாடாளுமன்றத்தைக் கலைத்து அக்டோபர் 26 இற்குப் புதிய தேர்தலை அறிவித்தார். (சீஎனென்)
- ஆகத்து 24:
- சிரியாவில் இசுலாமிய தேசப் போராளிகள் அல்-தாவ்ரா வான்படைத் தளத்தைக் கைப்பற்றினர். (பிபிசி)
- கலிபோர்னியாவில் நாப்பா என்ற இடத்தில் 6.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (எல்லே டைம்சு)
- எபோலா தொற்றுநோய்த் தாக்கத்தால் காங்கோ சனநாயகக் குடியரசில் இருவர் உயிரிழந்தனர். (சின்குவா)
- ஆகத்து 23:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலுக்கு உளவு பார்த்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பாலத்தீனர்களை ஹமாஸ் இயக்கத்தினர் பகிரங்கமாக சிரச்சேதம் செய்தனர். (டைம்சு ஒஃப் இசுரேல்)
- லிபியாவில் இசுலாமியப் படையினர் மீது இனந்தெரியாத போர் விமானங்கள் தாக்கியதில் 10 போராளிகள் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- லிபியாவில் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்தை இசுலாமியப் போராளிகள் கைப்பற்றினர். (ஏஎஃப்பி)
- ]]இரா. சம்பந்தன்]] தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு புதுதில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்துப் பேசினர், (தி இந்து)
- ஆகத்து 22:
- சிரிய உள்நாட்டுப் போர்: 2013 இல் சிரியாவில் உள்நாட்டுப் போரில் இறந்தோரின் எண்ணிக்கை 191,000 என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. (புளூம்பர்க்)
- இலங்கையில் 2008 இல் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்டைய விடுதலைப் புலிப் போராளி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். (தமிழ்மிரர்)
- மலேசியா எயர்லைன்சு விமானம் 17: சூலையில் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்த 20 மலேசியரின் உடல்கள் கோலாலம்பூர் கொண்டுவரப்பட்டன. (ஏபி)
- ஆகத்து 21:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய தூதுக்குழு புதுதில்லிக்கு அதிகாரபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொண்டது. (தமிழ்மிரர்)
- ஆகத்து 20:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: போர்நிறுத்தம் முடிவடைவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர், இசுரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இராணுவத் தலைவர் முகம்மது தெய்பின் மனைவி, மற்றும் குழந்தை உட்பட 11 பாலத்தீனர்கள்: கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சப்பானில் நிலச்சரிவுகள் காரணமாக 27 பேர் உயிரிழந்தனர். (BBC), (சீஎனென்)
- ஆகத்து 19:
- எபோலா நோய் பரவுவதைத் தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவை லைபீரிய அரசுத்தலைவர் பிறப்பித்தா ர்.(அல் ஜசீரா)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலை நோக்கி 29 எறிகணைகளைத் தாம் ஏவியதாக ஹமாஸ் அறிவித்தது. பதிலுக்கு இசுரேல் வான் தாக்குதல்களை நடத்தியது. அமைதிப் பேச்சுகள் முறிவடைந்தன. (சீஎனென்)
- இசுலாமிய தேச இயக்கத்தினர் 2012 இல் சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்சு ஃபோலி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, அதைக் காணொளியில் எடுத்து வெளியிட்டனர். (பிபிசி),(டெய்லி மெயில்)
- இசுலாமாபாதில் இம்ரான் கான் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (எல்பிசி)
- ஆகத்து 18:
- இந்தியா, மற்றும் நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக குறைந்தது 160 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சு இலண்டனில் அகதியாகத் தங்கியிருக்கும் எக்குவடோர் தூதரகத்தில் இருந்து தான் விரைவில் வெளியேறவிருப்பதாகக் கூறினார். (கார்டியன்)
- ஆகத்து 17:
- நைஜீரியாவில் போகோ அராம் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு எல்லை தாண்டி சாட்டில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 85 பேரை சாட் படையினர் விடுவித்தனர். (சீஎனென்)
- இசுலாமிய தேசப் போராளிகளின் பிடியில் இருந்த மோசுல் அணையை குர்தியப் படையினர் அமெரிக்க வான் தாக்குதல்களின் உதவியுடன் மீளக் கைப்பற்றினர். (பிபிசி)
- மாலியில் ஐநா கண்காணிப்புத் தளம் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். (பிபிசி) (சீஎனென்)
- இந்தோனேசியாவின் சும்பாவா தீவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 10 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயினர். (பிபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: லைபீரியாவின் மொன்ரோவியா நகரில் எபோலா தொற்றுநோய் ஒதுக்கிடம் ஒன்றின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் 17 நோயாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். (பிபிசி)
- இலங்கையின் துடுப்பாட்ட வீரர் மகேல ஜயவர்தன தனது கடைசி டெஸ்ட் இன்னிங்சை விளையாடி, 54 ஓட்டங்களைப் பெற்றார். இவர் மொத்தம் 11,814 தேர்வு ஓட்டங்களைப் பெற்றார். இது உலக தர வரிசையில் ஆறாவதாகும். (பிபிசி)
- ஆகத்து 16:
- உக்ரைனியப் படையினர் ஸ்தானிவ்க்கா நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீளக் கைப்பற்றினர். (கீவ் போஸ்ட்)
- சியோல் நகரில் 19ம் நூற்றாண்டில் நம்பிக்கைக்காக இறந்த 124 கத்தோலிக்கர்களை திருத்தந்தை பிரான்சிசு புனிதப்படுத்தினார். (நியூயார்க் டைம்சு)
- இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ரங்கன ஹேரத் பாக்கித்தானுடனான 2வது தேர்வுப் போட்டியின் போது, முத்தையா முரளிதரனுக்குப் பின்னர் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். (டெய்லிமிரர்)
- ஆகத்து 15:
- நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தில் போகோ அராம் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் ஆண்கள், சிறுவர்கள் எனப் பலரைக் கடத்திச் சென்றனர். (எம்எஸ்என்)
- உருசியாவில் இருந்து உக்ரைனுக்குள் எல்லை தாண்டிச் சென்ற இராணுவ வாகனங்களைத் தாம் தாக்கி அழித்து விட்டதாக உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ அறிவித்துள்ளார். (வால் ஸ்ட்ரீட் ஜர்னல்)
- பனாமா கால்வாயின் நூற்றாண்டு நிறைவு விழா இடம்பெற்றது. (பிபிசி)
- பிலிப்பீன்சில் பாங்சமோரோ என்ற தனி அலகு ஒன்றை அமைப்பதற்கு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணியுடன் பிலிப்பீன்சு அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. (புளூம்பர்க்)
- ஆகத்து 14:
- இந்தியாவில் தில்லியில் இருந்து போபால் செல்ல இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விசைப்பொறியில் தீப்பிடித்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல், ஹமாஸ் புதிய ஐந்து-நாள் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். (பிபிசி)
- இசுலாமிய தேசப் போராளிகள் முன்னேறி வருவதை அடுத்து ஈராக்க்கில் அதியுயர் அவசரநிலையை ஐக்கிய நாடுகள் அறிவித்தது. (பிபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு தென் கொரியாவுக்கான தனது ஐந்து நாள் பயணத்தை ஆரம்பித்தார். (ஏஎஃப்பி)
- இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் செர்சிங் ராணா என்பவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. (பிபிசி)
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் பின்னணியிலுள்ள சதிகள் குறித்து விரிவாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலத்தை இந்திய நடுவண் அரசு மேலும் ஓர் ஆண்டுக்கு நீடித்தது. (தமிழ்மிரர்)
- ஆகத்து 13:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசாவில் வில் இருந்து இசுரேலுக்கு எறிகணைகள் ஏவப்பட்டன. அதில் ஒன்று எகிப்தில் வீழ்ந்ததில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது. (டெய்லி மெயில்)
- துருக்கிய எல்லையில் அலெப்போ நகருக்கருலில் எட்டு கிராமங்களை இசுலாமிய தேசப் போராளிகள் கைப்பற்றியதில் 52 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- பிரேசிலில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஆளுனரும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுபவருமான எதுவார்தோ காம்பொஸ் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஆகத்து 12:
- சீனாவில் குடியுரிமை அற்றோருக்கு விற்கப்படும் இயற்கை எரிவளியின் விலையை அந்நாடு அதிகரித்தது. (டாவ் ஜோன்சு)
- எக்குவடோர் தலைநகரில் 5.1 நிலநடுக்கம் இடம்பெற்றதில் 4 பேர் கொல்லப்பட்டனர். (ஏஏபி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த்தாக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது. (ராய்ட்டர்சு)
- எசுப்பானியாவில் மதகுரு ஒருவர் எபோலா நோய்த் தாக்கத்தால் இறந்தார். (சீஎனென்)
- அர்த்தூர் அவிலா, மஞ்சுள் பார்கவா, மார்ட்டின் ஹைரர், மரியாம் மீர்சாக்கானி ஆகியோருக்கு கணிதத்துக்கான ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. நேச்சர்
- ஆகத்து 11:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல், ஹமாஸ் இற்கிடையே 72-மணி நேர போர் நிறுத்தம் ஆரம்பபானது. (பிபிசி)
- உக்ரைனிய அரசுப் படைகள் தோனெத்ஸ்க்கில் உள்ள ஒரு சிறைச்சாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியதில், 106 கைதிகள் தப்பியோடினர். ஒருவர் கொல்லப்பட்டார். (பிபிசி)
- ஆகத்து 10:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேல், ஹமாஸ் புதிய 72-மணி நேர போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். (பிபிசி) (ராய்ட்டர்சு)
- இசுலாமிய தேசப் போராளிகளைத் தோற்கடிக்க பன்னாட்டு சமூகம் உதவ வேண்டுமென ஈராக்கிய குர்திஸ்தான் அரசுத்தலைவர் மசூட் பர்சானி வேண்டுகோள் விடுத்தார். (பிபிசி)
- ஈரானில் தெஹ்ரான் மெக்ரபாத் விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர். (சிட்னி மோர்னிங் எரால்டு)
- ஆகத்து 9:
- அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகர் காவல்துறையினர் ஒரு ஆயுதமற்ற 18 வயது இளைஞனை சுட்டுக்கொன்றதின் காரணமாக மூன்று நாட்களாக எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது (அல்-ஜசீரா)
- உக்ரைனியப் படையினர் கிராஸ்னிய் லூச் என்ற நகரைக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றினர் (பிபிசி)
- உக்ரைனியப் படையினர் தோனெத்ஸ்க் நகரைச் சுற்றி வளைத்தை அடுத்து உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்துக்குக் வேண்டுகோள் விடுத்தனர். (ரால்ப்லர்)
- திபெத்தில் பேருந்து ஒன்று ஆறு ஒன்றில் விழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர். (பொக்சு நியூஸ்)
- விடுதலை மற்றும் நீதிக் கட்சி என்ற முசுலிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியை எகிப்திய நீதிமன்றம் கலைத்தது. (பிபிசி)
- ஆகத்து 8:
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: 72 மணிநேர போர்நிறுத்தத்தை நீடிக்க விரும்பாத நிலையில், ஹமாஸ் இயக்கத்தினர் இசுரேல் ம் ஈது 60 எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இசுரேல் பதிலுக்கு வான் தாக்குதலைத் தொடர்ந்தது. (ஏபி),(சீஎனென்)
- அமெரிக்க எப்/ஏ-18 போர்விமானங்கள் ஈராக்கின் இசுலாமிய தேசப் போராளிகளின் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தின. (சீஎனென்)
- யாசிடி இனத்தவர்கள் மீது இசுலாமிய தேசப் போராளிகள் தாக்குதல் நடத்துவது ஒரு இனப்படுகொலை என ஐநா அறிவித்துள்ளது. (கிறிஸ்தியன் சயன்சு மொனிட்டர்)
- உக்ரைன் பிரச்சினை தொடர்பாக ஆத்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகளின் உணவுப் பொருட்களுக்கு உருசியா இறக்குமதித் தடையை விதித்தது. (யாகூ)
- இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஷேர்சிங் ரானா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (தமிழ்மிரர்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா வைரசு பரவல் ஒரு உலகளாவிய அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (ஏபி)
- எபோலா நோய்ப் பரவலை அடுத்து நைஜீரியா அவசர நிலையைப் பிறப்பித்தது. (ஏபிசி)
- ஆகத்து 7:
- 2014 வட ஈராக் தாக்குதல்: வடக்கு ஈராக்கில் அசிரியக் கிறித்தவர்கள் வாழும் பாரம்பரிய இடங்கள் பலவற்றை இசுலாமிய தேசப் போராளிகள் கைப்பற்றினர். ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். (பிபிசி)
- 2014 மேற்கு ஆபிரிக்கா எபோலா திடீர்ப் பரவல்: லைபீரியாவில் இறந்தோர் எண்ணிக்கை 282 ஐத் தாண்டியதை அடுத்து அங்கு அவசரகால நிலையை அரசுத்தலைவர் எலன் ஜான்சன் சர்லீஃப் அறிவித்தார். (பிபிசி)
- கம்போடியாவில் 1975-79 காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கெமர் ரூச் தலைவர்கள் கியூ சாம்பான், நுவான் சியா ஆகியோருக்கு ஐநா-ஆதரவு குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. (ஏபி)
- ஆகத்து 6:
- இசுலாமிய தேசப் போராளிகளுக்கும் ஈராக்கின் வடக்கே குர்திய சிறுபான்மையினத்தவருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. (ராய்ட்டர்சு)
- ஈராக்கிய வான் படையினர் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- 2014 யுன்னான் நிலநடுக்கம்: சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்தது. (சீஎனென்)
- எபோலா வைரசின் தாக்கத்தில் சியேரா லியோனி சென்று திரும்பிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மேற்கு ஆப்பிரிக்காவில் மொத்தம் 932 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. (சீஎனென்)
- இலங்கையில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல்கள் செப்டம்பர் 20 இல் இடம்பெறும் என தேர்தல் ஆணியாளர் அறிவித்தார். (தினகரன்)
- ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. வால்வெள்ளி ஒன்றின் சுற்றுப்பாதையை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும். (பிபிசி)
- ஆகத்து 5:
- எபோலா தீநுண்ம நோயினால் கடுமையாக பாதித்துள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு உலக வங்கி US$200 மில்லியன் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.(அல் ஜசீரா)
- ஈழப்போர்: இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்தது. (தமிழ்வின்), (ஐநா)
- ஆப்கானித்தானில் ஆப்கானியப் படைவீரர் ஒருவர் சுட்டதில் அமெரிக்க மேஜர் ஜெனரல் அரல்ட் கிரீன் என்பவர் கொல்லப்பட்டார். செருமனிய இராணுவத் தளபதி உட்பட 15 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். (சீஎனென்)
- தோனெத்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள மரின்கா நகரை உக்ரைனியப் படையினர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீளக் கைப்பற்றினர். (ஏபி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: எகிப்திய மத்தியத்தத்துடன் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இசுரேலியப் படையினர் காசா கரையில் இருந்து வெளியேறினர். (ராய்ட்டர்சு)
- தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க் நகருக்கு அருகில் ஓர்க்னி நகரில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம் இடம்பெற்றதில் ஒருவர் கொல்லப்பட்டார், 15 பேர் காயமடைந்தனர். (ஏபிசி)
- சப்பானின் புகழ்பெற்ற அறிவியலாளர் யோசிக்கி சசாய் தனது குருத்தணு தொடர்பான பரிசோதனை முடிவுகள் குறித்த சர்ச்சையை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். (ராய்ட்டர்சு)
- ஆகத்து 4:
- இலங்கையில் மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார். (தமிழ்மிரர்)
- ஈழப்போர்: இலங்கையின் வடக்கே காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பில் நடத்திய கூட்டம் ஒன்றை பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தினர். (பிபிசி),(தமிழ்வின்)
- உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள தோனெத்ஸ்க் நகரில் இருந்து மக்களை வெளியேறுமாறு உக்ரைனியப் படையினர் அறிவித்தனர். (வாசிங்டன் போஸ்ட்)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காசாவில் ஐநா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதை உலகநாடுகள் கண்டித்ததை அடுத்து இசுரேல் குறுகியகாலப் போர்நிறுத்தத்தை அறிவித்தது. (ராய்ட்டர்சு) (என்பிசி)
- வங்காலதேசத்தில் பத்மா ஆற்றில் 200 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியது. (பிபிசி)
- ஆகத்து 3:
- உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தோனெத்ஸ்க் நகரை உக்ரைன் அரசுப் படைகள் சுற்றி வளைத்திருப்பதை அடுத்து கிளர்ச்சியாளர்கள் தமக்கு மேலதிக ஆயுதங்களை வழங்குமாறு உருசியாவிடம் கோரிக்கை விடுத்தனர். (கார்டியன்)
- பிரிந்து சென்ற நகோர்னோ-கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் நான்கு அசர்பைஜான் படையினர் கொல்லப்பட்டனர். (ரேடியோ லிபர்ட்டி)
- 2014 வட ஈராக் தாக்குதல்: இசுலாமிய தேசப் போராளிகள் சிஞ்சார் நகரைக் கைப்பற்றினர். (பிபிசி),(ராய்ட்டர்சு)
- இலங்கையில் சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பயிலும் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். (தமிழ்மிரர்)
- 2014 யுன்னான் நிலநடுக்கம்: சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 391 பேர் கொல்லப்பட்டனர், 1700 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- முதலாம் உலகப் போரில் பிரான்சு மீது செருமனி போரை அறிவித்த நாளின் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் பிரெஞ்சு, மற்றும் செருமனி அரசுத்தலைவர்கள் பங்குபற்றினர். (பிரான்சு24)
- ஆகத்து 2:
- இந்தியாவில் இருந்து கடல் வழியாக ஆத்திரேலியாவை நோக்கி வந்த 50 சிறுவர்கள் அடங்கிய 157 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஆத்திரேலிய அரசு நவூரு தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பியது. (தி ஆஸ்திரேலியன்), (தி கார்டியன்)
- மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தீநுண்ம நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. (பிபிசி)
- நேபாளத்தில் கத்மண்டு நகருக்கு கிழக்கே 120 கிமீ தூரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் புதையுண்டனர். குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். ஒரு கிமீ நீள அர்னிகோ ராஜ்மார்க் கணவாய் சேதமடைந்தது. (பிபிசி)
- நகோர்னோ-கரபாக் பிராந்தியத்தில் உள்ளூர் ஆர்மீனியருடனான மோதல் ஒன்றில் மேலும் ஐந்து அசர்பைஜான் படையினர் கொல்லப்பட்டனர். கடந்த சில நாட்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சீனாவின் சாங்காய் அருகில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர். (எல்லே டைம்சு)
- தமிழறிஞர் தனிநாயகம் அடிகளின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. (தமிழ்நெட்)
- ஆகத்து 1:
- கிழக்கு உக்ரைனில் இராணுவ வாகன அணி ஒன்றை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் குறைந்தது 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தோனெத்ஸ்க்கில் தன்னைத் தானே பிரதமராக அறிவித்துக் கொண்ட அலெக்சாந்தர் பரதாய் உருசியாவிற்குத் தப்பிச் சென்றதை அடுத்து மல்தோவாவைச் சேர்ந்த உருசியர் விளாதிமிர் அந்தியூஃபியெவ் தோனெத்ஸ்கின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். (பிபிசி)
- பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: காலை 08:00 மணிக்கு ஆரம்பமான 72 மணி நேர போர் நிறுத்தத்தின் போது காலை 09:30 இற்கு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் இசுரேலிய படையினர் ஒருவர் கடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டதை அடுத்து இசுரேல் போர்நிறுத்தத்தில் இருந்து விலகியது. (பிபிசி)
- எபோலா ஆட்கொல்லி நோய் பரவியதை அடுத்து லைபீரியா, சியேரா லியோனி நாடுகள் அவசரகால நிலையைப் பிறப்பித்தன. பள்ளிகள் மூடப்பட்டன. (ராய்ட்டர்சு)
- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மன்னிப்புக் கோரியது. (பிபிசி)
இறப்புகள்
தொகு- ஆகத்து 11 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
- ஆகத்து 19 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)
- ஆகத்து 20 - பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- ஆகத்து 22 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)
- ஆகத்து 24 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
- ஆகத்து 27 - விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935)
- ஆகத்து 30 - பிபன் சந்திரா, இந்திய வரலாற்றறிஞர் (பி. 1928)
- ஆகத்து 31 - சத்திராசு லட்சுமி நாராயணா, தெலுங்குத் திரைப்பட இயக்குனர், ஓவியர் (பி. 1933)
சிறப்பு நாட்கள்
தொகு- ஆகத்து 2 - பெருமிழலைக்குறும்பர் குருபூசை
- ஆகத்து 3 - ஆடிப்பெருக்கு
- ஆகத்து 3 - சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், சித்தானைக்குட்டி சுவாமிகள் குருபூசை
- ஆகத்து 6 - கலிய நாயனார், கோட்புலி நாயனார் குருபூசை
- ஆகத்து 6 - கர்த்தர் ரூபம் மாறிய நாள்
- ஆகத்து 8 - வரலட்சுமி விரதம்
- ஆகத்து 9 - ஆடித்தவசு
- ஆகத்து 10 – ஆவணி அவிட்டம்
- ஆகத்து 15 – இந்தியாவின் விடுதலை நாள்
- ஆகத்து 15 - தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்
- ஆகத்து 17 – கிருஷ்ண ஜெயந்தி
- ஆகத்து 29 – விநாயக சதுர்த்தி
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்